Posts

Showing posts with the label Happy Birthday

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கில்லி !!

Image
இதே நாள், 1971ம் ஆண்டு, New South Wales மாநகரில் ஒரு சிங்கம் பிறக்கின்றது. 4 பிள்ளைகளுள் கடைக்குட்டியாக ஒரு சிங்கம் பிறக்கின்றது. அன்று, யாருக்கும் தெரியாத செய்தி, இந்த கடைக்குட்டி சிங்கம், உலகின் தலைசிறந்த Wicket Keeper Batsmanனாக வலம் வருவான் என்று. அந்த, ஆஸ்திரேலியா நாட்டின் கடைக்குட்டி சிங்கத்தின் பெயர் தான் Adam Gilchrist . உலகில் உள்ள பல பிம்பங்களை உடைத்த வீரரே இவராவார். தன்னுடைய 25 வயது காலத்தில் தான், ஆஸ்திரேலியா நாட்டின் சர்வதேச கிரிக்கெட் அணியினுள் இடம் கிடைக்கின்றது. 37 வயது காலத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றும் விட்டார். வெறும் 12 ஆண்டு காலம் தான், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் வாழ்ந்தார். அதிலும், முதல் 2 ஆண்டுகள், அணியினுள் " உள்ளே வெளியே " ஆட்டம். Ian Healy, போன்ற ஜாம்பவானாவுக்கும் இவருக்கும் இடையே ஆரம்பகாலத்தில், பெரும் போட்டி. பின்னர், 6ம் 7ம் தளங்களில், பேட்டிங்கை மேற்கொண்டு அதிலும் சொதப்பல்கள். இவருக்கு போட்டியும் அதிகரிக்க துவங்கும் போது, ஒபரனாக பரிசோதனை. அதை, சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் ஆபத்து தான். ஆனால், பயன்படுத்திக்கொண்டு தனது...