நன்றி திந்தா !
பெங்கால் மாநிலத்தை சேர்ந்த, வேகப்பந்து வீச்சாளரான அஷோக் திந்தா அவர்கள், தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒரே செய்தி, இவர் ஒரு செயப்படு பொருள் என்பதே. சமூக வலைத்தளங்களில், Dinda Academy of Pace Bowling என்கிற ஓர் பக்கத்தை உருவாக்கி, அதில் இவரை மையமாக வைத்து அனைத்து வித கிண்டல்களும் கேலிகளும் பதிவிடப்படும். அதில் பதிவிடப்படும் கிண்டல்கள் எவ்வாறு உள்ளதெனில், திந்தா அவர்கள் ஓர் கல்லூரியை தன் கீழ் நடத்தி வருகின்றார் எனவும், அதுல உள்ள அனைத்து வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியோராய் இருப்பர் எனவும், எவரேனும் ஏதேனும் போட்டிகளில் அதிக ரன்களை வழங்கினார் என்றால், உடனடியாக அந்த ஒரு வீரரை இந்த ஒரு கல்லூரிக்குள் அனுமதி வழங்கி நுழைக்க வேண்டும் என்று பல கலாய்கள் இருக்கும். 2017ம் ஆண்டு IPL தொடரில், மும்பை அணியும் புனே அணியும், MCA மைதானத்தில் மோதிக்கொள்ளும். அப்போட்டியில், மும்பை அணியின் வீரரான ஹர்திக் பாண்டியா அவர்கள், அஷோக் திந்தா வீசும் கடைசி ஓவரை, பிரித்து விடுவார். பந்தை சிதறடிப்பார். அந்த ஒரு ஓவரில் மட்டுமே 29 ரன்கள் அடிக...