2021 England - New Zealand தொடர் !

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, 2021ம் ஆண்டில் ஓர் நெருக்கடியான அட்டவணை அமைந்துள்ளது. அந்த அட்டவணைக்கிணங்க, தற்போது இலங்கையுடன் ஓர் தொடர் விளையாடி முடித்துள்ளது. இதற்கு பின், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஒரு தொடரும் , பின்னர் இங்கிலாந்தில் ஒரு தொடரும் நடைபெறவுள்ளது. அதற்கு பின், இலங்கையுடன் ஒரு தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு தொடர் என இடைவெளியின்றி அடுக்கப்பட்டுள்ளது. இவையுடன், தற்போது நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆம், ஜூன் மாத காலகட்டத்தில், இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமோ, நடைபெறவாதோ என்கிற குழப்பத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. ஒரு வேளை, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்றால், ஐயர்லாந்து அணியையாவது டெஸ்ட் தொடரில் பங்குபெற அழைக்கலாம், என்கிற முடிவில் இருந்தது. இறுதியாக, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது என்கிற செய்தியையும், அதனால் 2 Test போட்டிகள் நடைபெறும் என்கிற செய்தியையும் இன்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்ய...