2021 IND vs ENG - பார்வையாளர்களுக்கு அனுமதி !
முன்னதாக தெரிவிக்கப்பட்டது, சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பது தான். ஆனால், நேற்று தமிழக அரசானது, ஊரடங்கை விலக்க 7ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், 50 % சதவீத பார்வையாளர்களோடு நடத்தலாம் எனும் செய்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது யாதெனில், 50 சதவீத பார்வையாளர்களுடன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தலாம் என்பது தான். ஆயினும், தமிழ்நாட்டின் மாநில கிரிக்கெட் சங்கமானது ( TNCA ), பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்த முடிவெடுத்துள்ளோம் என அறிவிப்பு வெளியிட்டது. ஆகையால், சென்னையில் நடக்கவிருந்த இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் டிக்கெட்டுகளை விற்பனையிடவில்லை. அதன் பின் தான், தமிழக மாநில அரசானது, முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், அனைத்து வெளிப்புற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்பது தான். இந்த செய்தி வெளியானவுடன், தமிழக அரசு, இந்திய கிரிக்கெட்...