SL vs ENG - இரண்டாம் Test, மூன்றாம் நாள் Review

நேத்து நாள் முடியும்போது, நான் எதிர்பார்த்தது, இன்னிக்கி நாள்ல Spinnersக்கு support அதிகமா இருக்குங்கிற விஷயம் தான். அதே நேரத்துல, Root கிட்ட இருந்து நல்ல performance எதிர்பாக்கலாம்னும் எழுதியிருந்தேன். அதே மாதிரி நெறய விஷயம் நடந்துச்சு, சில விஷயம் அதை மீறியும் நடந்துச்சு. அப்படி என்ன நடந்துச்சுன்னு இந்த blogல நாம பாக்கலாம்.

வழவழ'ன்னு பேசாம matterருக்கு வா'ன்னு கதறுற ஒவ்வொரு வாசகருக்கும், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லுறேன். முதல் விஷயம், Embuldeniyaவோட 7 wicket haul. இந்த Series'அ பொறுத்தவரைக்கும், England sideல இருந்து ஏகப்பட்ட heroes உருவானாலும், Sri Lankaவோட sideல இருந்து உருவான heroனா அது இவரு தான்.

Middle and off stump lineல pitch பண்ணி, Right Handed Batsmanனுக்கு வெளில கொண்டு வந்துட்டே இருந்தாரு. அதுக்கு ஏத்தாப்ல, ரெண்டு slip fielders set பண்ணாங்க. சில முறை, curved arm action இல்லாம, கொஞ்சம் straighterரா கொண்டு வந்தாரு. அந்த straighter angle delivery, batsmanனோட மனசுல ஏகப்பட்ட குழப்பத்தை உண்டாக்குச்சு. அந்த குழப்பம் தான், இவரோட வெற்றி !

இவருக்கு துணையா, debutant Ramesh Mendis, அசத்தலா bowl பண்ணாரு. இவங்களோட ராஜ்ஜியம் தான் பாதி நேரம் இருந்துச்சு. ஆனா, இவருக்கு சரியான tough கொடுக்குற ஒரு performanceனா அது Root'ஓட performance தான்.

Mithran IPSக்கு Siddharth Abhimanyu எப்படி பட்ட எதிரியே, அதே மாதிரி Embuldeniyaவுக்கு Root. திரும்பவும், தன்னோட sweep shots, அவரோட ஆட்டத்தையே வெளிச்சம் போட்டு காட்டுது. இதை தாண்டி, Root ஆடுன ஒவ்வொரு backfoot shots'உம் தரமா இருந்துச்சு. சரியான trigger movementடும், ஒழுங்கான technique'உம் இருந்தா போதும், ஏங்கவேணும்னாலும் போயி சம்பவம் பண்ணலாம்' ன்னு திரும்ப திரும்ப நிரூபிச்சிட்டு இருக்காரு.

வேற Level 187. என்ன ஒன்னு 200 அடிச்சியிருக்கலாம்ன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன ஏக்கம். ஆனா, இந்த hot conditionsக்கு நடுல, ஒரு நாள் முழுக்க நின்னு விளையாடுனது'லாம் ரொம்ப கஷ்டம். இவரு அவுட் ஆகும்போது கூட, அவ்ளோ exhaust ஆகி, tirednessல தான் விக்கெட்டை கொடுத்துட்டு போனாரு. 

இவருக்கு துணையா Buttler. Buttler spinners'அ எப்படி வெளுத்து வாங்குவாருன்னு நாம IPLலேயே நிறையா முறை பாத்திருப்போம். இன்னிக்கும் அதே மாதிரி ஒரு ஆட்டம் தான். என்ன ஒன்னு, அதுல வானத்தை நோக்கி ball பறக்கும். இதுல, தரையை நோக்கி நகருது. ஆனா, இவரோட ஆட்டம் ரொம்பவே நல்லா இருந்துச்சு. 

இடை தாண்டி Dom Bess'ஓட support. இதெல்லாம் தான், England teamமை இன்னும் காப்பாத்தி வெச்சுட்டு இருக்குது. இன்னிக்கி நாள்ல 339/9ன்னு முடிக்குறாங்க. ஒரு வேளை, இவங்களோட வேற ஒரு batsmanனும் score பண்ணியிருந்தா, leadஏ எடுத்திருக்கலாம். ஆனா, அனும்பவம் இல்லாதது தான், ஆட்டத்தோட தலையெழுத்தையே முடிவு செய்யுது.

     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?