SL vs ENG - முதல் Test, இரண்டாம் நாள் Review

இன்னிக்கி நாள்ல, மழை ரொம்ப அதிகமாவும் match ரொம்ப கம்மியாவும் இருந்துச்சு. மழை, இடி, மின்னல், புயல்ன்னு  எங்களை தடுக்க முடியாதுன்னு England ஒரு பக்கம் அசுரவாதம் செஞ்சுட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் சொந்த மண்ணுல, Sri Lanka மண்ணை கவ்வுறத பாக்கும்போது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு. ஒரு காலத்துல, சிங்கம் மாதிரி கர்ஜனையோட வாழ்ந்துட்டு இருந்த Sri Lanka, இப்போ தள்ளாடிட்டு இருக்காங்க.

இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spin bowlingக்கு ஏத்தாத அமஞ்சியிருக்கு. ஆனாலும், மழை பேஞ்ச காரணத்துனால, line and length perfectடா இருந்தா மட்டும் தான் spinnersகு கை கொடுக்கும். அந்த அடிப்படையில, மொத wicketடா நம்ம Bairstow, Embuldeniyaகிட்ட மாட்டுறாரு. Batsmanன நல்லா முன்னாடி வர்ற வெச்சு play பண்ண tempt பண்ணாரு. அந்த நப்பாசை, Bairstowவுக்கு எமனா அமைஞ்சுது.

அதுக்கு அடுத்து, ரூட் மற்றும் debutantடான Dan Lawrence. Root அவர்களுக்கு கடைசியா 2019ல தான் century வந்துச்சு. அதுக்கு அடுத்து போன வருஷம் முழுக்க century எதுவுமே இல்லாம தான் வெளில போனாரு. அதுவும், அந்த கடைசி century, இதே Galleல தான் அடிக்குறாரு. அங்க இருந்து, ஒரு வருஷத்துக்கு பிறகு, இன்னிக்கி இங்க century அடிக்குறாரு. 

Rootடுக்கு அவ்வளவு தான் முடிஞ்சுடுச்சு, இனிமே அவரையெல்லாம் fab 4 listல இருந்து தூக்குங்கன்னு நிறைய குறள்கள் வந்துச்சு. அது எல்லாத்துக்கும் பூட்டை போட்டு மூடிட்டாரு. இன்னிக்கி அவர் அடிச்ச century சொல்லும், Spin bowlingக எப்படி கையாளுவாருன்னு. அவரு ஆடுன ஒவ்வொரு sweep shotsஉம், தனித்துவமா தெரிஞ்சுது. 

எந்த ballளுக்கு முன்னாடி வரணும், எந்த ballளுக்கு பின்னாடி நகரனும்னு தெளிவா தெரிஞ்சு வெச்சுகிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி விளையாடிட்டு இருந்தாரு. இந்த spin friendly trackல இவர் ஆடுன ஆட்டம், வேற level. 

ஆனா, Dan Lawrence ஆடுன ஒரு game தான், ideal highlights'கான templateனே சொல்லலாம். ஏகப்பட்ட எடத்துல chance எடுத்து, down the track வந்து விளையாடுனாரு. Spinnersஅ அவரு அடிச்ச விதம், உண்மையிலேயே இவருக்கு இது தான் முதல் match'அ, இல்ல வேற nation எதுக்காவது விளையாடிட்டு அதுக்கு அப்புறம், Englandதுக்கு transfer வாங்கிட்டு வந்து விளையாடுறாரேன்னு மனசுல ஒரு சந்தேகத்தை கொடுத்தது.

செம lead எடுக்குறாங்க. Sri Lankaவை பொறுத்த வரைக்கும், Embuldeniya தவிர்த்து வேற யாரும், perfect line and lengthல bowl பண்ணல. குறிப்பா, Hasaranga தன்னோட line and lengthல ரொம்பவே தடுமாறிடு இருந்தாரு. Inconsistencyயும் Inexperienceசும், இலங்கை அணியை மொத்தமா சூறையாடிட்டு இருக்குது. இங்கிலாந்து இன்னிக்கி 320/4னு ஒரு உச்சகட்ட நிலையில இருக்காங்க. 185 runs lead ! இத்தனைக்கும், ஒரு session முழுக்க நடக்கல. 

   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?