ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

இப்பதிவில் நாம் காணவிருப்பது, இவ்வாண்டில் எந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெறும், என்பதைப்பற்றிய சில நுணுக்கங்கள் மட்டுமே. தற்போது, சையத் முஷ்டாக் அலி தொடர் நிறைவுபெறவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக விஜய் ஹசாரே தொடரை நடத்த வேண்டுமா ? அல்லது ரஞ்சி தொடர் நடத்த வேண்டுமா ? என்பதை குறித்த முடிவு எடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியமானது அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.

இந்தியாவின், பணம் புழங்கும் IPL கிரிக்கெட் தொடர், இன்னும் 2 மாத காலங்களில் துவங்கவிருக்கிறது. ஆகையால், 2 மாத காலத்திற்குள், இன்னும் ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடத்திவிடலாம் என்பதில் திட்டவட்டமாக உள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம். அதில், எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்விக்கு, நிறைய மாநில கிரிக்கெட் சங்கங்கள், விஜய் ஹசாரே தொடருக்காக வாக்களித்துள்ளது.


ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கமானது, ரஞ்சி தொடரை நடத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதற்கு அவர்கள் தெரிவித்த முக்கிய காரணம், "முன்பே, வெள்ளை பந்து தொடரான சையடா முஷ்டாக் அலி தொடர் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும், வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சிவப்பு பந்து கிரிக்கெட் தொடரான, ரஞ்சிக்கு நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்" என்பதே ஆகும்.

மும்பை மாநில கிரிக்கெட் சங்கமானது தெரிவித்தது, "குறுகிய காலகட்டத்திற்குள், ரஞ்சி தொடரை நடத்துதல் என்பது சாத்தியமற்றது. ஆனால், விஜய் ஹசாரே தொடரை நடத்திவிடலாம், ஆகையால், விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும், என்பதே எங்கள் விருப்பம்".

இவ்வாறு, பல மாநில கிரிக்கெட் சங்கங்கள், தங்களின் கருத்துக்களை தெரிவித்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி அவர்கள், ரஞ்சி தொடரை நடத்துவதில், மிகவும் பிடிவாதத்துடன் இருக்கின்றார்.

தற்போது, சௌரவ் கங்குலி அவர்கள், இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகியதால், அவரின் இடத்தில், ஜெயதேவ் ஷா தான், முழு பொறுப்பேற்று செயல்படுகிறார். 

இதனை குறித்த தகவல், மேலும் சில நாட்களுள் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.   


Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood