NZ vs PAK - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Scorecard'அ பார்க்கும்போது இதெல்லாம் ஒரு match'அ னு தோணும். ஆனா, இந்த match'அ Live'அ பாத்தவங்களுக்கு தான் தெரியும், இந்த வருஷத்தோட one of the best test matchesல இதுவும் ஒன்னுன்னு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், இந்த matchல பாக்கிஸ்தான் சீறிக்கிட்டு போராடுன விதம் தான். Target 373, score 71/3னு நாலாவது நாள்ல முடிக்கிற பாக்கிஸ்தானுக்கு ஜெயிக்க வாய்ப்பு இல்லன்னு நேத்து எல்லாரும் நெனச்சங்க. இன்னிக்கி என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துலயே அசார் அலி அவுட் ஆகுறாரு. ஆத்தி, நியூஸிலாந்துக்கு தான் இந்த test matchன்னு நெனைக்குற அளவுக்கு நெலமை இருந்துச்சு. 75/4ன்னு score, தேவை இன்னும் 298 ரன்கள், வாய்ப்பு கிடையாதுன்னு நெனைக்கும்போது, ஒரு ஒளி வருது. அந்த ஒளியும், நம்பிக்கையும் Fawad Alamமோட batல இருந்து வருது. கூடவே, supportiveவா, Resiliant Rizwan நின்னு ஆடுறாரு. இங்கிலாந்து seriesல இருந்து இப்போ வரைக்கும் consistentடா விளையாடிட்டு வர்ற Rizwan, இந்த inningsலயும் நின்னு போராடுறாரு. இவங்க ரெண்டு பேரோட ஆட்டத்தை தடுத்து நிறுத்த...