NZ vs PAK - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Scorecard'அ பார்க்கும்போது இதெல்லாம் ஒரு match'அ னு தோணும். ஆனா, இந்த match'அ Live'அ பாத்தவங்களுக்கு தான் தெரியும், இந்த வருஷத்தோட one of the best test matchesல இதுவும் ஒன்னுன்னு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், இந்த matchல பாக்கிஸ்தான் சீறிக்கிட்டு போராடுன விதம் தான். Target 373, score 71/3னு நாலாவது நாள்ல முடிக்கிற பாக்கிஸ்தானுக்கு ஜெயிக்க வாய்ப்பு இல்லன்னு நேத்து எல்லாரும் நெனச்சங்க. இன்னிக்கி என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். 

இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துலயே அசார் அலி அவுட் ஆகுறாரு. ஆத்தி, நியூஸிலாந்துக்கு தான் இந்த test matchன்னு நெனைக்குற அளவுக்கு நெலமை இருந்துச்சு. 75/4ன்னு score, தேவை இன்னும் 298 ரன்கள், வாய்ப்பு கிடையாதுன்னு நெனைக்கும்போது, ஒரு ஒளி வருது.

அந்த ஒளியும், நம்பிக்கையும் Fawad Alamமோட batல இருந்து வருது. கூடவே, supportiveவா, Resiliant Rizwan நின்னு ஆடுறாரு. இங்கிலாந்து seriesல இருந்து இப்போ வரைக்கும் consistentடா விளையாடிட்டு வர்ற Rizwan, இந்த inningsலயும் நின்னு போராடுறாரு. இவங்க ரெண்டு பேரோட ஆட்டத்தை தடுத்து நிறுத்தவே ரொம்ப கஷ்டமா இருந்துது.

நாள்ளோட ஆரம்பத்துல விளையாட ஆரம்பிச்ச இவங்க, இன்னிக்கி நாள் முடியுறதுக்கு மிச்சம் 25 overs இருக்குங்கிற நிலைமை வரைக்கும் விளையாடிட்டு இருந்தாங்க. ஒரு பக்கம் இவங்க இப்படி ஆடுறாங்கன்னா, இன்னொரு பக்கம் Neil Wagner, அடிபட்ட கால் வெச்சுட்டு overs போட்டுட்டே இருக்காரு. அவங்கவங்க நாட்டுக்கு அவங்கவங்களோட விஸ்வாசத்தை நிரூபிச்சிட்டே இருந்தாங்க.

ரொம்பவே போராட்டமான நாள்னு சொல்லலாம். 11 வருஷம் கழிச்சு, Fawad Alam தன்னோட ரெண்டாவது சதத்தை test cricketல பூர்த்தி செய்யுறாரு. 11 வருஷம் இடைவெளிக்கு அப்புறம் வாய்ப்பு கெடச்சு, அதுல century அடிக்கிறதுலாம் நிஜத்துக்கும் அப்பாற்பட்டது. Rizwan, மறுபடியும் ஒரு half century post பண்ணுறாரு. 

அப்போ, நியூஸிலாந்து ஜெயிக்கவே இல்லையா ? நியூஸிலாந்து தான் ஜெயிச்சாங்க. 75/4ங்கிற scoreல இருந்து 240/4ங்கிற ஒரு scoreருக்கு கொண்டு வந்து நிப்பாட்டிட்டாங்க. இங்க இருந்து இன்னும் 133 runs தான் தேவைன்னு நினைக்கும்போது, சரியான நேரத்துல உள்ள வர்றாரு Jamieson

முதல்ல மாட்டுனது Rizwan. Jamiesonனோட height and bounce'அ perfectடா use பண்ணி, நிறைய எடத்துல short balls போட்டுட்டு இருந்தாரு. திடீர்னு ஒரு ball, உள்ள கொண்டு வந்தாரு. அந்த sudden surprise deliveryல மாட்டுனவரு தான் Rizwan. அதுக்கு அடுத்து போராடிட்டு இருந்த Niel Wagnerருக்கு, பெரிய தலையான Fawad Alamமோட wicket'ஏ கிடைக்குது.

இவங்க ரெண்டு பேரும் போனதுக்கு அப்புறம் பின்னாடி வந்த எல்லாரும், எப்படியாவது draw பண்ணிடணும்னு முயற்சி பண்ணாங்க. ஆனா, ஒரு proper batsman இல்லாதது, மொத்தமா முடிச்சு விட்ருச்சு. இந்த match'அ பாக்கிஸ்தான் தோத்ததுக்கு ரெண்டே காரணம் தான். 

ஒன்னு, fieldingல ஏகப்பட்ட catches கோட்டை விட்டது. முதல் inningsல, நெறைய catches விடாம விளையாடியிருந்தா ? New Zealand teamம சீனா scoreருக்கு காலி பண்ணியிருக்கலாம். அது கூடவே, ரெண்டாவது காரணம், top orderல இருந்தவங்க யாரும் ஒழுங்கா perform பண்ணல. Middle and lower middle orderல அவ்ளோ அற்புதமான performances, நம்மளால பாக்க முடிஞ்சுது. அதுவே top orderனு வரும்போது, சருக்குது. இந்த பிரச்சனை இங்கிலாந்து seriesல இருந்தே இருக்குது. 

இந்த விஷயங்கள்ல திருத்துன மட்டும் தான், இனிமே விளையாடுற எல்லா test matches'ல இருந்து நல்ல results பாக்க முடியும். ஆனா, போராடுற குணம், அது தான் இன்னும் Pakistan teamம வாழ வெச்சுட்டு இருக்கு. 

   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?