Posts

Showing posts with the label December 2020

NZ vs PAK - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Image
Scorecard'அ பார்க்கும்போது இதெல்லாம் ஒரு match'அ னு தோணும். ஆனா, இந்த match'அ Live'அ பாத்தவங்களுக்கு தான் தெரியும், இந்த வருஷத்தோட one of the best test matchesல இதுவும் ஒன்னுன்னு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், இந்த matchல பாக்கிஸ்தான் சீறிக்கிட்டு போராடுன விதம் தான். Target 373, score 71/3னு நாலாவது நாள்ல முடிக்கிற பாக்கிஸ்தானுக்கு ஜெயிக்க வாய்ப்பு இல்லன்னு நேத்து எல்லாரும் நெனச்சங்க. இன்னிக்கி என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம்.  இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துலயே அசார் அலி அவுட் ஆகுறாரு. ஆத்தி, நியூஸிலாந்துக்கு தான் இந்த test matchன்னு நெனைக்குற அளவுக்கு நெலமை இருந்துச்சு. 75/4ன்னு score, தேவை இன்னும் 298 ரன்கள், வாய்ப்பு கிடையாதுன்னு நெனைக்கும்போது, ஒரு ஒளி வருது. அந்த ஒளியும், நம்பிக்கையும் Fawad Alamமோட batல இருந்து வருது. கூடவே, supportiveவா, Resiliant Rizwan நின்னு ஆடுறாரு. இங்கிலாந்து seriesல இருந்து இப்போ வரைக்கும் consistentடா விளையாடிட்டு வர்ற Rizwan, இந்த inningsலயும் நின்னு போராடுறாரு. இவங்க ரெண்டு பேரோட ஆட்டத்தை தடுத்து நிறுத்த...

NZ vs PAK - முதல் Test, நான்காம் நாள் Review

Image
நேத்து, எப்படியோ பாக்கிஸ்தான் team போராடி, follow on avoid பண்ணிட்டாங்க. ஆனாலும், drawங்கிற ஒரு விஷயம் ரொம்பவே கஷ்டமா அமைஞ்சிருக்கு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், NZ எடுத்த lead. அந்த ஒரு lead காரணமா, maybe New Zealand ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதையும் மீறி, ஒரு வேளை பாக்கிஸ்தான் draw'ஆவது பண்ணிட்டாங்கன்னா, இருக்குறதுலயே ரொம்ப பெரிய விஷயமா இருக்கும். இன்னிக்கி, நியூஸிலாந்து திரும்ப அவங்களோட second inningsகு உள்ள வந்து bat பன்றாங்க. ஆரம்பத்துல, முஹம்மத் அப்பாஸ் அசத்தலா bowl பண்ணாரு. Pitchல uneven bounce இருந்துட்டு இருந்துச்சு. அது காரணமா, அவசரப்பட்டு batடை எங்கயும் விட்டுட கூடாதுன்னு ரொம்பவே கண்ணியமா இருந்தாங்க.  ஒரு எடத்துல கூட, நியூஸிலாந்துக்கு விட்டு கொடுக்க கூடாதுனு, பாகிஸ்தானும் போராடுறாங்க. ஆனா, எழுச்சி நியூஸிலாந்துக்கு தான். கொஞ்சம் நேரம் நினதுக்கு அப்புறம், எங்க எப்படி bounce ஆகுதுங்கிற விஷயத்தை புரிஞ்சிகிட்டு, விளையாடுறாங்க.  இடையில கொஞ்சம் அவசரம் இருந்தாலும், 180/5னு ஒரு score அடிச்சு declare பன்றாங்க. பாகிஸ்தானுக்கு second innings target, 373 runs. முன்னாடி ...

NZ vs PAK - முதல் test, இரண்டாம் நாள் Review

Image
நேத்திய நாள பொறுத்த வரைக்கும், 87 overs முடிஞ்சு அதுல Kane Williamson 94 runsகு not outல இருந்தாரு. நியூஸிலாந்து teamமும் மோசமான startகு அப்புறம், ரொம்பவே அருமையா recover ஆகி 223/3னு நல்ல நிலைமையில நின்னாங்க. இன்னிக்கி Kane Williamson hundred அடிச்சாரா ? யாருக்கு சாதகமா இன்னிக்கி நாள் அமைஞ்சுதுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், வழக்கம் போல tensionனே ஆவாமா, calmமா தன்னோட hundredட reach பண்ணுறாரு நம்ம Kane Williamson. தன்னோட 23வது சதம் இது. Hundred அடிச்சது மட்டும் இல்லாம இன்னிக்கி இவருகிட்ட இருந்து நிறைய cover drives பார்க்க முடிஞ்சுது. Pakistan bowlersகு சில எடத்துல வழுக்கிட்டு போச்சு. அப்போ line miss ஆன ஒவ்வொரு ballலயும் coversல பொலந்தாரு.  ஆனாலும், அவருகிட்ட இருக்குற ஒரு பிரச்சனை, milestones reach பண்ணதுக்கு அப்புறம் accelerate பண்ணுறது. இன்னிக்கி எல்லா ballலயும் அடிக்க போனாரு. அதுல ஓரளவுக்கு success பார்த்தாலும், West Indiesகு எதிரா அடிச்ச 251க்கு equalல இங்க அடிக்க முடியாம போவுது. 129 runsகு out ஆகுறாரு.  Henry Nicholls ஒரு decent fi...

NZ vs PAK - முதல் Test, முதலாம் நாள் Review

Image
West Indiesக்கு எதிரா ஒரு successful'ஆன series'அ முடிச்சதும் அப்புறம், இப்போ Asian team'ஆன பாகிஸ்தான் கூட மோதுறாங்க. T20 seriesல , ரெண்டு match நியூஸிலாந்தும் ஒரு match பாகிஸ்தானும் ஜெயிக்குறாங்க. இந்த நிலைமையில, டெஸ்ட் கிரிக்கெட்லயாவது, நாம நம்மளோட முத்திரையை பாதிக்கணும்னு மும்முரமா இருந்தாங்க பாக்கிஸ்தான். ஆனா, நியூஸிலாந்து ஒன்னும் சளச்சவங்க கிடையாதே. 0.09 pointsல No.1 Test Rankingக miss பண்ணியிருக்காங்க. கிரிக்கெட் வரலாற்றுலயே முதல் முறையா, NZ team test cricketல No.1 position அடையப்போறாங்க. அவ்வளவு assaultடாவா விட்ருவாங்க. என்ன நடந்துச்சுன்னு இந்த Blogல நாம பார்க்கலாம். Mount Maunganuiல இருக்குற Bay Oval Stadiumல தான் இந்த match நடக்குது. Toss ஜெயிக்கிற Pakistan team முதல்ல fielding choose பன்றாங்க. Decision மட்டும் எடுத்தா பத்தாது, அதை properரா executeடும் பண்ணனும். அந்த வகையில, ஓரளவுக்கு correctடான வேலைய செஞ்சிருக்காங்க பாகிஸ்தான். முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளேயே, நியூஸிலாந்து team openerகளான Tom Latham மற்றும் Tom Blundellல கொக்கி போட்டு தூக்குறாங்க.  அதுக்கு ஒரு முக்...

BCCIன் அறிவிப்புகள்

Image
இன்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தை சார்ந்த நபர்கள் அனைவரும் இணைந்து, 89வது ஆண்டு கால கலந்துரையாடலில் சந்தித்தது. இதன் குறிக்கோள் யாதெனில், 2021ம் ஆண்டின் IPLதொடரை குறித்த ஒரு ஒளிவெளிச்சம், இந்திய சர்வதேச அணியின் தேர்வாளர்களை குறித்த ஓர் செய்தி மற்றும் 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், எந்தந்த மாநகரங்களில் போட்டி நடைபெறும், என்பதை பற்றியும் ஒரு செய்தி. இதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம்.  இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு முன்பாகவே, பலர் குறிப்பிட்டது 2022ம் ஆண்டில் தான், 10 அணிகளைக்கொண்ட IPL தொடர் நடைபெறும் எனவும், இவ்வாண்டில் குறுகிய காலத்திற்குள் 2 அணிகளுக்கான ஏலத்தை நடத்தி, பின்னர் சீட்டுக்கட்டைப்போன்று மொத்தமாக ஏலம் வைப்பது சாத்தியமற்றது. ஆகையால், இவ்வாண்டின் IPL வழக்கத்தைப்போன்று 8 அணிகளைக்கொண்டு தான் நடைபெறும். ஆனால், 2022ம் ஆண்டில், ஆணித்தரமாக இரு அணிகள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது  இரண்டாம் தகவலானது, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்களாக சேத்தன் ஷர்மா, அபே குருவில்லா மற்றும் டெபாஷிஷ் மோஹன்ட்டி. ம...

2020/21 Syed Mushtaq Ali Trophy - TN Squad செய்திகள்

Image
இவ்வாண்டின், Syed Mushtaq Ali Trophy தொடர், வருகின்ற ஜனவரி மாதம், 10ம் தேதியன்று துவக்கம் பெற்று 31ம் தேதியன்று நிறைவு பெரும். இத்தொடரை நடத்த 6 மாநகரங்களை தேர்வு செய்தார்கள். அவற்றை தொடர்ந்து, இவ்வாண்டின் சார்பாக வேறு எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவாது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, இத்தொடரில் பங்குபெறவிருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள்.  6 குழுவாக பிரிக்கப்பட்ட அணிகளில், Elite Group B எனும் குழுவை சேர்ந்த அணியாக தமிழ்நாடு களமிறங்கவிருக்கும் நிலையில், இவர்களுடைய அனைத்து போட்டிகளும், கொல்கத்தாவில் உள்ள Eden Garden மைதானத்தில் நடைபெறும். சமீபத்தில் வெளியான தகவல் யாதெனில், தமிழக வீரரான முரளி விஜய் அவர்கள், தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார். அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு அணியின், வேகப்பந்து வீச்சாளரான K Vignesh அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விளக்கியுள்ளார் K Vignesh அவர்களுக்கு மாற்றாக இளம் வீரரான R S Jaganath Srinivas அவர்களை நியமித்துள்ளார்கள். இம்முறை, ரவிச்சந்திரன் அஷ்வின் , நடராஜன...

Sri Lankan Test Squad for South Africa and England Series

Image
Sri Lankan cricket team has announced their test squad for South Africa and England Test Series. The test matches to be played in this series will amount to the ICC World Test Championship points, which is currently ongoing. Facing South Africa first, at away, will be a challenge, as the One Day Series between England and South Africa at South Africa have been cancelled due to the sudden outbreak of COVID-19 among the players of both the nations.  Even though these things prick them, Sri Lanka have confirmed that the tour will commence as per the schedule. Adding sugar to the injury, recently there were 10 domestic South African cricketers from which few will be featuring in this tour, have been tested COVID Positive. Replacements have been announced and also Sri Lanka has flew to South Africa to play two Tests. After these two tests, they will be facing England in home. Again only for two tests which has been scheduled to take place on January 14-18 and January 22-26 respective...

NZ Squad for PAK Series - 2020/21

Image
After winning the against West Indies in home, they are set to face Pakistan in their home, and once again for 3 T20I games and 2 Test matches. Pakistan have already announced a 32 member squad and they were expectations on the announcement of Kiwis Squad. Now, they have announced different squads for 3 T20Is. Still, Test squad is yet to be announced. There are surprises and shocks in the changes announced from these squads. In this squad Kane Williamson, Tim Southee, Trent Boult, Kyle Jamieson and Daryl Mitchell will be featuring only in the second and third T20I games scheduled to be played at December 20 and 22th in Hamilton and Napier Respectively. So, who will lead NZ in the first T20I ? It is Mitchell Santner. He was actually planned to lead NZ in the third T20I against West Indies. But, that game unfortunately got abandoned due to rain. So, the first T20I against Pakistan will be the first match for Mitchell Santner as a captain of NZ.  Ferguson has been ruled due to bone st...

NZ vs WI - 2ம் Test, நான்காம் நாள், இறுதி சடங்கு

Image
நேத்து முடியும்போது WI team, 65.4 overs முடிஞ்ச நேரத்துல, 244/6னு ஒரு நிலைமையில இருந்தாங்க. அவங்களுக்கு இன்னும் 85 runsகும் மேல அடிச்சா New Zealand திரும்ப 2வது innings விளையாட வருவாங்க. ஆனா அது எதுவும் நடக்கல. இன்னிக்கி 13.3 oversலேயே, மொத்தமா முடிச்சு parcel பண்ணி அனுப்பிட்டாங்க. NZ teamம second innings ஆட விடாம தடுத்தது வெறும் 11 runs. இந்த 4th dayல என்ன நடந்துச்சுனு இந்த review postல நாம பார்க்கலாம்.  என்ன தான் 14 oversகுள்ளேயே இன்னிக்கி நாள் முடிஞ்சாலும், இந்த 14 oversல ஏகப்பட்ட drama நடந்துச்சு. அதே மாதிரி என்ன தான் West Indies தோத்தாலும், அவங்களுக்கு ஏகப்பட்ட positives'ஓட வெளில போவாங்க. அதே நேரத்துல New Zealandகு ஜெயிச்சாலும், இப்போதைக்கு வேற ஒரு விஷயத்துல ஒரு சின்ன ஏமாற்றம் தான்.  இன்னிக்கி நாள பொறுத்தவரைக்கும், NZ bowlerகளான Southee மற்றும் Boult , outside off stumpல pitch பண்ணி, உள்ள வெளிய கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இதுல எந்த endல இருந்து bowl பண்றாங்களோ, அங்க இருந்து acrossல batsmanனுக்கு move பண்ணிகிட்டே இருக்க, இந்த ஒரு strategy நல்ல விளையாடிட்டு இருந...

January 10லிருந்து Syed Mushtaq Ali கோப்பை

Image
இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் தொடரான, Syed Mushtaq Ali கோப்பை தொடர், ஜனவரி 10ம் தேதியிலிருந்து துவக்கம் பெரும் எனவும் ரஞ்சி கோப்பை தொடர் இல்லாமையே இவ்வாண்டு நிறைவு பெரும் எனவும் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏன், இவ்வாறு ஓர் பாகுபாடு என இப்பதிவில் நாம் படித்து வருவோம். கொரோனா நோய் பாதிப்பின் காரணத்தினால், செப்டம்பர் மாத காலகட்டத்திலேயே இவ்வாண்டின் Vijay Hazare கோப்பை மற்றும் Duleep கோப்பை தொடர்கள் நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Ranji கோப்பை மற்றும் Syed Mushtaq Ali கோப்பை ஆகிய இரு தொடர்கள், இவ்வாண்டு டிசம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறும் என பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும், அதைப்பற்றி BCCIயின் தரப்பிலிருந்து எவ்வித அறிக்கையும் வெளிவராத காரணத்தினால், Ranji கோப்பை நடைபெறுவதில் மேலும் பல சந்தேகங்கள் இருந்தன. இந்திய கிரிக்கெட் வாரியமும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினர். அந்த கடிதத்தில், எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடைபெற செயல்படலாம் என கேள்வி எழுப்பியபோது, பெரும்பாலானோர் Syed Mushtaq Ali தொடரை நடத்தலாம் என கர...

NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள் Review

Image
நேத்து, நியூஸிலாந்து team 294/6னு ரொம்ப strong'ஆன நிலைமையில வந்து நிக்குறாங்க. இங்க இருந்து 350க்கும் மேல அடிச்சாலே, ரொம்ப சந்தோச படுவாங்க. அதே நேரத்துல, பலமா அடிவாங்குன West Indies, மீண்டு வரணும்னு ஆசை படுவாங்க. இதுல யாரோட ஆசை நிறைவேறுச்சு, இந்த ரெண்டாவது நாள் யாருக்கு சாதகமா போச்சுன்னு இந்த Reviewல நாம பார்க்க போறோம். இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, Henry Nichols 117க்கு not outல இருந்தாரு. இன்னொரு பக்கம், Jamieson உள்ள இருக்க, வீசுன முதல் ballல இருந்தே runs நல்ல வேகமா வர்ற ஆரம்பிச்சுது. நேத்து போலவே, இன்னிக்கும் West Indies team நெறய catches drop பன்றாங்க. Batsmanகளுக்கு angle create பண்ணி உள்ள கொண்டு வந்தது, Jamieson மற்றும் Southeeயோட wicketடுகள காவு வாங்குச்சு, 359/8னு ஒரு நெலமைல இருக்காங்க நியூஸிலாந்து.  இங்க இருந்து, 370குள்ள நியூஸிலாந்து teamமையே நாம சுருட்டிட்டோம்னா, நமக்கு battingல ஒரு பெரிய positivity கிடைக்கும்னு நெனச்சாங்க. கட்டுன கனவு கோட்டை எல்லாத்தையும் இடிச்சு தள்ள வேண்டிய நெலமை வந்துச்சு. Neil Wagner battingகு வர்ற முதல் ballல இருந்தே அதிரடியா ஆட ஆரம்பிச்சுட்டார...

NZ vs WI - இரண்டாவது டெஸ்ட், முதல் நாள் Review

Image
முதல் டெஸ்ட் match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson ஆடுன கதகளி ஆட்டம், மொத்த West Indies Teamமயும் ஊதி தள்ளிருச்சு. கூடவே, Paceகு support பண்ணுற wicketல நின்னு சமாளிக்க கூட முடில. அந்த டெஸ்ட்டுக்கு அப்புறம், இன்னிக்கி ரெண்டாவது டெஸ்ட் match ஆரம்பிக்குது. இந்த test match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson அவர்கள் அப்பா ஆகப்போகுற காரணத்துனால, வெளியேருறாரு. அவருக்கு பதிலா Tom Latham தான் Captainனா பொறுப்பு ஏத்துக்குறாரு. போன matchல இருந்த conditions'அயே சமாளிக்க முடியாம வெளில போன West Indies teamனால இந்த Windy Wellington wicketட சமாளிக்க முடியுமா ? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியணும்னா நாம எல்லாரும் 5 நாள் காத்திருக்க வேண்டும். முதல் நாள பொறுத்த வரைக்கும், West Indies team toss'அ ஜெயிச்சு முதல்ல fielding choose பன்றாங்க. Wellingtonல முதல் ரெண்டு நாள், நல்ல காத்து இருக்கும். Bowlerகளுக்கு ஒரு கரி விருந்து மாதிரி. இந்த trackல உள்ள எறங்குற New Zealand batsmanகளுக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுது. Shannon Gabriel பந்தை நல்லா batsmanகளுக்கு உள்ள கொண்டு வந்து...

2021 இங்கிலாந்து - இந்தியா தொடர் செய்திகள் !!

Image
இவ்வாண்டு, செப்டம்பர் மாதகாலத்தில், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கவிருந்த கிரிக்கெட் தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், 2021ம் அடுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இத்தொடர், நடைபெறுமா பெறாதா ?? என்கிற குழப்பங்களுடன் பலர் காத்திருக்க, " கண்டிப்பாக நடைபெறும் " என இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சை கோடி காட்டியுள்ளது. எப்போது நடைபெறும், எங்கே நடைபெறும் என்கிற கேள்விகள் பிறகு வெளிவர துவங்கியது. அதற்கு தற்போது பதில் அளிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இத்தொடர் February மாதம் 3ம் தேதியன்று துவங்கி, மார்ச் மாதம் 28ம் தேதியன்று நிறைவு பெரும் என பதிவிடப்பட்டுள்ளது. இத்தொடரில், 4 டெஸ்ட் போட்டிகளும், 5 T20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் அடங்கும்.  இவற்றுள், மூன்று மைதானங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கத்தை அம்மூன்று மைதானங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளார்கள். அதோடு இணையாக, அகமதாபாத் நகரில் புதுப்பிக்கப்பட்ட, அதிக இருக்கைகளை...

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து - 2021

Image
தென் ஆஃப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, மூன்று T20 போட்டிகளில் பங்கேற்ற பின், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவிருந்த நிலையில், உறுதி செய்யப்பட்டுள்ள சில கொரோனா தொற்றுக்களின் காரணத்தினால், மீதமுள்ள போட்டிகளை முழுவதுமாக ரத்து செய்துள்ளார்கள் . அத்தொடருக்குப்பின், தற்போது  இலங்கை நாட்டுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட திட்டமிட்டுள்ளது. தென் ஆஃப்பிரிக்காவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள், இலங்கையில் ஏற்படாது என்பதற்கான வாய்ப்புகள் யாது ? என வினவினால், அதற்கான பதில் தற்போது நடைபெற்று வருகின்ற Lanka Premier League எனும் அவர்கள் நாட்டினை சேர்ந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரே ஆகும். வெற்றிகரமாக, Hambantotaவில் நடைபெற்று வருகின்ற, இத்தொடர் தான் அத்தாச்சி. ஆதலால், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரும், தென் ஆஃப்பிரிக்கா - பாக்கிஸ்தான் தொடரைப்போன்று, ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தொடரில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகள். அதனைக்கடந்து, மற்ற Formatடுகளில் உள்ள போட்டிகள் ஏதும் நடத்த திட்டமிடாதது, சற்றுவருத்தமளிக்கிறது. இருப்பினு...

South Africa tour of Pakistan - 2021 !!

Image
As in the previous post about Pakistan Cricket, I have mentioned that, teams like England, South Africa, New Zealand and West Indies, in which, England's tour of Pakistan has been confirmed . After the confirmation of England tour of Pakistan, now South Africa have also confirmed that they would be touring Pakistan for a 2 match test and 3 match T20I series, in the mid of January to mid of February, meaning exactly a month. After a home series against England, getting abandoned due to outbreak of COVID cases in both the teams, South African team is yet to play ODIs and haven't registered even a single point in ICC ODI Super League. Even this tour, didn't contain a single One Day game in it, but still this tour has some games, which might help them in ICC World Test Championship .  But for Pakistan fans, this is something serious thing, for which they need to celebrate, as almost a decade, International cricket is returning to Pakistan. Before these announcements, only Sri ...

பார்த்திவ் படேல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் !!

Image
 90க்களில் பிறந்த குழந்தைகளுக்கும், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இவரை நன்கு தெரிந்திருக்கும். 17 வயது காலகட்டத்தில், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட Wicket Keeper Batsman தான், பார்த்திவ் படேல். டெண்டுல்கர் , பியூஷ் சாவ்லா , லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில், மிகவும் சிறு வயதில் களமிறங்கும் கிரிக்கெட் வீரரே இவர் ஆவார்.  டீனேஜ் பருவம் முடிவதற்குள்ளேயே களமிறங்கிய பெருமை இருந்தாலும், மறுபுறத்தில் உள்ள Wicket Keeperகளின் ஆதிக்கம், இவரை இரண்டாம் அளந்து மூன்றாம் கட்ட தேர்வாகவே வைத்தது. இந்த நிலை, தான் விளையாடிய 18 ஆண்டு கால, சர்வதேச கிரிக்கெட் முழுவதும் மாறாது இருந்தது. 2002ம் ஆண்டில், முதல் முறையாக, காயப்பட்ட அஜய் ராத்ராவுக்கு மாற்றாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக, Trent Bridge மைதானத்தில் debut செய்கிறார்.  அங்கிருந்து, 2003ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் சார்பாக இவரை தேர்வு செய்தாலும், Rahul Dravid அவர்கள் மூத்தவர் என்பதால், அவருக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டு, இவருக்கு வாய்ப்புகளும் பெரிதாக வழங்கப்படவில்...

தென் ஆஃப்ரிக்கா - இங்கிலாந்து தொடர் ரத்து !!

Image
 தற்போது, இங்கிலாந்து க்கும் தென் ஆஃப்பிரிக்கா வுக்கும், இடையே தென் ஆஃப்ரிக்கா நாட்டில் ஓர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு இருந்தது. 3 T20Iக்கள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக்கொண்ட இத்தொடரில், 3-0 என 20 ஓவர் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. அதனைத்தொடர்ந்து, ஒரு நாள் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அப்பரிசோதனையில், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு, கொரோனா நோயின் பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆம், நன்றாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் தொடரின் இடையில், இவ்வாறு பாதிப்புகள் வெளிவரும் என எவர் எதிர்பார்த்திருப்பர் ?. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரருக்கு Positive எனும் விளைவு வெளியானதால், 4ம் டிசம்பர் அன்று நடைபெறவிருந்த, முதல் ஒரு நாள் போட்டியை, 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அந்த ஒரு வீரரை தனிமைப்படுத்தப்பட்டு, மீதமுள்ளோர் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டனர்.  அவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு, 6ம் தேதியன்று நிச்சயமாக, முதல் ஒரு நாள் போட்டி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, வீரர்கள் வசித்து வந்த உணவகத்தில் உள...