இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து - 2021

தென் ஆஃப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, மூன்று T20 போட்டிகளில் பங்கேற்ற பின், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவிருந்த நிலையில், உறுதி செய்யப்பட்டுள்ள சில கொரோனா தொற்றுக்களின் காரணத்தினால், மீதமுள்ள போட்டிகளை முழுவதுமாக ரத்து செய்துள்ளார்கள். அத்தொடருக்குப்பின், தற்போது  இலங்கை நாட்டுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட திட்டமிட்டுள்ளது.

தென் ஆஃப்பிரிக்காவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள், இலங்கையில் ஏற்படாது என்பதற்கான வாய்ப்புகள் யாது ? என வினவினால், அதற்கான பதில் தற்போது நடைபெற்று வருகின்ற Lanka Premier League எனும் அவர்கள் நாட்டினை சேர்ந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரே ஆகும். வெற்றிகரமாக, Hambantotaவில் நடைபெற்று வருகின்ற, இத்தொடர் தான் அத்தாச்சி.

ஆதலால், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரும், தென் ஆஃப்பிரிக்கா - பாக்கிஸ்தான் தொடரைப்போன்று, ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தொடரில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகள். அதனைக்கடந்து, மற்ற Formatடுகளில் உள்ள போட்டிகள் ஏதும் நடத்த திட்டமிடாதது, சற்றுவருத்தமளிக்கிறது.

இருப்பினும், 2021ம் ஆண்டின் ICC World Test Championship இறுதி போட்டியை மனதில் கொண்டு, இவ்வாறு பல டெஸ்ட் போட்டிகளை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தொடரிலிருந்து, Rory Burns அவர்கள் தனது முதல் குழந்தையின் பிறப்பு வரவுள்ளதால், விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிச்சுமையை குறைக்கும் விதமாக, Jofra Archer அவர்களும் விளங்குவார் என செய்திகள் வெளிவருகிறது. 

அவர்களை தொடர்ந்து, தோள்பட்டையில் சற்று முன்பே தான், Ollie Pope அவர்கள் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், ஓய்வு மிகவும் அவசியம் என கருதி அவரின் பங்கேற்பும் கேள்விக்குறியாய் உள்ளது.

இத்தொடர் அட்டவணையை பார்த்தோமெனில், இரு டெஸ்ட் போட்டிகள். அதில் முதல் போட்டி, 14ம் ஜனவரியிலிருந்து - 18ம் ஜனவரி வரை நடைபெறும் எனவும், 2ம் டெஸ்ட் போட்டி, 22ம் ஜனவரியிலிருந்து 26ம் ஜனவரி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இரு போட்டிகளும், கல்லே'வில் நடைபெறும். 

    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood