விறுவிறு திருப்பம் - வெற்றிபெற்றது England !!
முதல் போட்டியில் தோல்வியை சுவைத்த England அணி, 2ம் போட்டியை வெற்றிபெற இயலுவர். வெற்றியைக் கண்டால், இறுதிபோட்டியோ, இத்தொடரின் தீர்ப்பாக முடிவடையும். ஆனால், Australia அணியோ, 20 ஓவர் தொடரில், 2-1 என்று தோல்வியை கண்ட காரணத்தினால், அதை ஈடுகட்ட, இவ்வொருநாள் தொடரினை கைப்பற்ற முயல்வர். இவ்விரு அணியினர் போட்டியிட்டால், பார்வையாளர்களுக்கு ஓர் முரட்டு தீனியாக அமையும். யாது நடக்கவுள்ளது, எவருடைய எண்ணம் பலிக்கவுள்ளது என இனி வரும் பக்கங்களில் காணலாம்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, ஒரு மாற்றத்தை அறிவித்தார்கள். மோயின் அலி அவர்களுக்கு பதிலாக சாம் கரண் களமிறங்குகின்றார். இரண்டாம் சுழற்பந்து வீச்சாளர் அணியினுள் தேவைப்படாது என்று எண்ணியே வேகப்பந்து வீச்சாளரான சாம் கரண் அவர்களை அறிவித்தார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவின் அணியினுள் எவ்வித மாற்றங்களும் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் அவர்களை மேஜையில் உட்கார வைத்துள்ளார்கள். இதன் குறைபாடு, அப்போது அவர்களை உரைக்கவில்லை.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, துவக்கத்திலேயே திணறல். ஸ்டார்க் மற்றும் ஹெஸில்வுட், இருவரும் இனைந்து, ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். இதற்கு இணைந்தவாறு, ஃபின்ச் அவர்கள் அமைத்த Fieldingஉம், தீப்பொறியை கிளப்ப, ரன்கள் நினைத்தவாறு கிடைக்கவில்லை. ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிகவும் அழகாக பார்ஸ்டோ அவர்களை வீழ்த்தியது. அவரைத்தொடர்ந்து, Fieldingன் வீரியம், ஜேசன் ராயின் விக்கெட்டையும் காவு வாங்கியது. துவக்கத்திலேயே நெருக்கடி. எவ்வாறு சமாளிக்கவுள்ளார்கள் என எண்ணிக்கொண்டிருக்கும் தருணத்தில், ரூட் அவர்கள் கவர் டிரைவ் ஷாட் ஒன்றை அடிக்கின்றார். ஆட்டத்தில் காணப்பட்ட மிகவும் அழகான ஷாட்டாக அமைந்தது. ரூட் அவர்களும், மோர்கன் அவர்களும் இனைந்து தேவையான ரன்களை சேர்க்க, ஆஸ்திரேலியா அணியின் மீது அழுத்தம் திரும்பியது. இவர்கள் இருவரும் இனைந்து, அணியை கரைசேர்ப்பர் என எதிர்பார்க்கும் பொருட்டு, சம்பா அவர்களை பந்துவீச அழைக்கின்றார். ஸ்லிப் திசையில், Captainனாகிய ஃபின்ச் அவர்களே இடம் பெறுகின்றார். நன்றாக காற்றில் தூக்கி வீசினார், ஆடம் சம்பா. Timing கிடைக்காமல், பேட்டின் பிற்பகுதியில் பந்து அடிக்க, ஃபின்ச் அவர்களின் கைகளில் கேட்ச் ஆக அமைந்தது. ஆட்டத்தில் திருப்பம். அங்கிருந்து, வெகு விரைந்த இடைவேளைகளில், மோர்கன், பட்லர் மற்றும் பில்லிங்ஸ் அவர்கள் வீழ்த்தப்பட்டனர். இங்கிலாந்து அணி 150 ரன்களுக்குள்ளேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, பரிதாப நிலையில் தோல்வியடைவார்களோ என்கிற சந்தேகம் அனைவரின் மனத்திலும் இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் கைகள் மேலோங்கி நின்றது. களத்தில் இருந்தது, அதில் ரஷீத் மற்றும் டாம் கரண். இருவரினால் பேட்டிங்கை மேற்கொள்ள இயலும். ஆயினும், துவக்கத்தில் உள்ள வீரர்களைப் போன்று விளையாட இயலாது. ஆட்டத்தில் மிஞ்சியிருந்த உயிரும் அதுவே. 44 ஓவர்களில், 164/8 என்று Score இருந்தது. இறுதி 5 ஓவர்களில் 200 ரன்களை அடைந்தால் மட்டுமே போதும். அதனை வைத்து, ஆட்டத்தில் போராடலாம் என்றே அணியினர் மனதில் எண்ணம் இருந்திருக்கும். ஆனால், நடைபெற்றதோ வேறு. மீதம் இருந்த 6 ஓவர்களில் 67 ரன்கள் குவிக்கப்பட்டது. அடித்தது ரஷீத் மற்றும் கரண் மட்டுமே. கணக்கிட்டுஆடினார். 45ம் ஓவரிலிருந்து, ஒரு பௌண்டரியாவது அடிக்க வேண்டும் என்றே திட்டமிட, 49ம் ஓவரில், 18 ரன்கள் அடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணி, துவக்கத்திலிருந்து நினைத்ததை நன்றாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தாலும், இறுதிக்கட்ட வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறினர். கம்மின்ஸ் அவர்களின் மோசமான பந்துவீச்சு முதற் போட்டியிலிருந்து தொடக்கம் பெற்றது. முதல் போட்டியிலாவது, இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர் பந்துகளை வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். ஆனால், இப்போட்டியில் அவர் வீசிய அனைத்து பந்துகளும், slotடில் வீசப்பட்டவையே. இருவரும் ஓர் முடிவுடன் இனைந்து அடித்தார்கள். இறுதியில் 231/9 என்று Defend செய்வதற்கு தேவையான score ஒன்றை அடித்தார்கள். இவற்றுள் அதில் ரஷீத் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டாம் கரண், 39 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதில் ரஷீத்தின் ஆட்டத்தைக் கண்டு அனைவரும் எழுந்து நின்று கைகூப்பினர். இறுதியில் அடிக்கப்பட்ட ரன்கள், ஆஸ்திரேலியா அணியின் தலையை எடுக்கும் அளவிற்கு ஆபத்தாக முடியும் என்றும் அத்தருணத்தில் தெரியாதது.
ஆஸ்திரேலியா அணியினர் களமிறங்கினர். இத்தொடரில் நான்காவது முறையாக ஆர்ச்சர் அவர்கள், டேவிட் வார்னரை Dismiss செய்கின்றார். அதிலும் மூன்றாம் முறையாக, மார் உயரத்துக்கு, உடலினை நோக்கி வீசப்படும் வேகப்பந்துக்கு என்ன செய்வது என்று புரியாமல், வீழ்த்தப்படுகின்றார். அவரைத்தொடர்ந்து ஸ்டோய்னிஸ் அவர்களும், விரைவில் வீழ்த்தப்பட, அதிரடியான போட்டியொன்று காத்துக்கொண்டிருக்கின்றது என்றே நான் எண்ணினேன். ஆனால், அந்த எண்ணம் சிறிய நேரத்துக்கு மட்டுமே. ஃபின்ச் அவர்களும் லபூஷனே அவர்களும் இனைந்து மிகவும் அழகாக விளையாடினர். அதில் ரஷீதின் பந்துவீச்சை ஃபின்ச் அவர்கள் குறிவைத்து தாக்கிய விதமும், லபூஷனேவின் தோள்கொடுத்து நின்ற ஆட்டமும் பார்ப்பதற்கு இனிதாக இருந்தது. ஃபின்ச் அவர்கள் அரைசதத்தைக் கடந்து, நல்ல Formல் இருந்தார். 30 ஓவர்களில் முடிவில் 144/2 என்றே ஆஸ்திரேலியா அணியின் நிலை இருந்தது. அப்போது ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெறுவர் என அனைவரும் நினைப்பர். ஆனால், அது தான் இல்லை. ஆர்ச்சர் அவர்களுக்கு 2 ஓவர்களும் வோக்ஸ் அவர்களுக்கு 3 ஓவர்களும் மீதம் உள்ள நிலையில், இவர்களை பந்துவீச களமிறக்குகின்றார் மோர்கன் அவர்கள். பலனளிக்கின்றது. முதலில் லபூஷனே !. மிகவும் நேர்த்தியாக வீசப்பட்ட ஓர் Inswinger பந்து. வீழ்த்தப்படுகின்றார். அடுத்து, மிட்சேல் மார்ஷ், 1 ரன்னுக்கு, ஆர்ச்சரின் வேகப்பந்தில், Bowled ஆகின்றார். பின்னர், ஃபின்ச். 70 ரன்கள் அடித்திருந்த நிலையில், வோக்ஸ் அவர்கள், மிகவும் கூறாக பேட்ஸ்மேனை வந்தடைந்தது. ஆட்டத்தில் திருப்பம். இவர்கள் இருவரின் ஓவர்களைக் கடந்தால் பிரச்சனையிருக்காது. ஆனால், இவர்கள் விடைப்பெறுவதற்கு முன், இறுதியாக மேக்ஸ்வெல்லின் விக்கெட்டையும் வீழ்த்திவிட்டு செல்கின்றார். Off Stump Lineல், Off Stumpஐ மட்டுமே குறிவைத்து வீசப்பட்டு, இடையில் எங்கும் செல்லாமல், Off Stumpஐ மட்டுமே அடித்தது. மேக்ஸ்வெல் அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 144/2ல் இருந்து 147/6 என்று நிலை திரும்பியது. மீதம் இருந்தது ஒரு புறம் அலெக்ஸ் கேரி. மறுபுறத்தில் பந்துவீச்சாளர்கள். இங்கிருந்து இங்கிலாந்து அணியின் ஆதிக்கமே. ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் அலெக்ஸ் கேரி அவர்கள், போராடினார். 25 ரன்கள் 10 பந்துகளில் மீதம் தேவை என்கிற நிலையின் வரை அழைத்து சென்றார். ஆனால், அதில் ரஷீதின் பந்து, அவருடைய மட்டையை மீறி, கீப்பரை வந்தடைய, இவரோ creaseஐ விட்டு வெகு வெளியே சென்றிருந்தார். அதன் காரணத்தினால், stumping செய்யப்பட்டார். 24 ரன்களில் வெற்றிபெற்றது, England அணி.
ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ஜோஃப்ரா ஆர்ச்சர் !! ஆதலால், இறுதி போட்டி, இத்தொடரின் தீர்ப்பு வழங்கும் போட்டியாக அமைந்தது. எனவே, ஆட்டம் தீயாக அமைய பல வாய்ப்புகள் உள்ளது. இருவருக்கிடையே உள்ள போட்டியும், தோல்வியை சிறிதும் விரும்பாத குணமும், ஆட்டத்தை மிகவும் பாதிக்கும். ஆயினும், மோர்கன் அவர்களின் யுக்திகளை நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.
Comments
Post a Comment