Posts

Showing posts from April, 2020

Retired Not Out

Image
On this day, in 1951, a West Indies batsman was born in Barbados. Everybody would wonder, that we have heard about Retired out, but what is retired not out?? Sounds strange.  As per the Law 25 of Laws of cricket, a batsman can retire from his innings at any time, when the ball is dead and will be replaced by a team mate who is yet to be dismissed. This occurs commonly where the batsman gets injured or unwell. But that batsman, should need to come back and play his innings continuing. If he doesn't so, he is marked as retired hurt, as he may need medical attention outside(But all this comes under umpires' permission and most probably possible for a side batting last in a match) In cricket, a batsman retires out without the permission of the umpire and also no having the permission of the opposition captain. If that batsman, didn't return, he is marked as retired out, in calculating his batting average. But still what is retired not out ? and what does Gordon Gree

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹிட்மன் அவர்களே

Image
 உயர்வினை நோக்கி ஓர் பயணம்  இப்போது உள்ள இந்தியா அணியில் அனுபவம் அதிகமாய் இருக்கின்ற ஓர் வீரர் தோணியினை ரோஹித் ஷர்மா தான். 2007ம் ஆண்டில் இந்தியா அணியிற்காக தனது கிரிக்கெட் பணியினை தொடர்கின்றார். ஆனால் முதல் 5 ஆண்டுகள், மிடில் ஆர்டர் வீரராக காலம் மிறங்குகின்றார். அதன் காரணமாக ஓர் சராசரி ஆட்டத்தினை நாம் கண்டோம். பல போட்டிகளில் ஜொலித்தாலும், சில சமயம் அவர் ஆட்டம் தேவையான அளவு இல்லை என்றே அனைவருக்கும் தோன்றியது. 2007 சிபி தொடர், 2007 டீ20 உலகக்கோப்பை, 2009 மற்றும் 2010 டீ20 உலகக்கோப்பை, இவை அனைத்திலும் ஆடினார். சில போட்டிகளில் நல்ல ஆட்டத்தினை கொடுத்தாலும், முக்கியமான சில போட்டிகளில் ( 2011 உலககோப்பைக்கு முன் தென் ஆஃப்ரிக்கா தொடர்) சரியாக விளையாததால் மற்றும் அவருக்கு அப்போது கடும் போட்டியாக திகழ்ந்த விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா, சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதால் இவருக்கு 2011 உலகக்கோப்பை விளையாட முடியாமல் போனது. ஆனால், அவர் மனம் தளரவில்லை. ஐபிஎலில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். அங்கு வெளிப்படுத்தியதை இங்கு, இந்திய

ஒரு தலைவன் உருவாகிய தினம்

Image
அனைவருக்கும் தெரிந்திருக்கும் நாளை இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாள். நாளையில் தானே பிறந்த நாள், இன்று ஏன் இவரைப்பற்றி விமர்சனம் பதிவிடுகின்றாய் ? என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகின்றது, ஆனால் முழு பதிவினை படித்த பிறகு உங்களுக்கு புரியும்.  நான் இன்றைய தேதியில் நடைபெற்ற சிறப்புவாய்ந்த ஐபிஎல் போட்டிகளை எவ்வாறு என தேடும்போது, எனக்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது. 7 வருடங்களுக்கு முன், இன்று, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. அன்று தான், முதல் முறையாக, ரோஹித் ஷர்மா மும்பை அணியிற்காக தலைமை பொறுப்பு ஏற்று விளையாடும் முதல் போட்டி. இப்போது நமக்கு தெரியும் அவர் பேட்டிங் மற்றும் தலைவனாக மிக சிறப்புடையவர் என்று, ஆனால் இதற்கு பிள்ளையார் சுழி இட்டது இப்போட்டியில் தான். டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா, உடனே பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. டெண்டுல்கர், தனது விக்கெட்டினை உடனடியாகவே இழந்தார். முதல் 6 ஓவர்களில் வெறும் 36/1 என்று மிக குறைந்த நிலையில் இருந்தது. அங்கிருந்து, டுவெயின் ஸ்மித்

Triple Birthday Bash

Image
This day is more to be remembered for T20 cricket fans, as three of them were celebrating their birthdays, who all three share in common was their greatness in Limited overs format and also all the three were inconsistent in their career, where one had retired, one was axed and one is still playing cricket for his national side. April 29, 1979                              On this day, the Indian left arm seamer Ashish Nehra was born. He was well known for his inswinging deliveries, particularly those banana swingers which comes into batsman. He made his test debut in 1999 while ODI debut in 2001. He was well known for his top class performance against England in 2003 World Cup, where he rattled the England's batting lineup for picking up 6/23 in 10 overs. On that match, captain Sourav Ganguly made him to bowl continuous spell of 10 overs, by placing 2-3 slips, a gully, a silly point and a short leg, literally creating the atmosphere of test cricket. After that, the major pro

சிறிய ஸ்கோர் - பெரிய வெற்றி

Image
இன்று, 5 வருடங்களுக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. ஏற்கனவே அவ்வாண்டில், சென்னை அணி, தங்களின் முதல் போட்டியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.  டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் வழக்கத்திற்கு மாறாக, சென்னை மைதானத்தில் பந்துவீச்சைனை தேர்ந்தெடுத்தார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மிகவும் அருமையான தொடக்கத்தினை வழங்கினார்கள். பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவெயின் ஸ்மித் பந்துகளை பௌண்டரிகளுக்கு அடித்து தள்ளினார். அதுவும் முதல் 6 ஓவர்களில் 53 ரன்களை குவித்தார்கள். போட்டியின் தொடக்கத்திற்கு முன், வர்ணனையாளர்கள் 160 - 180 வரை சென்னை அணி அடிப்பார்கள் என கணித்தார்கள். ஆனால், நிஜ உலகம் எதிர்பார்ப்பினை விட மிகவும் விசித்திரமானது என்கிற பழமொழியினை நாம் அறிந்திருப்போம் . அன்று, அது தான் நடந்தது. பவர்பிளே ஓவர்களுக்கு பின், சென்னை அணியின் ஆட்டத்தில் தேய்வு ஏற்பட்டது. விக்கெட்டுகள் ஒரு புறம் விழ, மறுபுறத்தில் பந்து பேட்டிற்கு வராமல், சற்று குறைந்த வேகத்தில் வந்தது. அதன் காரணமாக, சென்னை அணியினால் 134/6 என்கிற மிக குறைந்த ஸ்கோரில

The Magic of Hattrick World Cups

Image
On this day, in 2007, Australia won their third consecutive World Cup, and the first team to do so. They faced Sri Lankan team at Barbados, which became the second time to be faced by these two teams in the World Cup Final, where at 1996 World Cup, they both faced which were won by Sri Lanka.  Australian Captain, won the toss and without any hesitation chosen to bat first. The match was interrupted due to rain, which made the umpires to play the game for just 38 overs. Australian openers Adam Gilchrist and Mathew Hayden came into bat. On that day, Australians were literally hitting each and every single delivery bowled by Sri Lankan Bowlers, particularly it was a day to be remembered for Adam Gilchrist as he smashed 149 off just 104 deliveries with hitting 13 fours and 8 sixes. If we think, the knock of Ricky Ponting's during 2003 WC is the best, then this is something humongous. The base set by Gilchrist, made Australia to score 281/4 in the end of 38 overs. This is even tou

குஜராத் போட்டியை வென்றது - டெல்லி மனதை வென்றது

Image
ஐபிஎல் வரலாற்றில் இன்று  குஜராத் லயன்ஸ் அணி, சரியாக 2 வருடங்களுக்கு முன்பு, சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவில் உள்ள ஓர் திரில்லர் போட்டியினை வென்றார்கள். டெல்லியில் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணி, மிகவும் பிரம்மாண்டமான தொடக்கத்தினை வழங்கினார். இரு ஒப்பனர்களான பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவெயின் ஸ்மித், அன்று பௌண்டரிகளை சரவெடியினைப்போல் வெடித்தார்கள் . உலக அளவில் சிறப்புவாய்ந்த ஜாஹீர் கானின் பந்துகளை குறிப்பிட்டு தாக்கினார்கள். முதல் 10 ஓவர்களில் 110 ரன்களை அடித்து விக்கெட் இழக்காமல் இருந்தது குஜராத் அணி. அதில், முக்கிய செய்தி, இருவருமே அரை சதத்தினை பதிவிட்டு, எங்களை போன்று சிறப்பான ஒப்பனர்கள் யாவரும் இல்லை என்று சத்தமின்றி செயலில் வெளிப்படுத்தினார்கள். அங்கு இருந்து எப்படியும் 200க்கும் மேற்பட்ட ரன்களை குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால், தென் ஆஃப்ரிக்கா அணியின் சிறப்பு குணமான ஒன்று, " ஓர் அணி எவ்வளவு நன்றாக தொடங்கி, சிறப்பான நிலையில் இருந்தாலும், அதை சிறிது நேரத்தில் சுருட்டி, கால

Akhtar - The Fast and Furious

Image
Generally, Pakistani seam bowlers are so popular, and also are the greatest ones to create impact in cricketing fraternity. Whatever generation bowlers, Pakistan produces quality fast bowlers and they develop more on them. One such greatest legendary Pakistani Fast bowler of all time is Shoaib Akhtar. He is so quick and many batsmen, would be fearing to face him, as no one can predict that at which pace he is going to bowl. In our modern era, the value of seam bowlers aren't so high when compared a time during 1990s to early 2000s. Those were so pathetic time for batsmen, as it was an era of bowlers, who were so deadly and brutal. But, there were record for scoring hundreds, fastest ones, many sixes but in terms of bowlers, it is purely based on number of wickets. But, more than wickets there are some other factors which everyone fails to notice in the bowlers' point of view. One such thing is fastest delivery bowled ever by a pace bowler.  On April 2002, Pakistan plays the

ஹைதராபாதின் சின்ன ஸ்கோர் சம்பவம்

Image
பொதுவாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்றாலே விக்ரம் வேதா படத்தில், மாதவன் கூறும் பாணியில் கூறினால்   "உங்கள மாறி அணிகளுக்கலாம் ஒரே கதை தான். நான் சின்ன ஸ்கோர் அடிச்சேன், நல்ல பௌலிங் அட்டாக் இருந்தது காரணமா நான் அத டிஃபென்ட் பண்ணேன், அந்த கதை தான?",  என வரையறை கொடுத்து விடலாம். ஆனால், இதை சிறப்பாக செய்து காட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. மும்பை வானகடே மைதானத்தில், பொதுவாக பந்துவீச்சிற்கு அவ்வளவு துணை புரியாது. பேட்டிங் எளிதாக செய்வதற்கு ஏற்ப இருக்கும். அவ்வாறு இருக்கின்ற பிட்சில், முதலில் பேட்டிங் செய்து 119 ரன்களுக்கு ஜோலி முடிந்தது. சரி, மும்பை அணி எளிதாக அவ்விலக்கினை அடைந்து விடுவார்கள் என்று எண்ணியபோது, ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பௌண்டரி காப்பாளர்கள், அருமையாக செயல்பட்டு, மும்பை அணியினை வெறும் 87 ரன்களுக்கு சுருட்டியது. இதுவே அவ்வணியின், பலம்வாய்ந்த பந்துவீச்சினை குறிக்கும். ஏப்ரல் 26, 2018 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப், ஹைதராபாதில் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி, மிகவும் மோசமாக தங்களின் பேட்

Ban of Alex Hales from 2019 World Cup

Image
On this day, last year Alex Hales was banned for a period of 21 days, which was extended till WC 2019, missing out a greatest cricketing event. He was tested positive for intake of recreational drugs in hair follicle test, which violates the laws of ICC and England and Wales Cricket Board.  As per the rules of England and Wales Cricket Board, every player is tested for intake of drugs before and after each and every series. He/She should submit his hair follicle samples to the board, and in those samples it will clearly state the use of recreational drugs even its after 3 months of usage. It is firstly constituted by ICC and then each and every international cricket boards should follow this to promote, anti - doping, clean and genuine form of cricket. ICC monitors a player from once he is selected in International cricket, and is allowed only if he/she provides a clearly stated medical reason for usage of a particular drug. He/she is away from monitoring when he haven't any

சென்னை அணியின் முதல் கோப்பை - வரலாற்றில் இன்று

Image
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் ஜாம்பவான் அணி என்பது கிரிக்கெட் பார்க்கின்ற அனைவருக்கும் தெரியும். அவர்கள் 25வது ஏப்ரல், என்கிற தேதியில் 7 முறை விளையாடியுள்ளார்கள். அவ்வாறு அந்த தேதியிற்கும் சென்னை அணியிற்கும் அவ்வளவு நெருக்கும். ஆனால், அதிலுள்ள அனைத்து போட்டிகளிலும், சென்னை அணியிற்கு மிகவும் சிறப்புற்ற, மறக்க முடியாத போட்டி இதுவே ஆகும். ஏன்னென்றால், அவர்கள் தட்டி சென்ற முதற் ஐபிஎல் கோப்பை, இந்த போட்டியில் தான்.    2010ம் ஆண்டின் இறுதி போட்டி 25வது ஏப்ரல் அன்று, மும்பையில் நடைபெற்றது. மோதியது, இப்போது ஐபிஎலில் யார் கில்லாடி என்கிற வாய் தகராறில் உள்ள இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹெய்டன் மற்றும் முரளி விஜயின் அருமையாக தொடங்கினார்கள். இருவரும் பௌண்டரிகள் அடித்து, பவர்பிளே ஓவர்கள் நன்கு பயன்படுத்தினார்கள். ஆனால் பவர்பிளே ஓவர்களுக்கு பின், உடனுக்குடன் மூன்று விக்கெட்டுகளை இழந்தார்கள். அதனால், 12 ஓவர்களில் 68/3 என்று சென்னை அணியின் நிலை தேய்ந்து இருந்தது. மும்பை அணி, அந்நேரத்தில் வலுவுடன்

Zimbabwe - 35, Sri Lanka - 40

Image
One of the ODI records were created on this day, in 2004. But, for a team in its personal experience, it was a record to be forgotten while other team can be glorified about sharing a part in making a history.  On this day, 16 years ago, Zimbabwe faced Sri Lanka, in their home, for a bilateral 5 match ODI series. Having lost the first one with rain affecting the game and the second one with getting bowled out in a low score, they needed to win this 3rd ODI match to stay in contention to seal the series. But, Sri Lanka and fate had other plans. Sri Lanka won the toss and decided to field first in a nice swinging track, which would help bowlers to scalp wickets. Zimbabwe came in to bat, but for test match fans and upcoming young bowlers, it was an eye candy to watch. Marvan Attapattu, the captain of Sri Lankan side, used three pacers namely Chaminda Vaas, Dilhara Fernando and Farveez Maharoof(playing his debut ODI match). Zimbabwe team didn't have a much clarity against Sri Lan

Happy Birthday Kumar Dharmasena

Image
Exactly two years before the birth of Sachin Tendulkar, this great umpire was born. Yeah, we have known him more as an umpire than a cricketer, as he spent more years in umpiring than in cricketing career. Funny isn't seeing ourselves including me, who forgot much about this man. But, he is an living example of pursuing our passion in alternative way. Let us see about this great passionate person. On April 24, 1971, Kumar Dharmasena was born in Colomba, the capital city of Sri Lanka. He started to play cricket at his teenage and of course made his international cricket debut in the year 1993, against Sri Lanka as 59th capped Srilankan player. He is an all rounder, who bats right handed and bowls right arm off break. He represented Sri Lankan national team in the 1996 Cricket World cup and was a key member in the team. His bowling action made him perfect in ODI cricket matches and yet it received many controversies, particularly in 1998. In 31 Test matches he scored 868 runs a

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிரிக்கெட்டின் கடவுள்

Image
47வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை, வெறும் வாழ்க்கை அல்ல, அது ஓர் சகாப்தம். அவருடைய முக்கிய பேட்டிங் இன்னிங்ஸை பற்றி பேசினால் அதற்கு இவ்வொரு பதிவு பத்தாது. அவ்வளவு செய்திருக்கின்றார்.  பொதுவாக எவ்வித துறையினை எடுத்துக்கொண்டாலும், அதில் குறிப்பான ஒரு ஆள், பல தலைமுறைகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பார். சினிமாவில் ரஜினி - கமல், இசையில் இசைஞானி இளையராஜா, அவ்வாறு நாம் ஒப்பிட்டால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர். உடனே இங்கு பலர் கூறுவீர், டெண்டுல்கரை போன்று பல வீரர்கள் பல ஆண்டுகளாக விளையாடி உள்ளார்கள், இவரை மற்றும் ஏன் குறிப்பிட்டுள்ளாய் என நீங்கள் வினவலாம். ஆனால், டெண்டுல்கர் தன கிரிக்கெட் வாழ்வில் செய்த சாதனை மற்றும் அவர் கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அவையெல்லாம் நீங்கள் கூறுகின்ற மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு பாத்திருக்க மாட்டார்கள். அவரை கிரிக்கெட்டின் கடவுள் என குறிப்பிடுவது அவருடைய பேட்டிங்கை பார்த்து அல்ல. 24 ஆண்டுகள், 6 உலககோப்பைகள், அதில் அவர் உள்ளே வந்த காலத்தில் 60 ஓவர் ஒரு நாள் போட்டி 50 ஓவர்களாக மாறியது. அதில் பல டெஸ்ட்

உலக கிரிக்கெட்டில் சாதனை

Image
ஐபிஎல் வரலாற்றில் இன்று  கிறிஸ்டோஃபர் ஹென்றி கெயில் பற்றி கிரிக்கெட் உலகில் அறியாதோர் எவரும் இலர். குறிப்பாக 20 ஓவர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, நன்றாகவே தெரியும். 20 ஓவர் கிரிக்கெட்டின் ராஜா என்றே இவரை அழைக்கலாம். அவ்வளவு சாதனைகளை, 20 ஓவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார். அனைத்து வகை 20 ஓவர் போட்டிகளை சேர்த்தால், இவர் மொத்தம் 22 சதங்களை பதித்துள்ளார். அதில் பல சாதனைகளான, அதிக சிக்ஸர்கள், விரைவாக, குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதம் என பலவுண்டு. இந்த நாள், எவ்வகையான சாதனையை நிகழ்த்தினார் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம். இந்நாள், 7 ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் கிரிக்கெட்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் புனே வாரியர்ஸ் இந்தியா  இடையே நடந்த லீக் போட்டி. டாஸ் வென்ற புனே  முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. எனக்கு தெரிந்து அவர்கள் செய்த மிகப்பெரிய குற்றம் இதுவே ஆகும். (தவறு செய்தாயே குமாரே ). உள் நுழைவது கிறிஸ் கெயில் மற்றும் தில்ஷான். அதற்கு பிறகு, அப்போட்டியினை அலசுவதற்கு ஒன்றுமே இல்லை. வெறியாட்டம் தான். கிறிஸ் கெயிலின் ருத்ரதாண்டவம். யார் பந்து வீசினாலும் சிக்ஸர் தான்.

இரு விறுவிறுப்பான போட்டிகள் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Image
இரண்டு வருடங்களுக்கு முன், இதே நாளில், இரு போட்டிகள் நடந்தது. இரண்டுமே விறுவிறுப்பான போட்டிகளாக அமைந்தது. ஏப்ரல் 22, 2018 ம் ஆண்டு, இவ்விரு போட்டிகள் நடந்தது. அவ்வாண்டில் நடந்த பல போட்டிகள் விறுவிறுப்பான கடைசி ஓவரில் முடிவடைங்கிற போட்டியாகவே அமைந்தது. ( நாங்கள் பாவமடா, எங்களை விட்டுவிடுங்கள், இவ்வளவு படபடப்பு கொடுக்கும் போட்டிகளை நாங்கள் பார்த்தால், எண்களின் இருதயம் தாங்காது) என்று பார்வையாளர்கள் நினைக்கும் அளவில் அவ்வளவு உயர் தரத்தில், எவ்வணியும் எவ்விடத்திலும் தங்களின் ஆட்டத்தினை விட்டுக்கொடுக்காமல் இருந்தது. முதல் போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடந்த போட்டி. இடம், ஹைதராபாத்.  மாலை நேரப்போட்டி. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சினை தேர்வு செய்தது. சென்னை அணி முதல் பவர்ப்பிளே ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இரு ஒப்பனர்களான வாட்சன் மற்றும் டூ ப்ளஸிஸ், சொற்ப ரங்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் நோக்கி திரும்பினர். ரெய்னா ஒரு புறத்தில் பொறுமையாக விளையாட, மறுபுறத்தில் மண்ணின் மைந்தனாக ராயுடு காலத்தினுள் இறங்கினார். முதல் பத்து ஓவர

Happy Birthday Jonathan Trott

Image
Happy 39th Birthday to Jonathan Trott. He was born on Cape Town, South Africa. He played his U15 and U19 matches for South Africa, but represented England national cricket team in 2007. He made his T20I debut in 2007, ODI and test debuts in 2009. His career is so short span but in this small period he made some impeccable performances which the England cricket would never forget. He has been named as ICC Cricketer of the Year Award and ECB Cricketer of the Year Award in the year 2011. He was also awarded Wisden Cricketer of the Year in 2011. While seeing his technique, he is something different from other English Batsmen, who both technically and mentally. He was a proper top order batsman, who instead of hitting hard and smashing for huge sixes, he plays calm and fine, with much elegance for four. He doesn't seem to hit the ball so hard. Sometimes, he even pushes the ball for a boundary. A strong batsman in Leg Side, and played orthodox cricket in his entire career. He is al

தோனி ரசிகர்கள் மறவாத இரு போட்டிகள்

Image
ஐபிஎல் வரலாற்றில் இன்று  ஏப்ரல் 21, 2012 - சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடந்த போட்டி. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்கள். அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பிட்ச் மிகவும் வேலையினை காட்டியது. அன்று மிகவும் மெதுவாக ஆட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. மிகவும் பொறுத்து பொறுமையாக அரை சத்தினை அடித்தார் ஓவாயிஸ் ஷா. பார்வையாளர்கள் மனதில் " ஏனடா நீங்கள் ஐபிஎலில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் ?", " நாங்கள் அதிரடி கிரிக்கெட்டினை மற்றுமே காண வந்துள்ளோம்" என மிகவும் பொறுமையிழந்து இருந்தார்கள். 20 ஓவர் முடிவில், 146/4 என்கிற சிறிய ஸ்கோரினை அடித்தார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ். பந்து வீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர் (இந்த போட்டியில் ரன்களை கட்டுப்படுத்தாமல், வாரி வழங்கினால் தான் குற்றமே) சென்னை அணி ராஜஸ்தான் போன்றல்லாது மிகவும் தெளிவான தொடக்கத்தினை கொடுத்தனர். டூ ப்ளஸிஸ் அருமையான அரை சத்தினை அடித்தார். சரி, இவர்களாவது கொஞ்சம் விரைவாக ரன்களை அடிக்கிறார்கள் என்று பார்த்தால், பவ