பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிரிக்கெட்டின் கடவுள்
47வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை, வெறும் வாழ்க்கை அல்ல, அது ஓர் சகாப்தம். அவருடைய முக்கிய பேட்டிங் இன்னிங்ஸை பற்றி பேசினால் அதற்கு இவ்வொரு பதிவு பத்தாது. அவ்வளவு செய்திருக்கின்றார்.
பொதுவாக எவ்வித துறையினை எடுத்துக்கொண்டாலும், அதில் குறிப்பான ஒரு ஆள், பல தலைமுறைகளாக ஆட்சி செய்து கொண்டிருப்பார். சினிமாவில் ரஜினி - கமல், இசையில் இசைஞானி இளையராஜா, அவ்வாறு நாம் ஒப்பிட்டால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர். உடனே இங்கு பலர் கூறுவீர், டெண்டுல்கரை போன்று பல வீரர்கள் பல ஆண்டுகளாக விளையாடி உள்ளார்கள், இவரை மற்றும் ஏன் குறிப்பிட்டுள்ளாய் என நீங்கள் வினவலாம். ஆனால், டெண்டுல்கர் தன கிரிக்கெட் வாழ்வில் செய்த சாதனை மற்றும் அவர் கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அவையெல்லாம் நீங்கள் கூறுகின்ற மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு பாத்திருக்க மாட்டார்கள். அவரை கிரிக்கெட்டின் கடவுள் என குறிப்பிடுவது அவருடைய பேட்டிங்கை பார்த்து அல்ல. 24 ஆண்டுகள், 6 உலககோப்பைகள், அதில் அவர் உள்ளே வந்த காலத்தில் 60 ஓவர் ஒரு நாள் போட்டி 50 ஓவர்களாக மாறியது. அதில் பல டெஸ்ட் வீரர்கள் ஒரு நாள் போட்டியில் தங்களை அமைத்துக்கொண்டு விளையாட தடுமாறினார்கள். அதில் சிறுவனாக நன்கு தேர்ந்தார். வெள்ளையுடை வண்ணாவுடைகளாக மாறியது. பந்துகள் மற்றும் பந்தின் நிறங்கள் மாறியது. பௌண்டரியின் நீளம் குறைக்கப்பட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பின தரம் உயர்த்தியது, என பலவித மாற்றங்கள். அவர் மேற்கொண்ட பந்துவீச்சாளர்கள் வரலாற்று சிறப்புமிக்கவர்களாக இருந்தார்கள். அதுவும் 90களில் பேட்டிங்கை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் மவுசு அதிகம். அதற்கு எடுத்துக்காட்டு வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஷோயப் அக்தர், கர்ட்லே அம்ப்ரோஸ், மைகேல் ஹோல்டிங், பிரட் லீ, ஜேசன் கில்லெஸ்பி, மக்ராத், ஷான் பொல்லாக், முரளிதரன் அவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களை மீறி ரன்களை குவித்தார். அடுத்த நூற்றாண்டின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களையும் அவர் எதிர்கொண்டார். அதன் எடுத்துக்காட்டு டேல் ஸ்டெயின், மிட்சேல் ஜோன்சன், லசித் மலிங்கா, மோர்னி மோர்கல்,டிம் சௌதீ, ஸ்டுவர்ட் ப்ராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் இவ்வாறு மூவகையான பந்துவீச்சாளர்களையும் மேற்கொண்டார். இப்போது புரிந்திருக்கும் அவரை ஏன் கிரிக்கெட்டின் கடவுள் என கூறுகின்றார் என்பது.
எங்கு சென்றாலும் அவர் அரசன் தான். அவர் விளையாடிய முழு காலகட்டத்தில், அவர் தோள் மீது தான் அனைத்து பாரமும் இருந்தது. அதுவும் குறிப்பாக 90களில் இருந்து 2000ங்களின் முதல் பருவம் வரை அவரின் விக்கெட்டை எதிரணி கைப்பற்றினால், போட்டியே முடிந்தது போன்று அனைவரும் தொலைக்காட்சி பெட்டியினை மூடிவிட்டு சென்றுவிடுவர். தான் தன்னுடைய முதல் சதத்தினை பதிவு செய்வதற்கு 5 வருடங்கள் ஆகிவிட்டது. அதில் 52 போட்டிகளில் ஒரு சதத்தினை கூட பதிவு செய்யவில்லை. ஆனால் இறுதியில் அணைத்து வகை கிரிக்கெட் தொடருகளை ஒப்பிட்டு அவர் 100 சதங்களை பதிவித்துள்ளார். அவருடைய ஆட்டம் எவ்வாறு வேண்டுமானாலும் அவரால் மாற்றியமைத்து ஆட முடியும். தன்னால் பௌலர்களை சிக்ஸர் அடித்தும் பந்தாடமுடியும், அணியின் ஸ்கோரினை சிறுது சிறிதாக ஏற்றி பந்தாடவும் முடியும். தன்னுடைய ரங்களின் பட்டியல் மிகவும் புருவத்தினை உயர்த்துமாறு பிரமிக்க வைக்கின்றது. 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களை பதித்து 15,921 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில், 463 போட்டிகள் விளையாடி, அதில் 18,426 ரங்களை குவித்துள்ளார். கிரிக்கெட்டில் தான் ஓர் உயர்மனிதனாக நடந்துக்கொள்வார். தான் செய்கின்ற தவறுகளை உடனே திருத்திக்கொள்வார். அதற்கு எடுத்துக்காட்டு ஒரு முறை அவரை ஆஃப் திசையில் விளையாட வைத்து அவரின் விக்கெட்டினை குறிப்பிட்ட நான்காவது ஸ்டம்ப் லைனில் பந்து வீசி தூங்குவார்கள். அதை முறியடிக்க, ஓர் இன்னிங்சில் அவர் ஆஃப் திசையில் ஒரு பௌண்டரி கூட அடிக்காமல், லெக் திசையிலே மொத்த ரங்களையும் குவித்து பந்து வீச்சாளர்களின் கணக்கினை காலி செய்தார். ஓப்பனிங்கில் பல முறை புது பந்தின் ஸ்விங்கினை அடித்து அடித்து பழையனவாக்கி பின் வருகின்ற வீரர்களுக்கு பேட்டிங்கை மிக எளிதாக அமைத்து கொடுப்பார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் 200 பதித்ததும் இவரே. 1994வரை அவர் பேட்டிங்கில் கீழ் தளத்தில் விளையாடியுள்ளார். அதிலும் அவருடைய சராசரி 50க்கும் மேல் உள்ளது. டெண்டுல்கர் இறுதி காலத்தில் மிக பொறுமையாக விளையாடியுள்ளார், அவரின் அதிரடி கிரிக்கெட் ஓய்ந்துவிட்டது என்று பலர் கூறுவர். அதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.
அவருடைய ஸ்ட்ராயிட் டிரைவ், கவர் டிரைவ், புள் ஷாட், வுட் ஷாட் எல்லாமே மிக அழகாக இருக்கும். பந்தின் வேகத்தினை வைத்து ஆளில்லா திசையினை நோக்கி பந்தினை அனுப்புவதிலும் அவர் வள்ளல். தான் சந்தித்த பல சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் சரி கிரிக்கெட்டினை சம்பந்தப்படுத்தி தான்.
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், அவரால் தான் ஒரு வகையில் இந்தியாவில் கிரிக்கெட் பெருகியுள்ளது எனவும் கூறலாம். அவரை போன்று எவரும் இல்லை. "உனை போன்று யாரும் இங்கு இல்லை, இந்தியா மண்ணின் செல்லப்பிள்ளை"

Comments
Post a Comment