ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

இப்பதிவில் நாம் காணவிருப்பது, இவ்வாண்டில் எந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெறும், என்பதைப்பற்றிய சில நுணுக்கங்கள் மட்டுமே. தற்போது, சையத் முஷ்டாக் அலி தொடர் நிறைவுபெறவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக விஜய் ஹசாரே தொடரை நடத்த வேண்டுமா ? அல்லது ரஞ்சி தொடர் நடத்த வேண்டுமா ? என்பதை குறித்த முடிவு எடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியமானது அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. இந்தியாவின், பணம் புழங்கும் IPL கிரிக்கெட் தொடர், இன்னும் 2 மாத காலங்களில் துவங்கவிருக்கிறது. ஆகையால், 2 மாத காலத்திற்குள், இன்னும் ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடத்திவிடலாம் என்பதில் திட்டவட்டமாக உள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம். அதில், எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்விக்கு, நிறைய மாநில கிரிக்கெட் சங்கங்கள், விஜய் ஹசாரே தொடருக்காக வாக்களித்துள்ளது. ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கமானது, ரஞ்சி தொடரை நடத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதற்கு அவர்கள் தெரிவித்த முக்கிய காரணம், "முன்பே, வெள்ளை பந்து தொடரான சையடா முஷ்டாக் அலி தொடர் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும், வெள்ளை பந்து கிரிக்...