Posts

Showing posts with the label IPL 2020

IPL 2021 செய்திகள் !

Image
சென்ற மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் , 2021ம் ஆண்டு IPL தொடர், 8 அணிகளை வைத்தே நடைபெறும் எனவும், 2022ம் ஆண்டில் தான் கூடுதலாக 2 அணிகளை நியமிப்பார்கள் எனவும், IPL நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது. அதற்கு ஓர் முக்கிய காரணம், குறுகிய காலகட்டத்தில், Mega ஏலம் எனும் ஓர் மாபெரும் நிகழ்வை நடத்துதல் சாத்தியமற்றதாகும். இதனை தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்தும், IPL தொடரானது, இவ்வாண்டு எங்கு நடைபெறும் என்பதை குறித்தும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவ்வாண்டின் IPL தொடரானது, இந்தியாவில் தான் பெரும்பாலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா நோயானது, விஸ்வரூபம் எடுத்து அச்சுறுத்தினால், சென்ற ஆண்டினை போன்று , இவ்வாண்டும் ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) நடைபெரும்வாறு மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்து, IPLலின் நிர்வாக சபை தெரிவித்தது யாதெனில், "அணிகளுக்கு மத்தியில் வீரர்களை வாங்கி, விற்பதற்கும் (player trading) மற்றும், தேவையற்ற வீரர்களை வெளியேற்றுவதற்கும், ஜனவரி 21ம் தேதி தான் கடைசி நாள்". ஆகையால், ...

பார்த்திவ் படேல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் !!

Image
 90க்களில் பிறந்த குழந்தைகளுக்கும், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இவரை நன்கு தெரிந்திருக்கும். 17 வயது காலகட்டத்தில், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட Wicket Keeper Batsman தான், பார்த்திவ் படேல். டெண்டுல்கர் , பியூஷ் சாவ்லா , லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில், மிகவும் சிறு வயதில் களமிறங்கும் கிரிக்கெட் வீரரே இவர் ஆவார்.  டீனேஜ் பருவம் முடிவதற்குள்ளேயே களமிறங்கிய பெருமை இருந்தாலும், மறுபுறத்தில் உள்ள Wicket Keeperகளின் ஆதிக்கம், இவரை இரண்டாம் அளந்து மூன்றாம் கட்ட தேர்வாகவே வைத்தது. இந்த நிலை, தான் விளையாடிய 18 ஆண்டு கால, சர்வதேச கிரிக்கெட் முழுவதும் மாறாது இருந்தது. 2002ம் ஆண்டில், முதல் முறையாக, காயப்பட்ட அஜய் ராத்ராவுக்கு மாற்றாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக, Trent Bridge மைதானத்தில் debut செய்கிறார்.  அங்கிருந்து, 2003ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் சார்பாக இவரை தேர்வு செய்தாலும், Rahul Dravid அவர்கள் மூத்தவர் என்பதால், அவருக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டு, இவருக்கு வாய்ப்புகளும் பெரிதாக வழங்கப்படவில்...

தென் ஆஃப்ரிக்கா - இங்கிலாந்து தொடர் ரத்து !!

Image
 தற்போது, இங்கிலாந்து க்கும் தென் ஆஃப்பிரிக்கா வுக்கும், இடையே தென் ஆஃப்ரிக்கா நாட்டில் ஓர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு இருந்தது. 3 T20Iக்கள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக்கொண்ட இத்தொடரில், 3-0 என 20 ஓவர் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. அதனைத்தொடர்ந்து, ஒரு நாள் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அப்பரிசோதனையில், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு, கொரோனா நோயின் பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆம், நன்றாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் தொடரின் இடையில், இவ்வாறு பாதிப்புகள் வெளிவரும் என எவர் எதிர்பார்த்திருப்பர் ?. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரருக்கு Positive எனும் விளைவு வெளியானதால், 4ம் டிசம்பர் அன்று நடைபெறவிருந்த, முதல் ஒரு நாள் போட்டியை, 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அந்த ஒரு வீரரை தனிமைப்படுத்தப்பட்டு, மீதமுள்ளோர் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டனர்.  அவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு, 6ம் தேதியன்று நிச்சயமாக, முதல் ஒரு நாள் போட்டி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, வீரர்கள் வசித்து வந்த உணவகத்தில் உள...

மேலும் Knight Ridersன் ஆதிக்கம் !!

Image
ஷாருக்கான் அவர்களுக்கு உள்ள கிரிக்கெட்டின் காதல் மேலும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. 2008ம் ஆண்டில், கொல்கத்தா நகரை சார்ந்த ஓர் IPL அணி க்கு ஓனராக பொறுப்பேற்கின்றார். பின்னர், கரிபீன் தீவுகளை சார்ந்த ஓர் League தொடரை அறிவிக்க, அதில் Trinidad மற்றும் Tobago தீவுகளை சார்ந்த ஓர் அணி யை, விலைகொடுத்து வாங்குகிறார். இவ்விரு அணிகளும், அந்தந்த தொடர்களில் கோப்பையை தட்டிச் சென்றுள்ளார்கள். தற்போது கிடைத்த செய்தி யாதெனில், இவர்களை தொடர்ந்து Major League Cricket தொடரில் உள்ள ஓர் அணிக்கு இவர் ஓனராக பணியாற்றவுள்ளார் என்பது தான்.  Major League Cricket என்றால் என்ன ? அமெரிக்கா நாட்டை சார்ந்த, 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தான் இந்த Major League Cricket தொடர் ஆகும். சமீபகாலத்தில், அமெரிக்கா நாடு கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். இத்தொடர், 2022ம் ஆண்டில் துவக்கம் பெரும் என்றும், அதற்காக சில baseball மைதானங்களை தேர்வு செய்துள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  இதற்கு தொடர்ச்சியாக, 2022ம் ஆண்டிற்குள், Grand Prairie நகரில் உள்ள Air Hogs மைதானத்தை, கிரிக்கெட் வி...

நீங்க ஜெயிக்கணும் சிராஜ் !

Image
அனைவரின் மனதிக் உள்ள கேள்வி, ஏன் இத்தனை நாட்களாக நீங்கள் சிராஜ் அவர்களைப் பற்றி சிறிதும் எழுதவில்லை ? சிராஜ் அவர்களுக்கு நேர்ந்த துக்க சம்பவம் முழுமையடையும் வரை காத்திருந்தேன். முழுமை அடைவது என்றால் ? அவரின் தந்தை மறைவை பற்றி சமீபத்தில் நாம் அறிவோம். இந்த செய்தியின் முடிவு, சிராஜ் அவர்கள் இந்திய நாட்டிற்கு மீண்டும் பயணம் மேற்கொள்வாரா ? அல்லது ஆஸ்திரேலியாவில் களம்கண்ட வீரனாக திகழ்வாரா ? என்கிற இரு பாதைகளில் ஒரு பாதையை தேர்வு செய்தலே ஆகும். தற்போது, சிராஜ் அவர்கள் ஒரு பாதையை தேர்வு செய்துள்ளார். அது எந்த பாதை என்பதை இப்பதிவில் காண்போம்.  2020ம் ஆண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே , Abu Dhabi மைதானத்தில் ஓர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், சிராஜ் அவர்கள் தொடர்ச்சியாக 2 maiden ஓவர்களை வீசி, முதல் 3 விக்கெட்டுகளை தகனம் செய்தார். அன்றைய தினத்தின் ஆட்டநாயகனாக ஜொலித்தார். இவர் தான் அன்று தலைப்புச்செய்தி.  அதற்கு அடுத்த தினம், Royal Challengers Bangalore அணியின் YouTube பக்கத்தில், சிராஜ் அவர்களை நேர்காணல் செய்தனர். அதி...

MI vs DC | Grand Finale | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில, இந்த வருஷ IPL 'லோட Final match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. இதுக்கு முன்னாடி அவங்க chasingல எல்லா முறையும் சொதப்பியிருக்காங்க. அது காரணமா முதல்ல batting பண்ணி, score defend பண்ணிடலாம்ன்னு ஒரு confidenceல இந்த decision எடுக்குறாங்க. ஆரம்பத்துலயே சரிவு ஏற்பட்டாலும், பின்னாடி ஷ்ரேயஸ் மற்றும் பண்ட் சேர்ந்து fight பன்றாங்க. 156/7னு ஒரு fighting score அடிச்சாலும், மும்பையோட batsmanகளுக்கு இது கொஞ்சம் கூட பத்தாது. ஈஸியா chase பண்ணிட்டு, cup'அ easy'யா ஜெய்ச்சிட்டு போயிட்டாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். இந்த IPL'ஓட கடைசி video இது தான். அப்போ இனிமே, videoவே கெடயாதானு கேட்டா, இனிமே international series'ஓட Pre & Post Match Analysis videos post பண்ணுவேன். மத்த நாட்டுல நடக்குற seriesலாம் blog லயும் Podcast லயும் update பண்ணுவேன்னு இங்க நான் announce பண்ணிக்கிறேன்.  இந்த வருஷ IPL'ஓட கடைசி திருப்புமுனை segment ...

DC vs SRH | IPL 2020 | Qualifier 2 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும்   டெல்லிக்கும் இடையில, qualifier 2 match நடந்துச்சு. இந்த match'அ ஜெயிக்குறவன் finalகு போயிடுவான். தோக்குறவன் வீட்டுக்கு போயிடுவான். Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. Dhawan , Stoinis 'ஓட start மற்றும் Hetmyer 'ஓட அசத்தலான finish காரணமா, 189/3னு பெரிய score அடிக்கிறாங்க. அதை திரும்ப அடிக்கணும்ங்கிற இலக்கோட உள்ள வர்ற SRH , ஆரம்பத்துல wickets இழந்து, பின்னாடி Williamson மற்றும் Samad போராடினாலும், அந்த போராட்டம் பத்தாம வெறும் 172/8 தான் அடிக்கிறாங்க, 17 runs வித்தியாசத்துல DC ஜெயிக்குறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Videoவ பாருங்க, புடிச்சிருந்தா subscribe பண்ணுங்க. அப்படியே, ஏதாவது inputs சொல்லனும்னா, comment sectionல type பண்ணுங்க.  இங்க, silent killerரா சம்பவம் பண்ண ஹைதராபாத் அணிய, சிக்க வெச்சு சின்னாபின்னமாகினது formலேயே இல்லாத டெல்லி . இதை சாத்தியமாக்கணும்னா நிச்சயமா ஏதாவது திட்டம் இருக்கணும். இல்ல ஏதாவது சம்பவம் நடந்திருக்கணும். அந்த ஒர...

MI vs DC | Qualifier 1 | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. Toss ஜெயிச்சா மட்டும் பத்தாது, match'அ ஜெயிக்கிறதுக்கான performance'உம் இருக்கணும். அந்த அடிப்படையில பாக்கும்போது, ரோஹித் ஷர்மா , Kieron Pollard ரெண்டு பேர இழந்ததுக்கு அப்புறமும் 200/5னு இமாலய score அடிக்கிறாங்க. அத, திரும்ப chase பண்ண உள்ள வந்த Delhi , ஆரம்பத்துல நடந்த பெரிய சொதப்பல் காரணமா மொத்தமா இடிஞ்சு விழுந்துருச்சு. அது காரணமா, மும்பை அணி finalsக்கு qualify ஆகிட்டாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Full videoவ பார்க்க மறந்துடாதீங்க. நீங்க miss பண்ணிட்டா அப்புறம் நான் வருத்தப்படுவேன். இங்கயும் turning point சம்பவம் நடந்திருக்கு. அந்த turning point காரணமா match'ஏ மாறிடுச்சு. டெல்லி கிட்ட இருந்து மும்பை பக்கம் காத்து அடிக்க, கூடுதல் பலமா சேர்ந்துச்சு. அப்படி பட்ட திருப்பம் என்னன்னு இந்த blog ல நாம பாக்கலாம்.  இந்த match'அ கைவிட்டது Delhi team ஏ தான். Second Inningsல dew இ...

எங்கு சென்றாலும் அரசன் தான் - விராட் கோலி

Image
 விராட் கோலியோட வாழ்க்கையை பத்தி கேட்டோம்னா, எல்லாரும் சொல்லுறது 2008 Under 19 World Cup ஜெயிச்சு கொடுத்துட்டு, அதே வருஷத்துல, Indian national teamல இடப்பெற்று, ஆரம்பத்துல சில சரிவு இருந்தாலும், போகப்போக runs நிறையா குவிச்சு, 2011 World Cup Tournamentல, spot கெடச்சு அந்த tournamentல, Number 4 spotல, அவரோட game எல்லாரோட கவனத்தையும் கொள்ளையடிச்சுது. அங்க இருந்து, RCB அந்த வருஷம் retain பண்ண ஒரே playerரா உள்ள வந்து, IPLலயும் சிறப்பா செயல்பட்டு, அதுக்கு அடுத்து வந்த overseas toursல சில சுமாரான performances கொடுத்தாலும், பரவாயில்ல இவர் மேல நம்பிக்கை வெக்கலாம்'ன்னு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்து, ஏகப்பட்ட matches ஜெயிச்சு கொடுத்து, Indian Team Captainனாகவும் மாறி, இன்னிக்கி எல்லா youngstersகும் ஒரு role modelலா இருந்துட்டு இருக்காரு. இங்க, இவரோட achievements'அ தாண்டி, ஒரு தோனி ரசிகனா இவரோட gameம நான் விமர்சிக்க போறேன். பொதுவா, விராட் கோலி'ங்கிற பெயர நாம சொன்னோம்னா, ரெண்டு பேரோட compare பண்ணி பேசுவாங்க. ஒன்னு சச்சின், இன்னொன்னு கங்குலி. இவர் அடிக்கிற centuriesக்கும், இவரோட batt...

SRH vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும் மும்பைக்கும் இடையில match நடக்குது. இந்த match'அ SRH ஜெயிச்சா தான், அவங்களால playoffs விளையாட முடியும். தோத்துட்டா வெளில. அவங்க தலையெழுத்து அவங்களோட கையில தான் இருக்கு. Toss ஜெயிச்ச SRH , முதல்ல bowling choose பன்றாங்க. MI 'யோட batting வழக்கத்துக்கு மாறா collapse ஆகுது. Top orderல ஒருத்தரும் performance கொடுக்காத காரணத்துனால, என்னதான் பின்னாடி score பண்ணாலும், அது பத்தாமையே போயிடுச்சு. வெறும் 149/8 தான் அடிக்கிறாங்க. அதை, Warner மற்றும் Saha 'வே சேர்ந்து chase பன்றாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Miss பண்ணாதீங்க, அப்புறம் நான் வருத்தப்படுவேன். இங்க turning point சம்பவம் இருக்கானு கேட்டோம்னா, நிச்சயமா இருக்கு. இந்த turning point சம்பவம் காரணமா தான், மும்பை கிட்ட இருந்து ஹைதராபாத்'கு match வந்துச்சு. அது இல்லாம, மும்பை மாதிரி ஒரு best sideட நீங்க beat பண்ணனும்னா, on fieldல உங்க performance, அதுக்கு ஏத்த மாதிரி இருக்கணும். அது தான் இங்க நடந்துச்சு. அதை இந்த blogல பார்க...

RCB vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
 இந்த match'ஓட result, ரெண்டு teams இல்லாம, மூணாவது ஒரு team, playoff போறதுக்கான வாய்ப்பையும் பாதிக்கும். அப்படிப்பட்ட matchல, toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. RCB 'யோட batting'அ பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துல ரொம்பவே பொறுமையா ஆடுறாங்க. அது காரணமா, என்ன தான் பின்னாடி runs அடிச்சாலும், Powerplayங்கிற ஒரு எடத்துல கிடைக்குற advantage, இல்லாம போயிடுச்சு. 152/7 தான் அடிக்கிறாங்க. Dhawan , Rahane வோட நல்ல game காரணமா, கடைசில கொண்டு போயி ஜெய்க்குறாங்க. இருந்தும், ரெண்டு teams'உம் playoffsகு qualify ஆகுறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல Post பண்ணியிருக்கேன். அதோட hyperlink இங்க add பண்ணியிருக்கேன். பாத்துட்டு, உங்களோட கருத்துக்கள்ல commentsல post பண்ணுங்க ! இந்த matchலயும் turning point ஏதாவது இருந்துட முடியுமா'ன்னு நீங்க கேள்வி கேட்டா, அம்மா இதுலயும் இருக்கு. எந்த ஒரு match'அ எடுத்து பார்த்தாலும், அதுல ஒரு team ஜெயிக்கிறதுக்கும், இன்னொரு team தோக்குறதுக்கும், நடுல நிச்சயமா ஒரு சம்பவம் இருக்க...

CSK vs KXIP | KKR vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. இந்த ரெண்டு gamesல நடந்த சில சம்பவங்கள் காரணமா, ரெண்டு teams, IPL playoff raceல இருந்து வெளில வந்துச்சு. இது இல்லாம, ரெண்டு matches'உம் one sided'அ தான் போயி முடிஞ்சுது. பெரிய எதிர்பார்ப்பு இருக்கவேண்டிய போட்டி, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமையே முடிஞ்சிடுச்சு. ஆனாலும், இந்த ரெண்டு gamesல சில turning points இருக்கு. அது என்னன்னு இந்த blogல நாம பாக்கலாம்.  முதல்ல சென்னைக்கும் பஞ்சாபுக்கும் இடையில match நடக்குது. Chennai team எப்போவோ playoffs raceல இருந்து வெளில வந்துருச்சு. இதுக்கு மேல அவங்க தங்களோட கெத்த விட்டு கொடுக்காம விளையாட தான் பாப்பாங்க. ஆனா, பஞ்சாப்'கு அப்படி கிடையாது. Toss ஜெயிக்கிற சென்னை அணி முதல்ல fielding choose பன்றாங்க. ஆரம்பத்துல ஏகப்பட்ட wickets பஞ்சாப் இழந்தாலும், கடைசில ஹூடா ஒரு நல்ல half century அடிச்சது காரணமா, 153/6னு ஒரு fighting total reach பன்றாங்க. 2nd inningsல ball, batகு நல்லா வந்தது காரணமா, சென்னை batsmanனுக்கு விளையாட ரொம்ப ஈஸியா அமைஞ்சுது. ருதுராஜ் வரிசையா 3வது fifty அடிக்குறாரு. பஞ்சாபோட playoff கனவு, க...

CSK vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, சென்னைக்கும் கொல்கத்தாவுக்கு இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், சென்னைக்கு ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் கெடைக்காது. ஆனா, மத்த teamsலாம் சென்னை தான் ஜெய்காணும்னு ஆசையா இருப்பாங்க. அப்போ தான், கொல்கத்தா'ங்கிற ஒரு எதிரி playoffs raceல இருந்து வெளியேறுவான். இன்னொரு பக்கம், obvious'அ கொல்கத்தா ஜெயிச்சே ஆகணும். Toss ஜெயிக்கிற CSK, முதல்ல bowling choose பன்றாங்க. Nithish Rana வோட excellent start மற்றும் Dinesh Kartik கோட smart finishing காரணமா, 172/6னு score அடிக்குறாங்க. ருதுராஜ் மறுபடியும் openingல எறங்கி, மீண்டும் மீண்டும் prove பண்ணுறாரு. ஒரு solid batsmanனா விஸ்வரூபமெடுத்து, bowlersஅ பந்தாடுறாரு. அவரைத்தாண்டி அம்பட்டி ராயுடு இடையில ஒரு cameo innings ஆடுறாரு. அது இல்லாம Jadeja வோட finishing காரணமா, கடைசி ballல chase பண்ணி ஜெயிக்குறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். மறக்காம, click பண்ணி பாருங்க !         எங்க, இந்த match'அ KKR உண்மையிலேயே விட்டாங...

Australian cricket team named 18 member squad for Limited Overs Series against India

Image
With Indian Cricket team, announcing the list of cricketers who are going to be a part of this great International Series against Australia in Australia, few days ago, just now Australian cricket team have named their 18 member squad for limited overs cricket. So, the test cricket squad is yet to be announced, but in this squad there are quite few surprises for Cricket Fans, and also some analysis needed to be done. For the case of analysis, this blog is being written below. Australia's 18-member squad for Limited Overs Series against India - Aaron Finch , Sean Abbott, Ashton Agar , Cameron Green, Moises Henriques, Steve Smith , Marnus Labuschagne , Glenn Maxwell , David Warner , Pat Cummins , Mitchell Starc , Josh Hazlewood , Daniel Sams , Kane Richardson, Marcus Stoinis , Alex Carey , Mathew Wade and Adam Zampa . We have already seen in the tour of England, during which Maxwell, Adam Zampa, Mitchell Marsh, Mitchell Starc, shine as a glowing star, whereas most cricketers were on ...

MI vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, பெங்களூருக்கும் மும்பைக்கும் இடையில ஒரு high intense match நடந்துச்சு. இதுல ஜெயிக்குற team, official'அ Playoffsகு qualify ஆவாங்க. Toss ஜெயிக்குற MI அணி, முதல்ல bowling choose பண்றாங்க. Padikkal ளோட batting, அவ்ளோ brilliantடா இருந்துச்சு. Particular'அ அவரோட boundary placements, தரம் !! ஆனால், அவரை தவிர்த்து, வேற யாரும் ஒழுங்கா விளையாடல. கூடவே, Bumrah வோட double Wicket maiden, மொத்த கதையவே மாத்திருச்சு. 164/6 தான் அடிச்சாங்க. திரும்ப, MI Batting பண்ணும்போது, ஆரம்பத்திலேயே wickets விட்டாலும், run rate'அ சுத்தமா ஏற விடல. Match 50-50 % winning chance'ஓட இருக்கும்போது, அந்த gameம மொத்தமா திருப்புனது Suryakumar Yadav . அது தான், MI team'அ ஜெயிக்க வெச்சுது.  இந்த match'ஓட Post Match Analysis vide o'வ, என்னோட Cricmuhan YouTube channelல பேசி explain பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க ! RCB எங்க கோட்ட விட்டாங்க ? ரெண்டு teamsகும் இருந்த difference என்ன ? பும்ரா'வா இல்ல Suryakumar Yadav'வா ? இவங்க இல்லன்னா, அப்புறம் வேற யாரு ? இப்படி ஏகப்பட்ட questionsக...

SRH vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ விட்டா, SRH க்கு Playoffs chance முடிஞ்சிடும். Toss ஜெயிக்குற DC அணி , முதல்ல fielding choose பண்றாங்க. Warner & Saha , ரொம்ப பயங்கரமா start பண்றாங்க. Rabada வந்தாலும் சரி, Nortje வந்தாலும் சரி, நி யார கூட்டிட்டு வந்தாலும், இன்னிக்கி அவன் செத்தான்'னு ஒரு முடிவோட உள்ள வந்து ஆடுறாங்க. அது காரணமா, 219/2னு Everest score அடிக்குறாங்க. அது திரும்ப chase பண்ண முடியாம, சிக்கி சுன்னாம்பு ஆகுறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ, Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, அப்படியே comments sectionல உங்களோட views and opinions, post பண்ணுங்க.  "அதான் உனக்கு chasing வரலயே, பின்ன ஏன் அதையே புடிச்சு தொங்கிட்டு இருக்கன்னு" social mediaல பல பேர் கேள்வி கேட்டுட்டு, troll பண்ணிட்டு இருக்காங்க. ஆனால், அது எல்லாம் தாண்டி வேற ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னு இந்த blogல பார்க்கலாம் !! இந்த match'அ DC நோக்கத்துக்கு உண்மையான காரணம், Shreyas Iyer 'ஓட experimenta...

ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் ஓர் அலசல்

Image
அடுத்த மாதம்,   இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி , ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது ஓர் 3 மாத கிரிக்கெட் தொடராக அமையும் நிலையில், இதற்கான வீரர்களை எப்போது தேர்ச்சி செய்வர், அதன் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று பல வகையான கேள்விகள் மக்கள் மனதுள் இருந்து வரும் நிலையில், தற்போது, 32 வீரர்களை கொண்டு ஓர் அணியின் பட்டியலை, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியம், தனது Twitter பக்கத்தில் வெளியிட்டது. இந்த வீரர்களின் தேர்ச்சியை அலசி ஆராய்ந்து எழுதப்படும் பதிவே இது ஆகும். முதலில், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 23ம் தேதியன்று துவக்கம் பெரும் நிலையில், அதன் அணிவகுப்பை நாம் எடுத்து பார்க்க வேண்டும்.  அதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் - விராட் கோலி ( C ), ஷிகர் தவான் , மயாங்க் அகர்வால் , KL ராகுல் ( VC ), சஞ்சு சாம்சன் , மனிஷ் பாண்டே , நவதீப் சைனி , ஜஸ்பிரிட் பும்ரா , முஹம்மத் ஷமி , ஷ்ரேயஸ் ஐயர் , ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , யுஸ்வேந்திர சஹால் , வாஷிங்டன் சுந்தர் , தீபக் சஹார் , வருண் சக்ரவர்த்தி .  அதற்கு பின், டெஸ்ட் கிரிக்கெட்...

KXIP vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, பஞ்சாபுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையில match நடக்குது. Toss ஜெயிக்கிற பஞ்சாப் அணி, Sharjahல முதல்ல bowling choose பன்றாங்க. கொல்கத்தாவுக்கு ஆரம்பத்துலயே சரிவு நடக்குது. ஷமி யோட அசத்தலான bowling காரணமா, top order batsmanலாம் வந்த வழியிலேயே திரும்ப போனாங்க. Gill மட்டும் 19வது ஓவர் வரைக்கும் நின்னு விளையாடியது காரணமா, 149/9னு ரொம்பவே சின்ன score அடிக்கிறாங்க. அதை, நெனச்சத விட வேகமாவும், assaultடாவும் chase பண்ணிட்டு போறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க.    ரெண்டு teamsகும் must win game. ஆனாலும், எப்படி one sided match'அ மாறுச்சு. கொல்கத்தாவுக்கு ஏற்கனவே பல பேரோட  Pre Match Analysis Video லசொன்ன மாதிரியே எப்படி நடந்துச்சு ? இந்த மாதிரி ஒரு turning point ட கொண்டு வந்தது யாரு ? இப்படி பல கேள்விகள் உங்க மனசுல இருக்கும். அதுக்கான பதில் தான் இந்த blog post !  இந்த matchஅ பொறுத்த வரைக்கும் ரெண்டு turning point. ஒன்னு ஷமி யோட opening spell. KKR 'ஓட ...

2020 IPL Play-Off Schedule and Women's IPL Schedule

Image
As we have been in the business end of the league stage of ongoing Indian Premier League which is staged at United Arab Emirates. Now, the news about venues hosting the play off games have been announced with its dates and venues announced The media release stated that, Dubai and Abu Dhabi venues are planning to host the play respectively. While asking about Sharjah, they were planned to host Women's IPL games, with women cricketers undergoing the quarantine period. Qualifier 1 - Dubai International Stadium, Dubai Eliminator - Sheikh Zayed International Stadium, Abu Dhabi Qualifier 2 - Sheikh Zayed International Stadium, Abu Dhabi Final - Dubai International Stadium, Dubai Many were expecting that audience might be allowed to visit the stadium, but the possibility looking minimal. Along with this, Women's IPL Schedule have been announced. 4th November - 7:30pm - Supernovas VS Velocity, Sharjah 5th November - 3:30pm - Velocity VS Trailblazers, Sharjah 7th November - 7:30pm - Tr...

RCB vs CSK | RR vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. ரெண்டுலயுமே, இந்த முறை chasing teams தான் ஜெயிச்சாங்க. இதுல ஒரு பக்கம், result பெருசா play-off'அ பாதிக்காதுன்னாலும், இன்னொரு matchல வர்ற result, நிச்சயமா impact பண்ணும். அதே மாதிரி, impact பண்ணவும் பண்ணுச்சி. இதுல இன்னொரு கூத்து, ரெண்டுமே one sided game'அ அமைஞ்சுது. இந்த ரெண்டு matchesல இருக்குற முக்கியமான turning point என்னன்னு இந்த blog ல நாம பார்க்கலாம். முதல்ல பெங்களூருக்கும்   சென்னைக்கும் இடையில match நடக்குது. Toss ஜெயிக்கிற பெங்களூரு முதல்ல batting choose பன்றாங்க. ஆனா, நெனச்ச அளவுக்கு runs வரவே இல்ல. Wicket slowங்கிற காரணத்தை நாம முன்னாடி எடுத்து வெச்சாலும், இந்த காரணத்தை தாண்டி, நெறய எடத்துல chance எடுக்காம இருந்தாங்க. கடைசில, நெறய wickets விட்டதுனாலயும், boundaries வராததுனாலயும், வெறும் 145/6 தான் அடிச்சாங்க. அதை திரும்ப chase பண்ண CSK, Ruturaj Gaikwadஓட அசத்தலான batting காரணமா, கொஞ்சம் easyயா chase பண்ணிட்டாங்க. கடைசியா, ஒரு youngster spot ஆகியிருக்கான். இந்த match'ஓட Post Match Analysis video வ Cric_Muhan YouTube channel ல po...