எங்கு சென்றாலும் அரசன் தான் - விராட் கோலி
விராட் கோலியோட வாழ்க்கையை பத்தி கேட்டோம்னா, எல்லாரும் சொல்லுறது 2008 Under 19 World Cup ஜெயிச்சு கொடுத்துட்டு, அதே வருஷத்துல, Indian national teamல இடப்பெற்று, ஆரம்பத்துல சில சரிவு இருந்தாலும், போகப்போக runs நிறையா குவிச்சு, 2011 World Cup Tournamentல, spot கெடச்சு அந்த tournamentல, Number 4 spotல, அவரோட game எல்லாரோட கவனத்தையும் கொள்ளையடிச்சுது. அங்க இருந்து, RCB அந்த வருஷம் retain பண்ண ஒரே playerரா உள்ள வந்து, IPLலயும் சிறப்பா செயல்பட்டு, அதுக்கு அடுத்து வந்த overseas toursல சில சுமாரான performances கொடுத்தாலும், பரவாயில்ல இவர் மேல நம்பிக்கை வெக்கலாம்'ன்னு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்து, ஏகப்பட்ட matches ஜெயிச்சு கொடுத்து, Indian Team Captainனாகவும் மாறி, இன்னிக்கி எல்லா youngstersகும் ஒரு role modelலா இருந்துட்டு இருக்காரு. இங்க, இவரோட achievements'அ தாண்டி, ஒரு தோனி ரசிகனா இவரோட gameம நான் விமர்சிக்க போறேன்.
பொதுவா, விராட் கோலி'ங்கிற பெயர நாம சொன்னோம்னா, ரெண்டு பேரோட compare பண்ணி பேசுவாங்க. ஒன்னு சச்சின், இன்னொன்னு கங்குலி. இவர் அடிக்கிற centuriesக்கும், இவரோட batting style'உம் பாத்து, இவர் Tendulkarரோட 100 centuries record முறியடிக்கப்போறாருன்னு எதிர்பார்க்கப்படுது. கங்குலியோட compare பண்ணுறதுக்கு முக்கிய reason, ரெண்டு பேருக்கும் இருக்குற அந்த aggression தான். நீ அடிச்சா, நான் திருப்பி அடிப்பேன்கிற குணம். ஆனா, இவங்கள்லாம் தாண்டி, இவர்கிட்ட தோனியோட ஒரு சாயல்ல நான் பாக்குறேன். என்னடா சொல்லுற, தோனி ரொம்பவும் நிதானமா செயல்படுவாரு, அதே நேரத்துல கோலி கிட்ட அந்த ஒரு aggression அதிகமாவே இருக்கும். Battingனு எடுத்து பார்த்தாலும், கோலியோடது ரொம்ப ரொம்ப orthodoxஅ இருக்கும், தோனியோட gameல அந்த அளவுக்கு orthodox'அ இருக்காது. பின்ன எப்படி நீ தோனியோட சாயலை கோலி கிட்ட கண்டன்னு நீங்க கேக்கலாம்.
Running between the wickets, அப்படிங்கிற வித்தையை ஒழுங்கா பயன்படுத்திகிட்ட ரெண்டு பேர் இவங்க தான். 1 run'அ 2 run'னா மாத்துறது, 2ஐ 3ஆ மாத்துறதுன்னு அந்த ஈடுபாடு ரெண்டு பேர் கிட்டயும் இருக்கும். சமீப காலத்துல தான், இந்த தந்திரத்தை நெறய பேர் கத்துக்கிட்டு விளையாடுறாங்க. ஆனா, ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடியே, தோனி அவர்கள் கூட சேர்ந்து கோலி அவர்களும் ஈடுகொடுத்து ஓடுவார். Runs conversion மட்டும் இல்லாம, fielder மேல pressure போட்டு runs ஓடுறதுலயும், தோனி அவர்களோட ஒரு சாயல் கோலிக்கிட்ட பாக்குறேன். Fitness levels அதிகமா இருந்தா மட்டும் தான், இந்த ஒரு விஷயத்தை continuous'அ பண்ண முடியும். அதுக்கு ஒரு முக்கியப்புள்ளியா இருந்தது இவங்க ரெண்டு பேர் தான். கோலியே, இதை தன்னோட instagram postல, 2016 T20 World Cupல நடந்து India vs Australia match'ஓட situationல இவர் மட்டும் Dhoni இருக்குற pic'அ post பண்ணி, " Unforgettable Day, this man made me to run like in a fitness test"னு caption add பண்ணுறாரு.
கோலி fans சில பேர் இதை ஒத்துப்பாங்களானு தெரில, ஆனா இங்க ஒரு உண்மையா மட்டும் நான் சொல்லிடுறேன். 2011ல நடந்த எல்லா home seriesலயும், கோலி தன்னோட impact'அ prove பண்ணிகிட்டே இருந்தாரு. ஆனா, அந்த வருஷத்துல நடந்த overseas tour'ஆன West Indies, England மற்றும் Australiaல பெருசா perform பண்ணல. குறிப்பா test cricketல அவரோட numbers, ரொம்பவே poorரா இருந்துச்சு. அப்போ அவரை drop பண்ணலாம்னு, selection committee முடிவெடுக்கும் போது, அந்த முடிவை condemn பண்ணி, திரும்ப திரும்ப chance கொடுக்கலாம்னு சொன்னது Dhoni அவர்கள் தான். 2014லயும் Englandல மோசமா விளையாடினாரு. அப்போவும், கோலியை back பண்ணாரு.
2017ல Kohli அவர்கள் captainஆகணும்னு, அவருக்கு ஏத்த மாதிரி, தேவையான resourcesஅ பாத்து பாத்து கொடுத்தாரு தோனி. அதுக்கு அப்பறோம், success பண்ணது கோலியோட திறமை தான். இருந்தாலும், ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற அந்த நம்பிக்கை ! அது தான் இங்க பிடிச்சிருக்கு. இவ்ளோ ஏன், 2018ல Dhoni அவர்கள் formoutல இருக்கும்போது, நெறையா எடத்துல கோலி back பண்ணாரு.
தோனி அவர்களோட retirement announce பண்ணும்போது, Virat Kohli அவர்கள் தன்னோட Social media IDsல, அவர் 2014 மற்றும் 2016 t20 World Cupsல நடந்த matches'ஓட videos post பண்ணி, captionல " Thank you for these moments skip. I couldn't explain the mutual trust, respect and understanding we share better than these two videos I'm posting here today. The first one explains perfectly well who he is , selfless in the most intense moments. The second one is about the kind of trust & chemistry we had over the years while batting together. In this moment I was only focused on his call & I knew we both would be able to make those 2 runs because of the trust we shared in one another. He called & I put my head down and ran ! Mutual respect and understanding isn't a thing of chance, it develops naturally when two individuals are aligned & have the same vision and for us, that vision was always to make India win ! Thank you for all these memories skip. 🇮🇳💙@mahi7781" இவங்க ரெண்டுபேருக்கும் நடுல இருக்குற அந்த bonding, எனக்கு புடிச்சிருக்கு.
நம்ம தல, ஒருத்தர் நல்லா வரணும்னு பார்த்து பார்த்து செதுக்கி, வெளில கொண்டு வந்தாரு. அந்த ஒரு நபரை எதிர்த்து இப்போ நம்ம fans'உம், அவங்க fans'உம் சண்டை போட்டுட்டு இருக்கோம். எதுக்கு சண்டை, ஏன் சண்டைனு நான் கேள்வி கேக்கல. ஆனா, இவ்ளோ சண்டையையும் தாண்டி, ரெண்டு பேருக்கும் நடுல personalலா இருக்குற understanding, என்னை பூரிச்சுபோக வெக்குது.
இன்னும் பல சாதனைகளுடனும், வெற்றிகளுடனும், பல்லாண்டு வாழ வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் " King Kohli "
Comments
Post a Comment