Posts

Showing posts with the label ENG vs SL

SL vs ENG - இரண்டாம் Test, நான்காம் நாள் Review

Image
பொதுவா, ஒரு test matchல என்னதான் dominant performance கொடுத்தாலும், ஏதாவது ஒரு sessionல சொதப்பிட்டா, மொத்த matchசுமே கை'ய விட்டு போயிடும். சிங்கத்தோட மொத்த உழைப்பையும் வீணடிச்சு, அதோட பரிசை எப்படி ஒரு Hyena, பிடிங்கிட்டு போவுதோ, அப்போ ஒரு depressed situation ஏற்படும். அந்த மாதிரி ஒரு சொதப்பல் தான், இங்க Sri Lankaவுக்கு நடந்திருக்கு. நேத்து, 339/9னு இருந்த England, அதுக்கு அப்புறம் வெறும் 5 runs தான் add பன்றாங்க. இந்த பக்கம் Embuldeniyaவோட சம்பவத்தை தூக்கி சாப்புட்ற மாதிரி, அந்த பக்கத்துல இருந்து Dom Bess மற்றும் Jake Leach, சரமாரியான சம்பவம் செய்யுறாங்க. ஒன்னும் இல்ல, 4வது நாள்ல இருந்த ஒரு turn, மூணாவது நாள்ல விட அதிகமா இருந்துச்சு. Pitch'அ பொறுத்த வரைக்கும், ஏகப்பட்ட deviation இருந்துச்சு. கூடவே, நல்ல bounce'உம் இருந்துச்சு. இந்த ரெண்டு விஷயத்தையும் சரியா use பண்ணுறாங்க. காத்துல நல்ல flight பண்ணி bowl பண்ணிட்டு இருந்தாங்க. Batsmanனோட பொறுமையா எந்த அளவுக்கு சோதிக்க முடியுமோ, அந்த அளவுக்கு சோதிச்சு, ஆசைய காட்டிட்டே இருந்தாங்க. Slip, short leg, Silly pointன்னு bowlerரோட turn...

SL vs ENG - இரண்டாம் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது, நான் எதிர்பார்த்தது, இன்னிக்கி நாள்ல Spinnersக்கு support அதிகமா இருக்குங்கிற விஷயம் தான். அதே நேரத்துல, Root கிட்ட இருந்து நல்ல performance எதிர்பாக்கலாம்னும் எழுதியிருந்தேன். அதே மாதிரி நெறய விஷயம் நடந்துச்சு, சில விஷயம் அதை மீறியும் நடந்துச்சு. அப்படி என்ன நடந்துச்சுன்னு இந்த blogல நாம பாக்கலாம். வழவழ'ன்னு பேசாம matterருக்கு வா'ன்னு கதறுற ஒவ்வொரு வாசகருக்கும், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லுறேன். முதல் விஷயம், Embuldeniya வோட 7 wicket haul. இந்த Series'அ பொறுத்தவரைக்கும், England sideல இருந்து ஏகப்பட்ட heroes உருவானாலும், Sri Lankaவோட sideல இருந்து உருவான heroனா அது இவரு தான். Middle and off stump lineல pitch பண்ணி, Right Handed Batsmanனுக்கு வெளில கொண்டு வந்துட்டே இருந்தாரு. அதுக்கு ஏத்தாப்ல, ரெண்டு slip fielders set பண்ணாங்க. சில முறை, curved arm action இல்லாம, கொஞ்சம் straighterரா கொண்டு வந்தாரு. அந்த straighter angle delivery, batsmanனோட மனசுல ஏகப்பட்ட குழப்பத்தை உண்டாக்குச்சு. அந்த குழப்பம் தான், இவரோட வெற்றி ! இ...

SL vs ENG - இரண்டாம் Test, இரண்டாவது நாள் Review

Image
நேத்து , நாள்ல பொறுத்த வரைக்கும், Sri Lanka நெனச்சத விட கொஞ்சம் பொறுமையா விளையாடுனாங்க, flat pitch'அ ஒழுங்கா use பண்ணலன்னு நான் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, அதை தாண்டி Angelo Mathews 'ஓட ஆட்டம் நல்ல இருந்துச்சுன்னு சொன்னேன். கூடவே, Andersonனுக்கு வயசானாலும் இன்னும் அவரோட performance குறையவே இல்லனும் சொல்லியிருந்தேன். அது எல்லாமே நடந்துச்சு. முதல்ல, நான் Anderson கிட்ட இருந்து ஆரம்பிக்குறேன். மனுஷனுக்கு, வயசே ஆவதான்னு நமக்கு நாமளே கேட்டுக்குற அளவுக்கு, இன்னும் அதே control'ஓட bowl பண்ணிட்டு இருக்காரு. Test cricketல தன்னோட 30வது 5 wicket haul எடுக்குறாரு. Fast Bowlerகள்'ல Richard Hadlee மட்டும் தான் இவரை விட அதிக 5 wicket hauls எடுத்து இருக்காரு ( 36 ).  வானத்துல மேகம் இருந்தா மட்டும் தான் effectiveவா இருப்பாரு, Clouderson அப்படி இப்படினு குறை சொன்னவன் எல்லாருக்கும், தான் யாருனு இன்னொரு முறை நிரூபிச்சிட்டு போறாரு. Cricketல ஒரே கட்சி தான், ஒரே கொடி தான், அது இந்த Andersonனோடது தான் bowling மூலமா சொல்லிட்டு போயிட்டு இருக்காரு. இன்னிக்கி நாள் முடிக்கும்போது, 40 runs கொடுத்து அ...

SL vs ENG - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Image
இந்த match'ஓட கடைசி நாளுக்கு நாம வந்தோம்னா, பெருசா ஒன்னும் நடக்கல. எல்லாமே எதிர்பார்த்த மாதிரி, 74 runs'அ இங்கிலாந்து ரொம்பவே ஈஸியா chase பண்ணிட்டாங்க. நேத்து, evening இருந்த அந்த ஒரு spark, இன்னிக்கி காலைல இல்ல.அதுக்கு காரணம், scoreboardல board மட்டும் தான் இருந்துச்சு, scoreருன்னு ஒன்னு இல்ல. இதை வெச்சுட்டு என்ன பண்ணமுடியும். ஆனா, இந்த match'அ ஏன் Sri Lanka விட்டாங்கன்னு இந்த blogல நாம பார்க்கலாம். இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spinக்கு நல்ல assistance கொடுத்துச்சு. அப்படிப்பட்ட ஒரு pitchல, Sub Continent team'ஆன Sri Lanka, toss win பண்ணி முதல்ல batting எடுக்குறாங்க. பேருக்கு தான் Sub Continent nation, ஆனா அனுபவம் இல்லாததுனாலயும், சரியான technique இல்லாத காரணத்துனாலயும், உள்ள வந்த வேகத்துலயே திரும்ப pavilionனுக்கு போய்ட்டு இருந்தாங்க. Teamமோட senior cricketerகளான Angelo Mathews மற்றும் Dinesh Chandimal, ரெண்டு பெரும் சேர்ந்து ஓரளவுக்கு resistance குடுத்தாலும், அது போதுமானதா அமையவில்லை. எல்லா பக்கத்துல இருந்தும் contribution வந்தா மட்டும் தான், fight பண்ண...

SL vs ENG - முதல் Test, நான்காம் நாள் Reivew

Image
நேத்து, Sri Lanka போராட ஆரம்பிச்சவங்க, இன்னிக்கி திரும்ப battingக்கு அவங்களால எந்த எல்லை வரைக்கும் போராட முடியும்ன்னு பல நாள் கழிச்சு, உலகத்துக்கு காமிச்சாங்க. இங்க, இங்கிலாந்து teamமோட பக்கத்துலயும் சில positives இருக்கு, Sri Lankan teamமோட பக்கத்துலயும் சில positives இருக்கு. இங்கிலாந்து ஜெய்க்குற நிலைமையில இருக்காங்கன்னு, வெளில இருக்கிறவங்களுக்கு பாத்தா தெரியும். ஆனா, match பாத்தவங்களுக்கு தான், Sri Lankaவோட போராட்டம் எப்படி இருந்துச்சுன்னு புரியும்.  நேத்து, 70 runs கிட்ட அடிச்சிருந்த Thirimanne, இன்னிக்கி தன்னோட centuryய reach பண்ணுறாரு. 8 வருஷம் கழிச்சு, test cricketல Thirimanne அடிக்கிற முதல் century இது. கடைசியா, 2013ல Bangladeshக்கு எதிர்க்க century அடிச்சது. அதுக்கு அடுத்து test cricketல அவரோட average எடுத்து பார்த்தோம்னா, 20  இருந்துச்சு. ஒரு top order batsmanனுக்கு, இந்த averageலாம் பத்தாது. Root டோட ஒரு வருஷ தவத்தை நாம பெருமையா பேசும்போது, Thirimanneவோட 8 வருஷ தவத்தை நாம பாரட்டலைன்னா நல்லா இருக்காது. இன்னிக்கி அவரு ஆடுன ஆட்டம், அவ்ளோ நேர்த்தியா இருந்துச்சு. மனசுல ...

SL vs ENG - முதல் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது, ரூட் 160 runs கிட்ட அடிச்சிருந்தாரு. கூடவே, Dan Lawrence, தன்னோட debut matchல ஒரு aggressive fifty அடிச்சாரு. இங்கிலாந்துக்கு ரொம்பவே நல்ல நாளா அமைஞ்சுது. நிச்சயமா Sri Lanka, இந்த match'அ ஜெயிக்க மாட்டாங்கன்னு எல்லாரும் நெனச்சுட்டு இருந்தாங்க. ஆனா, Sri Lanka had other ideas. இன்னிக்கி நாள்ல, Root தன்னோட 200 cross பண்ணுறாரு. 4வது 200 இது, second most double centuries scored by an England batsmanனும் இவர் தான். காத்திருத்தல் அழகுன்னு சொல்லுவாங்க. இரு வருஷமா 100 கூட அடிக்க முடியாம கஷ்டப்பட்டாரு. அந்த கஷ்டமும், அந்த effortடும், ஒரு வருஷம் கழிச்சு 200ரா வந்து நிக்குது. ரொம்பவே செமயான 200.  இந்த 200ல தான் நிறையா sweep shots ஆடிருக்காருன்னு சொல்லுறாங்க. Spinners'அ எப்படி கையாளனும்னு, ஒரு demo காமிச்சிட்டு போயிருக்காரு. ஆனா, நேத்து நல்ல நிலைமையில இருந்த இங்கிலாந்து, இன்னிக்கி Rootட்ட தாண்டிவேற யாருமே ஒழுங்கா விளையாடல. Lower order fail ஆகியிருக்கு.  இந்த failureருக்கு ஒரு முக்கிய காரணம், தில்ருவான் பெரேரா'வோட bowling. நேத்து, struggle பண்ண அவரு இன்னிக்கி இந...

SL vs ENG - முதல் Test, இரண்டாம் நாள் Review

Image
இன்னிக்கி நாள்ல, மழை ரொம்ப அதிகமாவும் match ரொம்ப கம்மியாவும் இருந்துச்சு. மழை, இடி, மின்னல், புயல்ன்னு  எங்களை தடுக்க முடியாதுன்னு England ஒரு பக்கம் அசுரவாதம் செஞ்சுட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் சொந்த மண்ணுல, Sri Lanka மண்ணை கவ்வுறத பாக்கும்போது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு. ஒரு காலத்துல, சிங்கம் மாதிரி கர்ஜனையோட வாழ்ந்துட்டு இருந்த Sri Lanka, இப்போ தள்ளாடிட்டு இருக்காங்க. இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spin bowlingக்கு ஏத்தாத அமஞ்சியிருக்கு. ஆனாலும், மழை பேஞ்ச காரணத்துனால, line and length perfectடா இருந்தா மட்டும் தான் spinnersகு கை கொடுக்கும். அந்த அடிப்படையில, மொத wicketடா நம்ம Bairstow, Embuldeniyaகிட்ட மாட்டுறாரு. Batsmanன நல்லா முன்னாடி வர்ற வெச்சு play பண்ண tempt பண்ணாரு. அந்த நப்பாசை, Bairstowவுக்கு எமனா அமைஞ்சுது. அதுக்கு அடுத்து, ரூட் மற்றும் debutantடான Dan Lawrence. Root அவர்களுக்கு கடைசியா 2019ல தான் century வந்துச்சு. அதுக்கு அடுத்து போன வருஷம் முழுக்க century எதுவுமே இல்லாம தான் வெளில போனாரு. அதுவும், அந்த கடைசி century, இதே Galleல தான் அடிக்குறா...

SL vs ENG, 2021 - முதல் Test, முதல் நாள் Review

Image
South Africaவுல ஒரு மோசமான series. ஏகப்பட்ட Injuries ஏற்பட்டது காரணமா, Sri Lanka team, அவங்களோட balance'அ இழந்தாலும், உண்மையான காரணம் அதையும் தாண்டி, அவங்க teamல இருக்குற inexperience தான். Awayல தான் தோத்துட்டாங்க, அதான் home series இருக்கேன்னு, கல்லே'ல இங்கிலாந்துக்கு எதிரா விளையாடுறாங்க. ஆனா, இன்னிக்கி நாள்ல, Sri Lankaவுக்கு ஏமாற்றம் தான். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், இங்கிலாந்து bowlers தான் ராஜா. திமுத் கருணாரத்னே இல்லாதது, அணிக்கு ஒரு தூண் இல்லாத மாதிரி அமைஞ்சுது. Toss ஜெயிச்ச Sri Lanka team, முதல்ல batting choose பன்றாங்க. Toss ஜெயிச்சு decision எடுத்தா மட்டும் பத்தாது, அதை execute'உம் பண்ணனும்.  Scorecard பாத்தோம்னா Dom Bess அசத்தலா bowl பண்ணியிருக்கார், ரொம்ப நாள் கழிச்சு ஒரு தேவையான comeback, அப்படி இப்படின்னு ஏகப்பட்ட விஷயம் சொல்லலாம். ஆனா உண்மை, இந்த pitch முழுக்க முழுக்க spin based wicket. அதுலயும், Srilankan batsman, ஒருத்தன் கூட, ballலுக்கு ஏத்த footworkல shots ஆடல. சில பேர் ரொம்பவே cheapபா out ஆகிட்டு போனாங்க. உதாரணத்துக்கு, நம்ம Niroshan Dickwellaவோட ...

Sri Lankan Test Squad for South Africa and England Series

Image
Sri Lankan cricket team has announced their test squad for South Africa and England Test Series. The test matches to be played in this series will amount to the ICC World Test Championship points, which is currently ongoing. Facing South Africa first, at away, will be a challenge, as the One Day Series between England and South Africa at South Africa have been cancelled due to the sudden outbreak of COVID-19 among the players of both the nations.  Even though these things prick them, Sri Lanka have confirmed that the tour will commence as per the schedule. Adding sugar to the injury, recently there were 10 domestic South African cricketers from which few will be featuring in this tour, have been tested COVID Positive. Replacements have been announced and also Sri Lanka has flew to South Africa to play two Tests. After these two tests, they will be facing England in home. Again only for two tests which has been scheduled to take place on January 14-18 and January 22-26 respective...

2021 இலங்கை - இங்கிலாந்து தொடர் !!

Image
இலங்கை அணியை குறித்து முதன் முதலில் வெளியிடப்பட்ட செய்தி யாதெனில், கண்டிப்பாக  தென் ஆஃப்ரிக்கா நாட்டுக்கு பயணம் மேற்கொள்வர். அதுவும், அட்டவணையிட்டவாறு, 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்பதே தான். தலைப்பில், இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நடக்கவிருக்கும் தொடர் என எழுதிவிட்டு இங்கு தென் ஆஃப்ரிக்கா நாட்டைப்பற்றி குறிப்பிடுகிறாயே ? என நீங்கள் கேள்வி கேக்கலாம். மீண்டும் கூறுகிறேன், இப்பதிவு இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நடக்கவிருக்கும் தொடரை குறித்ததே. அப்போது, ஏன் தென் ஆஃப்ரிக்கா ? இங்கிலாந்து - தென் ஆஃப்ரிக்கா தொடர், சில கொரோனா தொற்றுக்கள் உறுதியானதால், ரத்தானது. அதனைத்தொடர்ந்து, இலங்கை அணியும், தென் ஆஃப்ரிக்கா நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை விரும்பமாட்டார்கள் என அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில், இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணி, பயணத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதன், அறிவிப்பை நான் இங்கே சிறிதாக பதிவிட்டேன். இலங்கை - இங்கிலாந்து தொடரை கண்டோமேனில், இங்கிலாந்து அணி வருகின்ற ஜனவரி மாதம், 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்கள். இதில், பயணம் மேற்கொள்ளவி...

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து - 2021

Image
தென் ஆஃப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, மூன்று T20 போட்டிகளில் பங்கேற்ற பின், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவிருந்த நிலையில், உறுதி செய்யப்பட்டுள்ள சில கொரோனா தொற்றுக்களின் காரணத்தினால், மீதமுள்ள போட்டிகளை முழுவதுமாக ரத்து செய்துள்ளார்கள் . அத்தொடருக்குப்பின், தற்போது  இலங்கை நாட்டுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் விளையாட திட்டமிட்டுள்ளது. தென் ஆஃப்பிரிக்காவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள், இலங்கையில் ஏற்படாது என்பதற்கான வாய்ப்புகள் யாது ? என வினவினால், அதற்கான பதில் தற்போது நடைபெற்று வருகின்ற Lanka Premier League எனும் அவர்கள் நாட்டினை சேர்ந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரே ஆகும். வெற்றிகரமாக, Hambantotaவில் நடைபெற்று வருகின்ற, இத்தொடர் தான் அத்தாச்சி. ஆதலால், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரும், தென் ஆஃப்பிரிக்கா - பாக்கிஸ்தான் தொடரைப்போன்று, ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தொடரில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகள். அதனைக்கடந்து, மற்ற Formatடுகளில் உள்ள போட்டிகள் ஏதும் நடத்த திட்டமிடாதது, சற்றுவருத்தமளிக்கிறது. இருப்பினு...