SL vs ENG, 2021 - முதல் Test, முதல் நாள் Review

South Africaவுல ஒரு மோசமான series. ஏகப்பட்ட Injuries ஏற்பட்டது காரணமா, Sri Lanka team, அவங்களோட balance'அ இழந்தாலும், உண்மையான காரணம் அதையும் தாண்டி, அவங்க teamல இருக்குற inexperience தான். Awayல தான் தோத்துட்டாங்க, அதான் home series இருக்கேன்னு, கல்லே'ல இங்கிலாந்துக்கு எதிரா விளையாடுறாங்க. ஆனா, இன்னிக்கி நாள்ல, Sri Lankaவுக்கு ஏமாற்றம் தான்.

இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், இங்கிலாந்து bowlers தான் ராஜா. திமுத் கருணாரத்னே இல்லாதது, அணிக்கு ஒரு தூண் இல்லாத மாதிரி அமைஞ்சுது. Toss ஜெயிச்ச Sri Lanka team, முதல்ல batting choose பன்றாங்க. Toss ஜெயிச்சு decision எடுத்தா மட்டும் பத்தாது, அதை execute'உம் பண்ணனும். 

Scorecard பாத்தோம்னா Dom Bess அசத்தலா bowl பண்ணியிருக்கார், ரொம்ப நாள் கழிச்சு ஒரு தேவையான comeback, அப்படி இப்படின்னு ஏகப்பட்ட விஷயம் சொல்லலாம். ஆனா உண்மை, இந்த pitch முழுக்க முழுக்க spin based wicket. அதுலயும், Srilankan batsman, ஒருத்தன் கூட, ballலுக்கு ஏத்த footworkல shots ஆடல.

சில பேர் ரொம்பவே cheapபா out ஆகிட்டு போனாங்க. உதாரணத்துக்கு, நம்ம Niroshan Dickwellaவோட wicketடுக்கு வந்தோம்னா, cut shot ஆடவேண்டிய ballல, ஒழுங்கா ஆடாம. lazyயா time பண்ணி, gully கிட்ட catch கொடுத்துட்டு போகுறாரு. அதுக்கு அடுத்து, Hasarangaவோட தேவையே இல்லாத reverse sweep. நேரா வர்ற ballலுக்கு, எதுக்கு reverse sweep. T20 ஆடவே இல்லையே, அப்படினு ஒரு கேள்வி வர்ற அளவுக்கு ரொம்பவே மோசமான execution.

Mathews மற்றும் Chandimal ஓரளவுக்கு தாக்குப்புடிச்சு நின்னாங்க. ஆனா, அதை நெனச்சும் நாம ரொம்ப பெருமை போட்டுக்க முடியாது. இன்னிக்கி நாளோட உண்மையான hero, Stuart Broad தான். பொதுவா, left handers batting பண்ணிட்டு இருக்கும்போது, அவரு around the wicketல இருந்து bowl பண்ணி, off stumpல aim பண்ணுவாரு. அங்க கிடைக்குற angleல சின்ன edge எடுக்க முடியும்.

இன்னிக்கி அதையே oppositeடா பண்ணாரு. Over the wicketல இருந்து, Batsmanனுக்கு வெளில கொண்டு வந்துட்டு இருந்தாரு. அதுல மாட்டுனது தான், லஹிரு திருமண்ணே. Pitchல பெருசா support எதுவுமே இல்லைனாலும், வெறும் angle வெச்சு wicket எடுக்குறதுலாம், experienceல தான் வரும். அந்த experience தான், இவருக்கு இப்போ காய் கொடுத்திருக்கு.

135 runsக்கு all out ஆகிட்டு போயிட்டாங்க. திரும்ப, Sri Lankaவும் spinners வெச்சு rotate பன்றாங்க. குறிப்பா, Embuldeniyaவ வெச்சு. அதோட பலனா ரெண்டு openersஉம், pavilionனை நோக்கி திரும்ப போறாங்க. ஆனா, அதுக்கு அடுத்து Root மற்றும் Bairstow, தங்களோட techniqueல சின்ன பிசிறு கூட இல்லாம, இன்னிக்கி நாள்ல கடத்துறாங்க. 127/2 னு ஒரு score அடிச்சு, இன்னிக்கி நாள்ல முடிக்குறாங்க. 

     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?