2022 மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை Schedule வெளியானது !
2021ம் ஆண்டின் துவக்க காலத்தில் நடைபெறுவதாக இருந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், கொரோனா நோயின் காரணத்தினால் ஓர் ஆண்டு காலத்துக்கு தள்ளிவைத்தது ICC. 2020ம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த பல தகுதி சுற்று போட்டிகள் தடைபட்டது. அப்போட்டிகளை மீண்டும் நிகழ்த்தி, அதன் பின் பங்குபெறும் அணிகளை தேர்வு செய்வது குறுகிய காலகட்டத்தில் சாத்தியமற்ற காரியம் ஆகும். ஆதலால், ஓராண்டுக்கு இத்தொடரை நாங்கள் தள்ளிவைக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின், தற்போது ICC வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மகளிர் உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை இணைத்துள்ளார்கள். 2022ம் ஆண்டில், நியூஸிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும், மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை தற்போது வெளியிட்டது ICC. இத்தொடர், மார்ச் மாதம் 4ம் தேதியன்று துவக்கம் பெற்று, ஏப்ரல் மாதம் 3ம் தேதியன்று நிறைவு பெரும். இவற்றுள் 8 அணிகள் அடங்கும், அதில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆஃப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 5 ஐந்து அணிகள், முன்னதாகவே தகுதிபெற்றுள்ளார்கள். மீதம் உள்ள 3 அணிகளை தேர்வு செய்ய தகுதி சுற்று போ...