மேலும் Knight Ridersன் ஆதிக்கம் !!
ஷாருக்கான் அவர்களுக்கு உள்ள கிரிக்கெட்டின் காதல் மேலும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. 2008ம் ஆண்டில், கொல்கத்தா நகரை சார்ந்த ஓர் IPL அணிக்கு ஓனராக பொறுப்பேற்கின்றார். பின்னர், கரிபீன் தீவுகளை சார்ந்த ஓர் League தொடரை அறிவிக்க, அதில் Trinidad மற்றும் Tobago தீவுகளை சார்ந்த ஓர் அணியை, விலைகொடுத்து வாங்குகிறார். இவ்விரு அணிகளும், அந்தந்த தொடர்களில் கோப்பையை தட்டிச் சென்றுள்ளார்கள். தற்போது கிடைத்த செய்தி யாதெனில், இவர்களை தொடர்ந்து Major League Cricket தொடரில் உள்ள ஓர் அணிக்கு இவர் ஓனராக பணியாற்றவுள்ளார் என்பது தான்.
Major League Cricket என்றால் என்ன ? அமெரிக்கா நாட்டை சார்ந்த, 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தான் இந்த Major League Cricket தொடர் ஆகும். சமீபகாலத்தில், அமெரிக்கா நாடு கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். இத்தொடர், 2022ம் ஆண்டில் துவக்கம் பெரும் என்றும், அதற்காக சில baseball மைதானங்களை தேர்வு செய்துள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கு தொடர்ச்சியாக, 2022ம் ஆண்டிற்குள், Grand Prairie நகரில் உள்ள Air Hogs மைதானத்தை, கிரிக்கெட் விளையாடும் தரத்துக்கு உயர்த்தும் பொருட்டு, புதுப்பிக்கும் பணியை துவங்கியுள்ளார்கள். ஆதலால், இத்தொடர் நிச்சயம் நடைபெறும். இதில், 24 அணிகள் பங்கேற்கவுள்ளார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.
இவ்வாறு உள்ள 24 அணிகளில், Los Angeles நகரை சார்ந்த ஓர் அணிக்கு ஒனராக களமிறங்க திரு. ஷாருக்கான் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இன்னும் 3 வருட காலத்திற்குள், இத்தொடர் ஒளிமயம் பெற்று, மக்களின் பார்வையை நிச்சயம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில், அணிக்கான சிறந்த வீரர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல், Major League Cricket தொடரை மேலும் உயர் தரத்தில் கொண்டு செல்ல பணிபுரிவார் என செய்திகள் வெளிவந்துள்ளது. சற்று நினைத்து பாருங்கள், அணியின் பெயரானது எவ்வாறு அமையும் என்று . LA Knight Riders ? உங்களின் பக்கங்களை commentsல் பதிவிடுங்கள்.
Comments
Post a Comment