USA Cricket'ஐ பற்றிய ஓர் பார்வை
அமெரிக்காவில் கிரிக்கெட்டா ? நீங்கள் தெளிவாகத்தான் கூறுகிறீர்களா ? உங்களுடைய மனநலம் சரியாக தான் உள்ளதா ? என பலருடைய மனதில் கேள்விகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நான் தெளிவாகத்தான் கூறுகிறேன், அமெரிக்காவில் கிரிக்கெட் எனும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வளர்ச்சிக்காக, மேலும் மேலும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Olympic விளையாட்டுகளை கண்டோமேனில், அதில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும், தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது அமெரிக்கா. ஆனால், கிரிக்கெட் எனும் விளையாட்டிற்கு வரும்போது, பொந்தில் சிக்கிய எலியைப்போன்று தான் அமெரிக்கா. ஆதலால், கிரிக்கெட்டை அமெரிக்காவில் வளர்ப்பதற்காக, சில திட்டங்களை செயல்படவுள்ளார்கள். அவையாவை என இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.
2015ம் ஆண்டில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்ன் அவர்கள் இருவரும் இனைந்து, அமெரிக்காவில் உள்ள Citi Field, Minute Maid Park மற்றும் Dodger Stadium ஆகிய மைதானங்களில், மூன்று 20 ஓவர் போட்டிகளை நடத்தி, அதன் வரவேற்பினைப்பற்றி நாம் நன்கு அறிவோம். அதன் தொடர்ச்சியாக, 2016ம் ஆண்டில், இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகள், இருவரும் இனைந்து, அமெரிக்கா மைதானங்களில் போட்டியிடுவர். அப்போதிலிருந்தே, வளர்ச்சிக்கான பாதையை நோக்கி ஓர் பயணம் எடுக்க துவங்கியது அமெரிக்கா.
தற்போது, வெளிவந்த செய்தி யாதெனில், அமெரிக்கா'வின் புகழ்பெற்ற Baseball மைதானமான, Grand Prairie நகரில் உள்ள, AirHogs மைதானத்தை, புதுப்பித்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு இணைய மாற்றியமைக்கவுள்ளார்கள் என்பதே ஆகும். Minor League Baseball எனும் அமெரிக்காவின் baseball தொடரை சேர்ந்த அணியான Texas AirHogsயின் Home மைதானமாகும். இம்மைதானத்தின் விளையாட்டு வசதிகள், உயர் தரத்தில் உள்ளது. இவ்வாறு உள்ள வசதிகளை புதுப்பித்து, கிரிக்கெட் விளையாட்டிற்கேற்ப மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த கட்டமைப்பு பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, Major Cricket League எனும் MLC வாரியம், Grand Prairie நகரில் உள்ள முக்கிய நபர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அது மட்டுமல்லாது, குத்தகைக்கு இம்மைதானத்தை பெறுவதற்கும் ஒப்பந்தமிட வேண்டும். இவையிரண்டையும், வெற்றிகரமாக செய்தது MLC. அமெரிக்காவின் சர்வதேச கிரிக்கெட் வாரியம், MLC மற்றும் அமெரிக்காவின் தலைசிறந்த கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான KHS நிறுவனத்துடன் இனைந்து, புதுப்பித்தல் பணியை துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்பணி, 2021ம் ஆண்டிலிருந்து துவங்கி அதன் இறுதியிலேயே நிறைவு பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், 2022ம் ஆண்டில், அமெரிக்காவின் 20 ஓவர் லீக் தொடரான, Major League Cricket நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெற்றால், Texas Airhogs அணியின் home மைதானமாக செயல்படும். மற்றும், அமெரிக்காவின் மற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை செயல்படுத்தவும், ஏதுவாக அமையும்.
அமெரிக்காவின் அடுத்த குறி கிரிக்கெட் ஆகும். 2031ம் ஆண்டிலிருந்து ICCயின் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை, அமெரிக்காவில் நடத்தும்படி பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது, ICCயின் சில தகுதிசுற்றுப் போட்டிகள் இங்கு நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் கிரிக்கெட்டில் வளர்ச்சியடைந்தால், உலகெங்கும் கிரிக்கெட் புகழ்பெற்ற விளையாட்டாக அமையும்.
இதற்கு இணையான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பாக்கிஸ்தான் நாட்டின் batsman'ஆன Sami Aslam, அவர்கள், அமெரிக்காவின் சர்வதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடவுள்ளார். இளம் வீரரான, Sami Aslam அவர்கள், பாக்கிஸ்தான் அணியிற்காக 13 டெஸ்ட் போட்டிகளும், 4 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவரின் form குன்றியதால், வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இருப்பினும் 2019ம் ஆண்டில், மிகவும் சிறந்த நிலையில், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் செயல்பட்டார். ஆயினும், வாய்ப்புகள் அளிக்காத சம்பவம், அவரின் பொறுமையை சோதித்தது. கொரோனா'விற்கு பின்னாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. ஆதலால். தற்போது இம்முடிவிற்கு வந்துள்ளார்.
2031ம் ஆண்டின், ICC தொடர்களை நடத்துவதற்கான உரிமத்தை பெற, மேற்கு இந்திய தீவுகளுடன் போட்டியிடவுள்ளது. இவர்கள் இருவரும் இனைந்து, பிற்காலத்தில் பல கிரிக்கெட் தொடர்களை, நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment