Posts

Showing posts with the label ECB

2021 IND vs ENG - பார்வையாளர்களுக்கு அனுமதி !

Image
முன்னதாக தெரிவிக்கப்பட்டது, சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பது தான். ஆனால், நேற்று தமிழக அரசானது, ஊரடங்கை விலக்க 7ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், 50 % சதவீத பார்வையாளர்களோடு நடத்தலாம் எனும் செய்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது யாதெனில், 50 சதவீத பார்வையாளர்களுடன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தலாம் என்பது தான். ஆயினும், தமிழ்நாட்டின் மாநில கிரிக்கெட் சங்கமானது ( TNCA ), பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்த முடிவெடுத்துள்ளோம் என அறிவிப்பு வெளியிட்டது. ஆகையால், சென்னையில் நடக்கவிருந்த இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான  முதல் டெஸ்ட் போட்டியின் டிக்கெட்டுகளை விற்பனையிடவில்லை. அதன் பின் தான், தமிழக மாநில அரசானது, முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், அனைத்து வெளிப்புற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்பது தான். இந்த செய்தி வெளியானவுடன், தமிழக அரசு, இந்திய கிரிக்கெட்...

2021 England - New Zealand தொடர் !

Image
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, 2021ம் ஆண்டில் ஓர் நெருக்கடியான அட்டவணை அமைந்துள்ளது. அந்த அட்டவணைக்கிணங்க, தற்போது இலங்கையுடன் ஓர் தொடர் விளையாடி முடித்துள்ளது. இதற்கு பின், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஒரு தொடரும் , பின்னர் இங்கிலாந்தில் ஒரு தொடரும் நடைபெறவுள்ளது. அதற்கு பின், இலங்கையுடன் ஒரு தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு தொடர் என இடைவெளியின்றி அடுக்கப்பட்டுள்ளது. இவையுடன், தற்போது நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆம், ஜூன் மாத காலகட்டத்தில், இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமோ, நடைபெறவாதோ என்கிற குழப்பத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. ஒரு வேளை, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்றால், ஐயர்லாந்து அணியையாவது டெஸ்ட் தொடரில் பங்குபெற அழைக்கலாம், என்கிற முடிவில் இருந்தது. இறுதியாக, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது என்கிற செய்தியையும், அதனால் 2 Test போட்டிகள் நடைபெறும் என்கிற செய்தியையும் இன்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்ய...

SL vs ENG - இரண்டாம் Test, நான்காம் நாள் Review

Image
பொதுவா, ஒரு test matchல என்னதான் dominant performance கொடுத்தாலும், ஏதாவது ஒரு sessionல சொதப்பிட்டா, மொத்த matchசுமே கை'ய விட்டு போயிடும். சிங்கத்தோட மொத்த உழைப்பையும் வீணடிச்சு, அதோட பரிசை எப்படி ஒரு Hyena, பிடிங்கிட்டு போவுதோ, அப்போ ஒரு depressed situation ஏற்படும். அந்த மாதிரி ஒரு சொதப்பல் தான், இங்க Sri Lankaவுக்கு நடந்திருக்கு. நேத்து, 339/9னு இருந்த England, அதுக்கு அப்புறம் வெறும் 5 runs தான் add பன்றாங்க. இந்த பக்கம் Embuldeniyaவோட சம்பவத்தை தூக்கி சாப்புட்ற மாதிரி, அந்த பக்கத்துல இருந்து Dom Bess மற்றும் Jake Leach, சரமாரியான சம்பவம் செய்யுறாங்க. ஒன்னும் இல்ல, 4வது நாள்ல இருந்த ஒரு turn, மூணாவது நாள்ல விட அதிகமா இருந்துச்சு. Pitch'அ பொறுத்த வரைக்கும், ஏகப்பட்ட deviation இருந்துச்சு. கூடவே, நல்ல bounce'உம் இருந்துச்சு. இந்த ரெண்டு விஷயத்தையும் சரியா use பண்ணுறாங்க. காத்துல நல்ல flight பண்ணி bowl பண்ணிட்டு இருந்தாங்க. Batsmanனோட பொறுமையா எந்த அளவுக்கு சோதிக்க முடியுமோ, அந்த அளவுக்கு சோதிச்சு, ஆசைய காட்டிட்டே இருந்தாங்க. Slip, short leg, Silly pointன்னு bowlerரோட turn...

SL vs ENG - இரண்டாம் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது, நான் எதிர்பார்த்தது, இன்னிக்கி நாள்ல Spinnersக்கு support அதிகமா இருக்குங்கிற விஷயம் தான். அதே நேரத்துல, Root கிட்ட இருந்து நல்ல performance எதிர்பாக்கலாம்னும் எழுதியிருந்தேன். அதே மாதிரி நெறய விஷயம் நடந்துச்சு, சில விஷயம் அதை மீறியும் நடந்துச்சு. அப்படி என்ன நடந்துச்சுன்னு இந்த blogல நாம பாக்கலாம். வழவழ'ன்னு பேசாம matterருக்கு வா'ன்னு கதறுற ஒவ்வொரு வாசகருக்கும், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லுறேன். முதல் விஷயம், Embuldeniya வோட 7 wicket haul. இந்த Series'அ பொறுத்தவரைக்கும், England sideல இருந்து ஏகப்பட்ட heroes உருவானாலும், Sri Lankaவோட sideல இருந்து உருவான heroனா அது இவரு தான். Middle and off stump lineல pitch பண்ணி, Right Handed Batsmanனுக்கு வெளில கொண்டு வந்துட்டே இருந்தாரு. அதுக்கு ஏத்தாப்ல, ரெண்டு slip fielders set பண்ணாங்க. சில முறை, curved arm action இல்லாம, கொஞ்சம் straighterரா கொண்டு வந்தாரு. அந்த straighter angle delivery, batsmanனோட மனசுல ஏகப்பட்ட குழப்பத்தை உண்டாக்குச்சு. அந்த குழப்பம் தான், இவரோட வெற்றி ! இ...

SL vs ENG - இரண்டாம் Test, இரண்டாவது நாள் Review

Image
நேத்து , நாள்ல பொறுத்த வரைக்கும், Sri Lanka நெனச்சத விட கொஞ்சம் பொறுமையா விளையாடுனாங்க, flat pitch'அ ஒழுங்கா use பண்ணலன்னு நான் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, அதை தாண்டி Angelo Mathews 'ஓட ஆட்டம் நல்ல இருந்துச்சுன்னு சொன்னேன். கூடவே, Andersonனுக்கு வயசானாலும் இன்னும் அவரோட performance குறையவே இல்லனும் சொல்லியிருந்தேன். அது எல்லாமே நடந்துச்சு. முதல்ல, நான் Anderson கிட்ட இருந்து ஆரம்பிக்குறேன். மனுஷனுக்கு, வயசே ஆவதான்னு நமக்கு நாமளே கேட்டுக்குற அளவுக்கு, இன்னும் அதே control'ஓட bowl பண்ணிட்டு இருக்காரு. Test cricketல தன்னோட 30வது 5 wicket haul எடுக்குறாரு. Fast Bowlerகள்'ல Richard Hadlee மட்டும் தான் இவரை விட அதிக 5 wicket hauls எடுத்து இருக்காரு ( 36 ).  வானத்துல மேகம் இருந்தா மட்டும் தான் effectiveவா இருப்பாரு, Clouderson அப்படி இப்படினு குறை சொன்னவன் எல்லாருக்கும், தான் யாருனு இன்னொரு முறை நிரூபிச்சிட்டு போறாரு. Cricketல ஒரே கட்சி தான், ஒரே கொடி தான், அது இந்த Andersonனோடது தான் bowling மூலமா சொல்லிட்டு போயிட்டு இருக்காரு. இன்னிக்கி நாள் முடிக்கும்போது, 40 runs கொடுத்து அ...

SL vs ENG - இரண்டாம் Test, முதல் நாள் Review

Image
இந்த ரெண்டாவது test matchக்கு நாம வந்துட்டோம்னா, gameக்கு ஒரு 2 நாள் முன்னாடியே, Sri Lankan team சில changes announce பன்றாங்க. சில players'அ rule out பன்றாங்க. Series ஜெயிக்க முடியலைனாலும், drawவாச்சும் பண்ணனும், அதே நேரத்துல கௌரவத்தோட இந்த series'அ முடிக்கணும்'ன்னு ரொம்ப தீவிரமா இருந்தாங்க. அப்படி இருக்கும்போது, Galleல flat track அமையுது. Toss ஜெயிக்கிற Sri Lanka, முதல்ல batting choose பண்ராங்க. James Anderson, இந்த matchல உள்ள வர்றாரு. வந்த உடனே 2 wickets எடுக்குறாரு. Flat track கொடுத்தாலும் சரி, Spin track கொடுத்தாலும் சரி, எங்க வேணும்னாலும் என்னால bowling போட்டு wicket எடுக்க முடியும்ன்னு திரும்பவும் ஒரு வாட்டி சொல்லுறாரு.  Pitchல எதுவுமே இல்லைன்னா என்ன, நான் crease'உம் shoulder'உம் பயன்படுத்தியே wicket எடுப்பேன்னு சொல்லாம சொல்லுறாரு. 600 test wickets எடுத்த ஜாம்பவான்னா சும்மாவா ?. ஆனா, அவரை தாண்டி வேற யாரும் ஒழுங்கா bowl பண்ண முடில. அதுனால, Sri Lankaவுக்கு ஓரளவுக்கு நல்ல நாளா அமஞ்சியிருக்கு.  என்னப்பா சொல்லுற, Mathews century போட்டிருக்காரு, Sri Lanka வெறும் 4...

England have named squads for first two tests against India

Image
On the month of February, England will tour India for a long series, which consists of four tests, five T20Is and 3 ODIs respectively. Only three venues have been selected to host this mega series, as due to stringent COVID-19 protocols. Few days back, Indian Cricket Team have announced their Squads for first two tests. Now, ita time for England. England have named a 16 member squad foe first two tests against India, which both is scheduled to be held at M.A Chidambaram Stadium, Chennai. Along with a 16 member squad, 6 reserve players were also added among the touring party.  England's Squad - Joe Root (c), Jofra Archer, Moeen Ali, James Anderson, Dom Bess, Stuart Broad, Rory Burns, Jos Buttler, Zak Crawley, Ben Foakes, Dan Lawrence, Jake Leach, Dom Sibley, Ben Stokes, Olly Stone and Chris Woakes Six Member Reserve - James Bracey, Mason Crane, Saqib Mahmood, Mathew Parkinson, Ollie Robinson and Amar Virdi Jofra Archer, Rory Burns and Ben Stokes return to the squad. Arch...