2021 England - New Zealand தொடர் !
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, 2021ம் ஆண்டில் ஓர் நெருக்கடியான அட்டவணை அமைந்துள்ளது. அந்த அட்டவணைக்கிணங்க, தற்போது இலங்கையுடன் ஓர் தொடர் விளையாடி முடித்துள்ளது. இதற்கு பின், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஒரு தொடரும், பின்னர் இங்கிலாந்தில் ஒரு தொடரும் நடைபெறவுள்ளது. அதற்கு பின், இலங்கையுடன் ஒரு தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு தொடர் என இடைவெளியின்றி அடுக்கப்பட்டுள்ளது. இவையுடன், தற்போது நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆம், ஜூன் மாத காலகட்டத்தில், இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமோ, நடைபெறவாதோ என்கிற குழப்பத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. ஒரு வேளை, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்றால், ஐயர்லாந்து அணியையாவது டெஸ்ட் தொடரில் பங்குபெற அழைக்கலாம், என்கிற முடிவில் இருந்தது.
இறுதியாக, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது என்கிற செய்தியையும், அதனால் 2 Test போட்டிகள் நடைபெறும் என்கிற செய்தியையும் இன்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து, இந்திய மற்றும் இலங்கை போன்ற அணிகளை தங்களின் கோடைகால கிரிக்கெட் பகுதியில் சந்திப்பது என்பது, இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் 20 ஓவர் கிரிக்கெட் உலககோப்பைக்கு நல்லதோர் பயிற்சியாக அமையும்.
இங்கிலாந்து - நியூஸிலாந்து தொடர், மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்டதாக அமைந்துள்ளது. அதில், முதல் போட்டியோ, Lords மைதானத்தில் நடைபெறவுள்ளது ( 1 ஆண்டு காலத்திற்கு பின் Lords மைதானத்தில் நடைபெறும் ஓர் போட்டியாகும் ). ஆகையால், பார்வையாளர்களை அழைக்கலாம் என்கிற முடிவில் தான் இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியமும் தற்போது உள்ளது.
முதல் Test : ஜூன் 2 - 6, Lords
இரண்டாம் Test : ஜூன் 10 - 14, Edgbaston
இவையுடன், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 20 ஓவர் தொடரை, தற்போது உறுதிப்படுத்தியது. இத்தொடரின் அட்டவணை,
முதல் T20I : ஜூன் 23, Cardiff
இரண்டாம் T20I : ஜூன் 24, Cardiff
மூன்றாம் T20I : ஜூன் 26, Southampton
கிரிக்கெட் படையல் காத்துக்கொண்டிருக்கிறது. உண்போருக்கு, ஓர் மறக்கவியலாத விருந்தாக அமையும். மீண்டும், இவ்வாறு பல போட்டிகளை கொண்ட கிரிக்கெட் ஆண்டு அமையுமா என்பது சந்தேகமே. ஆயினும், வீரர்களின் பணிச்சுமை மிக மிக அதிகாமாக காணப்படுகிறது. அதை, சரிசெய்ய சுழற்சி முறையில், வீரர்களை பயன்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment