2009 தீவிரவாத தாக்குதல் - 2021 PCBயின் தற்போதைய அறிவிப்புகள்
அடுத்த ஆண்டு, அக்டோபர் மாத காலகட்டத்தில், இங்கிலாந்து அணி பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் என ஆணித்தரமான தகவல் ஒன்று வெளியானது. 16 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணி, கிரிக்கெட் விளையாடுவதற்காக பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறது. இதில் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அடங்கும். இவர்களுக்கு அடுத்தபடியாக, தென் ஆஃப்ரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இவையனைத்திற்கும் காரணம் யாது ? பதில்களுக்கு, முழு பதிவையும் படித்துப் பாருங்கள்.
3 மார்ச் 2009
இந்த நாளை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 2009ம் ஆண்டில், இலங்கை அணி, பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஓர் தொடரினை விளையாட பயணம் மேற்கொள்கிறது. இத்தொடரில், 3 ஒரு நாள் போட்டிகளும் 2 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். இத்தொடர் நடைபெறுவதற்கு முன்பு தான், 2008ம் ஆண்டில், இந்தியாவை சேர்ந்த மும்பை நகரில், தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்கள். அதன் காரணமாக, 2009ம் ஆண்டில், கிரிக்கெட் பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி பின்வாங்கியது. அவர்களுக்கு பதிலாக தான் இலங்கை அணி பயணம் மேற்கொள்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி 2-1 என எளிதாக வெற்றியை பதிவு செய்தார்கள். 2 டெஸ்ட் போட்டிகளில், முதலாம் போட்டியை Drawn செய்தது இலங்கை. இரண்டாம் டெஸ்ட் போட்டி, 1 - 5 மார்ச் வரை Lahore நகரில் உள்ள Gadaffi Stadiumல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதில், முதல் 2 நாட்கள் முடிவடைந்த பின், மூன்றாம் நாள் - மார்ச் 3, 2009. வழக்கமாக, பாக்கிஸ்தான் அணியும் இலங்கை அணியும் ஒன்றாகவே இனைந்து, மைதானத்திற்கு செல்வர். ஆனால், அன்றோ இலங்கை அணி 7 நிமிடங்கள் முன்பாகவே கிளம்பியது. முன்னும் பின்னும் நேரம் இருப்பதால் என்ன நேர்ந்துவிடும் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், அந்த 7 நிமிடம் தான், பல ஆண்டுகளுக்கு பாக்கிஸ்தான் நாட்டில் டெஸ்ட் போட்டி நடைபெற தடையாய் அமைந்தது. சற்று முன்பாகவே கிளம்பிய இலங்கை அணியின் பேருந்தையும், அவர்களுக்கு பின்னல் சென்ற நடுவர்களை கொண்ட சிறுவண்டியையும், மர்மநபர்கள் தாக்கினர். 8:39 முதல் 8:46 வரை நடைபெற்ற தாக்குதலில் ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 2 நபர்களும், 6 காவல்வீரர்களும் கொல்லப்பட்டனர். இலங்கை அணியின் வீரர்கள் பலர் காயங்களால் துவண்டனர். இவற்றின் இடையில், இலங்கை அணியின் பேருந்து மீது, மர்மநபர்கள் ஏவுகணை செலுத்தினர். அந்த ஏவுகணை, அருகில் உள்ள ஓர் கம்பத்தை தாக்கியதால், நூல் இடையில் உயிர் தப்பித்தார்கள். திலான் சமரவீரா அவர்கள், மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளித்தனர். இந்த 7 நிமிட தாக்குதல், இலங்கை அணியை மீண்டும் தங்கள் நாட்டிற்கு விரைந்து செல்ல வைத்தது. அதுவரை, 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்த இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளை தேர்வு செய்த ICC நிர்வாகம், பாக்கிஸ்தான் அணியை பொறுப்பிலிருந்து விளக்கியது. அங்கிருந்து, 6 ஆண்டுகளுக்கு, பாகிஸ்தானில் ஒரு கிரிக்கெட் போட்டியும்நடைபெறவில்லை. அனைத்தும், ஐக்கிய அரபு நாடுகளில், நடைபெரும்வாறு அமைக்கப்பட்டது. பல நாடுகள், பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்ள அஞ்சினர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம், பாக்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த Lashkar-e-Janghvi எனும் இயக்கமாகும். பல ஆண்டுகளுக்கு பிறகு, 2015ம் ஆண்டில், ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட பயணம் மேற்கொண்டது. அதன் பின், 2019ம் ஆண்டில், இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளை விளையாட பயணம் மேற்கொண்டது. ஆயினும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் நாடுகள் பயணம் மேற்கொள்ளாதது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காதது, பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியை கவலையில் ஆழ்த்தியது.
தற்போது :
2009ம் ஆண்டின் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாக்கிஸ்தான் அணியின் வசதிகள் பெரிதாகவில்லையென்றாலும், அந்த நாட்டின் கிரிக்கெட் தரம் சற்று உயர்க்கப்பட்டது. அதற்கு ஓர் முக்கிய காரணம், Pakistan Super League ( PSL ) என்றழைக்கப்படும், பாகிஸ்தானின் 20 ஓவர் கிரிக்கெட் லீகின் வருகையாகும். முதலில், பாக்கிஸ்தான் வீரர்கள் மட்டுமே பங்கேற்க்கப்பட்டு, பின்னர் மற்ற நாட்டவரும் களமிறங்கினர். PSLலின் வருகை, கிரிக்கெட் மீது உள்ள காதலும், அதே சமயத்தில், வீரர்களுக்கு எதுவும் நேரிடாது பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அதிகரித்துள்ளது.
இதன் வெளிப்பாடு தான், இங்கிலாந்து அணி பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்கள். இத்தொடர் 2021ம் ஆண்டின் இறுதியில் நடைபெறும். இவர்களுக்கு அடுத்து, தென் ஆஃப்ரிக்கா அணியினரும் வருகின்ற ஜனவரி மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். இத்தொடர், 2020ம் ஆண்டின் இடைக்காலத்தில் நடைபெறுவதாக இருந்தது, கொரோனா நோயின் காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பின், அட்டவணையை 2021ம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெரும்வாறு அமைத்தார்கள். நியூஸிலாந்து அணியும், பாக்கிஸ்தான் நாட்டிற்கு, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத காலகட்டத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். இவர்களையடுத்து, ஆஸ்திரேலியா அணியும், பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், பல இன்னல்களுக்கு பின் மீண்டும் ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு முறை தவறினாலும், வாழ்க்கை இரண்டாம் வாய்ப்பு அளிக்கும். அதை பயன்படுத்திக்கொள்பவன் பிழைப்பான். பாக்கிஸ்தான் நாடும், பாக்கிஸ்தானின் கிரிக்கெட் அணியும், அதை நன்கு பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, இந்திய அணி பயணம் மேற்கொள்ளுமா ? இதற்கான பதிலை, பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகியான, வாசிம் கான் அவர்கள் தெரிவித்தது, " தற்போது நிலவிவரும் நெருக்கடிகளின் காரணத்தால், வரும் எதிர்காலத்தில் இந்திய அணி பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்வது சந்தேகம் தான். எப்போது, அரசியல் நெருக்கடிகள் சாந்தம் அடைக்கின்றதோ, அப்போது தான் இந்தியாவிற்கு பாக்கிஸ்தான் அணியும், பாகிஸ்தானிற்கு இந்தியாவும் தொடர்பயணம் மேற்கொள்வதை பற்றி சிந்திக்கலாம் "
21ம் நூற்றாண்டில் பிறந்த குழந்தைகள் யாவரும், பாக்கிஸ்தான் இந்தியா போட்டிகளை காண இயலாமல் சென்றுவிடுமோ என்றே பயம் உள்ளது. ICC தொடர்களிலும், ஆசியா கோப்பை தொடர்களில் மட்டுமே காணப்பட்டு வரும் இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகளிலேயே, தீவிரம் அதிகமாக காணப்பட்டால், நினைத்துப்பாருங்கள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடர்களைப்பற்றி. மிகவும் முக்கியமாக டெஸ்ட் போட்டிகளை பற்றி !. கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் இது போதை !. இந்த அனுபவத்தை, 2k குழந்தைகள் காணநேரிடாதோ என்றே எண்ணம் வருகிறது. நல்லதே நடைபெறும் என்று நம்புவோம் !!
Comments
Post a Comment