2021 விஜய் ஹசாரே செய்திகள்

நான் முன்னதாக குறிப்பிட்டிருந்தேன் , பிப்ரவரி மாதம் 18 தேதி முதல், இவ்வாண்டின் விஜய் ஹசாரே தொடர், துவக்கம் பெற வாய்ப்புகள் உள்ளது என்று. குறிப்பிட்டவாறு இல்லாமல், 2 நாட்கள் கழித்து, பிப்ரவரி 20ம் தேதியன்று துவக்கம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்பதை பற்றியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் விதிமுறைகள் பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் 13, 15 மற்றும் 17 தேதிகள் அன்று மூன்று பரிசோதனைகள் நடைபெறும். அதற்கு ஒரு வாரம் முன்பே, அனைத்து அணிகளும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நகரத்துக்கு சென்று, அங்கு ஒதுக்கப்பட்ட உணவகங்களில் தங்களை தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நகரை மையமாக வைக்கப்பட்டு, அங்கு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது BCCI. சூரத், இண்டோர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களை தேர்வு செய்துள்ளார்கள். கடைசி குழுவான, Plate Group அணிகளுக்கு, தமிழ்நாடை தேர்வு செய்துள்ளார்கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில், Plate Group போ...