அமித் பாக்னிஸ் - பதவி விலகல் !

 தற்போது, நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்றது. இந்நிலையில், மும்பை அணியானது, நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல், மிகவும் மோசமான நிலையில், வெளியேறியது. இவ்வாறு ஓர் ஆட்டத்துக்கு பிறகு, மும்பை அணியின் பயிற்சியாளராக, அமி பாக்னிஸ், தான் பதவியை ராஜினாமா செய்யும்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை அணியானது, E குழுவில், இடம்பெற்றுள்ளது. இந்த E குழுவில், மும்பை அணியுடன் டெல்லி, ஹரியானா, புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்துடன் எதிர்த்து விளையாடியுள்ளார்கள். அதில், முதல் நான்கு போட்டிகளில் சரிவு கண்டு தொடரை விட்டு வெளியேறியது.

முதலில், டெல்லிக்கு எதிரான போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. அதில், மும்பை அணியுடைய துவக்க வீரர்கள் யாவரும் ஒழுங்காக விளையாடவில்லை. பின்னர், ஹரியானா அணிக்கு எதிராகவும் அந்நிலை தான். 56/6 என்று பரிதாமாக கிடந்தது. அங்கிருந்து, போராடி ஈட்டப்பட்ட இலக்கை வழங்கினாலும், பந்துவீச்சாளர்கள் யாரும் கை கொடுக்காததால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  ஹரியானா வென்றது. பின்னர், புதுச்சேரி அணிக்கு எதிராக 94 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின், கேரளம் அணிக்கு எதிரே 196 ரன்கள் குவித்தார்கள். ஆயினும், பந்துவீச்சாளர்கள் தங்களின் கடைமை தவறியதால், வெறும் 15 ஓவர்களில் இந்த இலக்கை கேரளம் அடித்து ஜெயித்தது. மொஹம்மத் அசாருதீன் எனும் இளம் வீரனின் 137 ரன்கள் தான் இந்த வேட்டைக்கு அடித்தளமாக அமைந்தது. அதன் பின், இறுதி போட்டியில், ஆந்திர மாநிலத்துக்கு எதிரே 155 ரன்களை கடந்தால் வெற்றி என்கிற கணக்கில் விளையாடி, அதை ஈட்டியது.

காகிதத்தில் மிகவும் வலிமைகொண்ட அணியாக தென்பட்டாலும், ஆட்டத்தில் சிறப்பம்சம் பெரிதும் காணப்படவில்லை. சூரியகுமார் யாதவ், ஆதித்ய தாரே போன்ற மூத்த வீரர்களின் சரிவும், தாவல் குல்கர்னியின் சுமாரான பந்துவீச்சும், மீதம் உள்ளோரின் மனதில் அச்சத்தை விதைத்தது. சிவம் துபே, தன்னால் இயன்றதை செய்து காட்டினார். அவரைக்கடந்து, வேறு யாரும் நன்றாக விளையாடவில்லை. 

இவ்வாறு ஓர் மோசமான நிலையில், " நான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்" என்று மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஓர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஒப்பந்தம் படி, டிசம்பர் மாதத்திலிருந்து வருகின்ற ஏப்ரல் மாதம் வரையே தான், பணியாற்ற இயலும். ஆனாலும், அதற்கு முன்பே பதவி விலகியது தான், இங்கு சிந்திக்க வேண்டிய செயலாக அமைந்துள்ளது.

   

 

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt