January 10லிருந்து Syed Mushtaq Ali கோப்பை
இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் தொடரான, Syed Mushtaq Ali கோப்பை தொடர், ஜனவரி 10ம் தேதியிலிருந்து துவக்கம் பெரும் எனவும் ரஞ்சி கோப்பை தொடர் இல்லாமையே இவ்வாண்டு நிறைவு பெரும் எனவும் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏன், இவ்வாறு ஓர் பாகுபாடு என இப்பதிவில் நாம் படித்து வருவோம்.
கொரோனா நோய் பாதிப்பின் காரணத்தினால், செப்டம்பர் மாத காலகட்டத்திலேயே இவ்வாண்டின் Vijay Hazare கோப்பை மற்றும் Duleep கோப்பை தொடர்கள் நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Ranji கோப்பை மற்றும் Syed Mushtaq Ali கோப்பை ஆகிய இரு தொடர்கள், இவ்வாண்டு டிசம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறும் என பல செய்திகள் வெளிவந்தது.
இருப்பினும், அதைப்பற்றி BCCIயின் தரப்பிலிருந்து எவ்வித அறிக்கையும் வெளிவராத காரணத்தினால், Ranji கோப்பை நடைபெறுவதில் மேலும் பல சந்தேகங்கள் இருந்தன. இந்திய கிரிக்கெட் வாரியமும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினர். அந்த கடிதத்தில், எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடைபெற செயல்படலாம் என கேள்வி எழுப்பியபோது, பெரும்பாலானோர் Syed Mushtaq Ali தொடரை நடத்தலாம் என கருத்துக்கள் தெரிவித்தனர்.
இன்னொரு காரணம் யாதெனில், ஏப்ரல் மாத காலகட்டத்தில், 2021ம் ஆண்டின் IPL தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், புதிதாக 1 அல்லது 2 அணிகள் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படும் சூழலில். ரஞ்சி தொடரை, குறுகிய காலகட்டத்திற்குள் நிகழ்த்துவது சாத்தியமற்றது.
ஆகையால், இவ்வாண்டில் Syed Mushtaq Ali கோப்பை மட்டுமே நடைபெறும். அதுவும் ஜனவரி 10ம் தேதியன்று துவக்கம் பெற்று 31ம் தேதியன்று நிறைவுபெறும் என அறிவித்துள்ளது BCCI. இதன் இடைப்பட்ட காலகட்டத்திலோ அல்லது பிப்ரவரி மாத காலகட்டத்திலோ, IPL தொடரின் ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால், இந்தியாவின் இளம் வீரர்களுக்கு, உயர்வினை நோக்கி பயணிக்க வேண்டுமெனில், இவ்வாண்டின் Syed Mushtaq Ali கோப்பை மட்டுமே ஓர் பாலம். இந்த பாலத்தை பயன்படுத்தினால், நிச்சயம் வெற்றி.
Comments
Post a Comment