Posts

Showing posts from September, 2020

SRH vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, SRHகும் DCகும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், DC அவங்களோட முதல் தோல்விய சந்திச்சாங்க. Toss ஜெயிச்ச DC, முதல்ல fielding choose பண்ணாங்க. Bairstow, Warner ஓட partnership'னாலயும் அப்புறம் Williamsonனோட முக்கியமான cameo காரணத்துனாலயும், 162/4னு par score அடிச்சாங்க. Pitchல ball கொஞ்சம் நின்னு வந்ததை, ஹைதராபாத் சுதாரிச்சி use பண்ணாங்க. ஆனா, அதே நேரத்துல, டெல்லி அணி, ரொம்ப quick intervalsல wicketsஅ lose பண்ணாங்க. பலர், அவசரப்பட்டு catch கொடுத்துட்டு போனாங்க. Inexperienceங்கிற பிரச்சனை, திரும்பவும் டெல்லியை துரத்த ஆரம்பிச்சுது. அது காரணமா, 24 runs வித்தியாசத்துல தோத்துட்டாங்க.  அதுக்கு முன்னாடி, இந்த matchஓட, Post Match Analysis Videoவ, என்னோட YouTube Channelல post பண்ணியிருக்கேன். அதோட link -  https://www.youtube.com/watch?v=TvY-EO-Sb_A&t=2s   இருந்தாலும், ரொம்ப balanced'அ இருக்குற teamஆன DCய எப்படி சுருட்டுனாங்க ? அதுல, நிச்சயமா ஏதாவது திருப்புமுனை இருந்திருக்கும். அந்த turning point, நிச்சயமா SRHகு வெற்றிய பரிசா கொடுத்திருக்கும். அந்த, turn

NZ Cricket Schedule 2020 - 21

Image
New Zealand Government has finally approved to resume cricket in the country and also given no objection certificate to travel overseas for away cricketing tours. With this exciting whirlwind news, New Zealand Cricket has finally proposed their plans to play tours during the season 2020-21. As already, there is a great upcoming clash between India and Australia during late 2020, Kiwis' cricket tours were even more crunchy and finally the return of cricket has been almost 75 %. Still, the presence of audience is the only factor, which is bring normalcy back, all over the world.   When we look into those tours, some where yet to be confirmed, but still right now, four tours were actively given green signal and fixtures for those series were released officially. In these, the first one is up against the Windies, at New Zealand, where these teams would be playing 3 T20Is, as a part of preparation towards 2021 ICC T20 World Cup and also meeting at 2 test games. This series begins on lat

RCB vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, இன்னொரு high scoring thriller gameஅ நாம witness பண்ணோம். தொடர்ந்து ரெண்டாவது, thriller போட்டியா அமைஞ்சிருக்கு. அதே நேரத்துல, இந்த வருஷத்தோட ரெண்டாவது super over gameஆவும், இந்த match அமைஞ்சிருக்கு. ஆனா, இது super overருக்கான போட்டியே கெடயாது. ஆனா, எப்படி super over வரைக்கும் போச்சு ? அதுக்கு காரணம், on-fieldல RCB பண்ண சில mistakes தான். என்ன mistakes பண்ணாங்க, அதுல எது turning point'அ அமைஞ்சுதுன்னு இந்த blogல பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி, இந்த match'ஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன்.  அதோட link -  https://www.youtube.com/watch?v=96WjlTnbt6w   MI toss ஜெயிச்சு bowling choose பண்ணாங்க. Finch, Padikkal ரெண்டு பேரோட அருமையான start காரணமாலும், அப்புறம் Mr. 360யான ABD மற்றும் ஷிவம் துபே'யோட aggressive finish'னாலயும் பெங்களூரு 201/3னு நல்ல score அடிச்சிருக்காங்க. துபாய் pitchல இதை chase பண்ணுறது ரொம்பவும் கஷ்டம். ஆனா, dew வரும்னு நம்பிட்டு இருந்தாங்க.  MI battingகு வராங்க. ஆரம்பத்துலயே, முக்கியமான wickets'ஆன ரோஹித் ஷர்ம

RR vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து,  பஞ்சாபுக்கும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், ஒரு high scoring thriller. இதுல, IPLஓட சாதனையான, highest run chase ஆன 215 runs, முறியடிக்கப்படுது. " தெனை வெதைச்சவன் தெனை அறுப்பான், வெனை வெதைச்சவன் வெனை அறுப்பான்" 'ங்கிற மாதிரி, record set பண்ண RR தான் அதே recordஅ முறியடிச்சிருக்காங்க. இந்த matchஓட analysis video, என்னோட youtube channelல release பண்ணியிருக்கேன். அந்த videoவோட link -  https://www.youtube.com/watch?v=dwzvKM_9rXo  எப்படியும், இந்த மாதிரி high scoring gamesல பல turning points இருக்கும். அதுல, ரொம்பவும் சிறப்பான turning point பத்தி, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்க போறோம். RR tossஅ ஜெயிச்சு, fielding choose பன்றாங்க. Sharjah மாதிரி சின்ன stadiumல, fielding choose பண்ணுற option, கொஞ்சம் 50 - 50 call மாதிரி தான் தெரிஞ்சிது. காரணம், ராஜஸ்தானுக்கு middle order batting, கொஞ்சம் அடி வாங்குற நிலைமையில தான் இருக்கு. இன்னொரு பக்கம், KL Rahulலும் Mayank Agarwalலும், தீயா விளையாடிட்டு இருக்காங்க. எப்படி சமாளிப்பாங்க'ன்னு கேள்வ

KKR vs SRH | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, கொல்கத்தா VS ஹைதராபாத் போட்டி நடந்துச்சு. இந்த matchஉம் தொடர்ச்சியா, மூணாவது matchஅ, one sidedல முடியுது. ஆனா, tossல எடுக்குற decision, இந்த tournamentல முதல் முறையா மாறுது. ஆமாம், toss ஜெயிச்ச SRH அணி, முதல்'ல batting choose பன்றாங்க. ஆனா, tossல எடுத்த decisionகு நிகரா அவங்க batting சுத்தமா இல்ல. வெறும் 142/4 தான் அடிச்சாங்க. அதே நேரத்துல, KKR team, மொத்தம் 7 bowling optionsஓட எறங்குனாங்க. போன match அவங்க பண்ண தப்பெல்லாம் திருத்திக்கிட்டு, சும்மா sceneஅ sketch போட்டு செஞ்சாங்க. Bowlingலயும், fieldingலயும் வேலைய correctஅ செஞ்சதுக்கு அப்புறம், battingல செய்யாம இருந்த எப்படி ? Gill அந்த வேலைய கனக்கச்சிதமா செஞ்சு குடுத்தாரு. Hyderabad அணிக்கோ, battingல சின்ன score அடிச்சதுனால, அதை வெச்சுட்டு defend பண்ணவும் முடியாம, சரி wickets எடுத்துடலாம்னு பாத்தா அதுக்கும் Kolkata சுத்தமா chance குடுக்காம, ரொம்பவே அல்லாடிட்டு இருந்தாங்க. இந்த match பத்தி, தெளிவா புரிஞ்சிக்கனும்னா இந்த linkஅ click பண்ணுங்க.  https://www.youtube.com/watch?v=Q7XldBVRze4   ஆனா, இந்த தள்ளாடலுக்கு நடுவுல, ஏதாவது

CSK vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
இந்த matchஅ பொறுத்த வரைக்கும் பாத்தோம்னா, சென்னை teamஓட ரெண்டாவது loss, அதே நேரத்துல டெல்லிய பொறுத்த வரைக்கும், அவங்களுக்கு ரெண்டாவது win. Toss win பண்ற சென்னை team, மொதல்ல fielding choose பன்றாங்க. Delhi Capitals, ரொம்பவும் நல்ல தொடக்கம் கிடைக்குறதுனால, 175 runs அடிக்க முடிஞ்சுது. சென்னையோட spinners, போன match மாதிரியே இந்த matchலயும் சொதப்புறாங்க. அதோட ப்ரித்வி ஷா, ரிஷாப் பண்ட் ரெண்டு பெரும் ரொம்ப ரொம்ப பக்காவா அடிச்சி ஆடுனாங்க. ஆனா, சென்னையை பொறுத்த வரைக்கும், impressiveஅ இல்ல. அவங்களோட பலமான battingஏ இன்னிக்கி fail ஆச்சு. அதனால, 131/7 மட்டும் தான் அடிச்சாங்க. இந்த match'ஓட analysis video link -  https://www.youtube.com/watch?v=d-a_YHb1Kqg&t=152s   இருந்தாலும், இவ்ளோ பெரிய collapseகு ஏதாவது turning point இருக்கணும்ல. அந்த திருப்புமுனை என்னதுன்னு இந்த blogல பாக்கலாம்.  இந்த matchல என்னதான், ப்ரித்வி ஷா நல்ல start கொடுத்தாலும், இல்ல ரிஷாப் பண்ட் நல்ல cameo ஆடினாலும், இது எதுவும் நான் சொல்ல போற, திருப்புமுனை'க்கு கிட்ட கூட வராது. இங்க இந்த turning pointனு நான் mention பண்ண

சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துகள்

Image
நேற்று, பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதிக்கொண்ட போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தலைவரான கே. எல். ராகுல் அவர்களின், சிறப்பான ஆட்டத்தின் காரணத்தினாலும், பெங்களூரு அணியின் சுமாரான பந்துவீச்சின் காரணத்தினாலும், 206 ரன்களை அடைந்தது. அங்கு, பெங்களூரு அணியின் தலைவரான விராட் கோலி, 16ம் ஓவரிலும் 17ம் ஓவரிலும், கே.எல் ராகுலின் கேட்சுக்களை கைப்பற்ற தவறினார். அதன் காரணத்தினாலும், இறுதியில் அதிரடியாக விளையாட இயன்றது. பெங்களூரு அணி, வெறும் 109 ரன்கள் குவித்து, 97 ரன்களில் தோல்வியை தழுவியது.  பெங்களூரு அணியின் பேட்டிங்கிலும், விராட் கோலி அவர்கள் சரியாய் விளையாடவில்லை. அதற்கு, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளரான, திரு. சுனில் கவாஸ்கர் அவர்கள், தவறான கருத்துக்களை தெரிவித்தார். அக்கருத்திக்கள், மிகவும் சர்ச்சைக்குரியது. சுனில் கவாஸ்கர் அவர்கள் ஹிந்தி வர்ணனையில், " Inhone Lockdown me to bas Anushka ki gendon ki practice ki hai " கூறினார். அதன் அர்த்தம் யாதெனில், " Lockdown காலகட்டத்தில், விராட் கோலி அவர்கள் அனு

RCB vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து பெங்களூருக்கு, பஞ்சாபுக்கும் இடையில match நடந்துச்சு. அதுல, கே. எல். ராகுல் அசத்தலான ஒரு century போடுறாரு. இந்த வருஷம் IPLஓட first centuryஉம் இது தான். ஒவ்வொரு shotடும் தரமா இருந்துச்சு. அது காரணமா, 206 அடிச்சாங்க பஞ்சாப். திரும்ப chasingல, பெங்களூரு' னால வெறும் 109 runs அடிச்சு all out ஆகிட்டாங்க. இந்த collapseகு காரணம், துபாய் விக்கெட்'ல இருக்குற conditions'அ பஞ்சாப் ரொம்ப correctடா use பண்ணிட்டாங்கனு சொன்னாலும், அதையும் தாண்டி ஒரு சம்பவம் நடந்துச்சு. அது தான், இந்த matchஏ மாத்திச்சு. ஒரு ஓவர் கூட கெடயாது. ஒரே ஒரு தவறு. இந்த மேட்ச்'ஓட Analysis Video என்னோட YouTube Channelல போட்ருக்கேன். அதோட லிங்க் -  https://www.youtube.com/watch?v=m7K_23dmcVY கோலி எப்படி பட்ட fielderனு நாம எல்லாருக்குமே தெரியும். Teamஏ தோக்குற நெலமைல இருந்தாலும், அங்க கூட போராடி நெறய acrobatic catches claim பண்ணுவாரு. அப்டி பட்ட கோலி, fieldingல catches drop பண்ணா ?? நேத்து, முக்கியமான தருணத்துல அது தான் நடந்துச்சு. 16.5 overல 145/3னு தான் score இருந்துச்சு. அப்போ, கே.எல். ராகுல் 83 runs அடிச்

MI vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, மும்பைக்கும் கொல்கத்தாவுக்கு இடையில match நடந்துச்சு. ஒரு பக்கம், ரொம்பவே lateஅ tournamentஅ தொடங்குற, கொல்கத்தா அணி. இன்னொரு பக்கம், முதல் matchல தோல்விய தழுவின மும்பை அணி, எப்படியாவது ரெண்டாவது matchஅ ஜெயிச்சு, 6-0 னு UAEல இருக்குற loss recordஅ போக்குறதுக்கு, ரொம்பவே ஆசைப்படுவாங்க. இதுல, மும்பையோட எண்ணம் தான் ஜெய்க்குது. அதுவும், இந்த IPLளோட first one sided matchஅ முடிஞ்சுது இந்த match Abu Dhabiல நடக்குது. Toss ஜெய்க்குற கொல்கத்தா அணி முதல்ல bowling choose பண்ணுது. ஆனா, bowling ரொம்ப poorஅ இருந்த காரணத்துனாலையும், Hitman Rohit Sharma அவர்கள் ஆடிய சிறப்பான game'னாலயும் 195/5னு score அடிக்கிறாங்க. KKRஅ பொறுத்த வரைக்கும், சிவம் மாவீ'ய த்விர்த்து மீதி எல்லாருமே short balls தான் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அத, ரொம்பவே easyயா விளையாடினாங்க.  KKR திரும்ப பேட்டிங்'கு வராங்க. அவங்களுக்கு, startingலயே ரொம்ப problematicஅ அமையுது. நெனச்ச அளவுக்கு நல்ல துவக்கம் கிடைக்கல. Dew வரும்'னு எதிர்பார்த்து 2nd batting choose பண்ணாங்க. ஆனா, dew வரவே இல்ல. Pitch தான் slow'வாக ஆரம்ப

RR vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
இந்த Match'அ பொறுத்த வரைக்கும்,  ரொம்ப நாள் கழிச்சு ஒரு high scoring encounter. ஆனா, இந்த high scoring match'அ RR ஜெயிச்சதுக்கு பல காரணங்கள் இருக்கு. சென்னை work பண்ணவேண்டிய departmentஸும் நெறையா இருக்கு. இந்த matchல ஏகப்பட்ட turning points இருக்கு. ஆனா, இந்த matchஅ ராஜஸ்தான் ஜெயிச்சதுக்கு முக்கியமா இருக்குற ஒரு turning point'அ பத்தி தான் இந்த திருப்புமுனை segmentல நாம இன்னிக்கி பாக்க போறோம். இந்த match ஷார்ஜா'நடக்குது. Toss ஜெயிச்ச சென்னை அணி, முதல்ல bowling choose பன்றாங்க. காரணம், 2nd inningsல dew factor இருக்குகிறதுனால தான். ராஜஸ்தான் ரொம்பவும் அருமையா விளையாடுறாங்க. சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் ரெண்டு பேருமே, சென்னை bowlersகு ground மொத்தத்தையும் சுத்திகாட்டுறாங்க . இன்னொரு பக்கம், சென்னை bowlers, குறிப்பா spinners, slotலேயே pitch பண்ணிட்டு இருக்க, லட்டு மாதிரி வந்துச்சு. இருந்தாலும், 11  வது ஓவர்ல இருந்து 19வது ஓவருக்குள்ள, match மொத்தத்தையும் சென்னை அணியோட காட்டுக்குள்ள கொண்டு வந்தாலும், அந்த கடைசி ஓவர்...... கடைசி ஓவர்ல bowl பண்ண வந்தாரு, Ngidi. Battingல இருந்தத

SRH vs RCB | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்க்கும் பெங்களூருக்கும் இடையில, துபாய்'ல match நடந்துச்சு. இந்த வருஷம், IPLல நடக்குற 3வது match, இது தான். Toss win பண்ற ஹைதராபாத், முதல்ல bowling choose பன்றாங்க. சிறுவன் தேவ்தட் படிக்கல் மற்றும் ABDஓட சிறப்பான ஆடத்துனால, 163/5னு score அடிக்கிறாங்க. ஹைதராபாத் பொறுத்த வரைக்கும், Top Orderல பார்ஸ்டோ வெறியாட்டம் ஆடினார். ஆனா, அவரை தாண்டி வேற யாரும் பெருசா perform பண்ணல. Middle Orderல இருந்தது ரொம்பவும் அனுபவமில்லாத சிறுவர்கள் தான். இதுக்கு மேல அடியா இருக்குற மாறி, மிட்சேல் மார்ஷோட injury. எல்லாம் சேர்ந்து தோல்விய பரிசா கொடுத்துச்சு.  இந்த match'அ பொறுத்த வரைக்கும், SRH தான் ஜெய்க்குற நெலமைல இருந்தாங்க. அப்புறம் ஏன் தோத்தாங்க ? அந்த திருப்புமுனை எங்க நடந்துச்சு ? நேத்து match மாதிரி ஒரு errorல திரும்புச்சா'னு கேட்டா, கெடயாது. ஒரு ballல திரும்புச்சா'னு கேட்டா அதுவும் கெடயாது. அப்பறோம் எப்போ ? ஒரே ஓவர் !! 16 வது ஓவர் யூஸ்வேந்திர சஹால் கிட்ட விராட் கோலி கொடுக்குறாரு. உள்ள இருந்தது, set batsman ஆன Bairstow. 8 wickets கையில வெச்சுட்டு, 5 ஓவர்ல 43 ரன்கள் அடிச்ச வ

DC vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, டெல்லிக்கு புஞ்சாபுக்கும் நடுவுல match நடந்தது. இந்த வருஷம் IPLஓட ரெண்டாவது match இது தான். ஆனா, அதுக்குள்ள இந்த match Tie ஆகி, Super Overல முடிஞ்சுது. Super Overல டெல்லி ரொம்பவும் easy'அ ஜெயிச்சிட்டாங்க. இந்த thriller gameல ஏகப்பட்ட turning points இருந்துச்சு. ஆனா, இந்த matchஓட தலையெழுத்தே மாறினது, அந்த ஒரு moment'னால தான்.  ஸ்டோய்னிஸோட late flourish காரணமா, 120குள்ளேயே struck ஆகி நிக்க வேண்டிய Delhi Team, 157/8னு ஒரு fighting scoreஅ அடைஞ்சாங்க. பஞ்சாபோட bowling முக்காவாசி நல்ல இருந்துச்சு ஆனா கடைசில மொத்தமா விட்டுட்டாங்க. அதுலையும், கடைசி ஓவர்ல மட்டுமே 30 runs போச்சு. பஞ்சாப் திரும்ப பேட்டிங்'கு வந்தாங்க, ஒரு பக்கம் wickets விழுந்துகிட்டே இருந்தாலும், இன்னொரு பக்கம் மயாங்க் அகர்வால், கடைசி வரைக்கும், தனியாளா நின்னு போராடினாரு. கிட்டத்தட்ட ஜெயிச்சு கொடுத்துட்டாரு. ஆனா, கடைசில 3 ballsல 1 run எடுக்கணும்னு நெலமை இருக்கும்போது, மயாங்க் அகர்வால் அவுட் ஆகிட்டாரு. அதுக்கு அடுத்து கடைசி ballல ஜோர்டான் அவுட் ஆகிட்டதுனால, super overகு game போச்சு. Super Overல பஞ்சாப் 2 ரன் ம

MI vs CSK | IPL 2020 | திருப்புமுனை segment |

Image
திருப்புமுனை segmentஅ பொறுத்த வரைக்கும், இப்போ நடந்துட்டு இருக்குற IPLல ஒவ்வொரு matchல ஒரு turning point situation இருக்கும். அந்த turning point காரணமா, matchஓட நிலைமையே மாறும். அப்டி பட்ட turning point'அ விரிவா பேசுறது தான், இந்த திருப்புமுனை segment. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, match analysisலாம், என்னோட youtube channelல videoவா போட்ருக்கேன். அதுனால தான், blogsல இந்த segmentஅ நான் add பண்ணிருக்கேன் MI vs CSK match நடக்குது. முதல்ல மும்பை ரொம்பவும் superஅ batting பன்றாங்க. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஒண்ணுமே புரில. இவங்கள எப்படி டா அவுட் ஆக்குறது'னு மண்டைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அதுல குறிப்பா 121/3 at the end of 14 oversனு ரொம்பவும் strongஆன நெலமை'ல இருந்தாங்க. MI செம domination காமிச்சாங்க. ஆட்டத்துல திருப்புமுனையே வராதா'னு வாடிக்கிட்டு இருந்த நேரத்துல, 14th over, ஜடேஜா bowl பன்றாரு. Battingல இருந்தது சௌரப் திவாரியும், ஹர்திக் பாண்டியவும். சௌரப், ரொம்பவே set ஆகி இருந்தாரு. ஹார்டிக்கும் போதாத குறைக்கு, ரெண்டு sixes அடிச்சு, செம touchல இருந்தாரு. அப்போ தான், ஜடேஜா fuller

ஓர் அறிவிப்பும் - ஓர் சம்பவமும்

Image
அடுத்த 2 மாதங்களுக்கு, என்னுடைய பதிவுகள், பேசும் வழக்கில் எழுதப்படும். அங்கங்கே ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். IPL பற்றிய தகவல்களும், போட்டிகளின் Analysisகளும், என்னுடைய Youtube பக்கங்களில், காணொளியாக பதிவிடப்படும். எனவே, Blogல், அப்போட்டியில் திருப்பு முனையாக இருக்கும் ஓர் தருணத்தைப் பற்றியே எழுதப்படும். அவ்வாறு உள்ள Analysisகளின் link கீழே உள்ளது. Click செய்து பாருங்கள்.    MI vs CSK, Pre Match Analysis   இப்போ, ஒரு சம்பவத்தை சொல்றேன், கேளுங்க. இது IPL சம்பவம் கெடயாது. ஆனா, t20ல நடந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை நெனச்சு ஒவ்வொரு இந்தியனும், இன்னிக்கி வரைக்கும் பெருமை பட்டுட்டு இருக்காங்க. இனியும் பெருமை படுவாங்க.  2007ம் ஆண்டுல நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் காரணமா, இந்த t20 மோகம், எல்லாருக்கும் பரவுச்சு. அந்த உலகக்கோப்பை'ல நடந்த சம்பவம் தான் இது.  இன்னிக்கி, சரியாய் 13 வருஷத்துக்கு முன்னாடி, சூப்பர் 8 stageல, இந்தியாவும் இங்கிலாந்தும், Durbanல meet பன்றாங்க. அந்த matchல பேசுறதுக்கு ரொம்பவும் முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. India முதல்ல பேட்டிங் செஞ்சு 18வது ஓவர்'ல 1

IPL குறித்து மேலும் தகவல்கள்

Image
நாளை மாலை 6.30 மணியளவிலிருந்து, வீட்டினுள் இருந்தவாறு மிகவும் கொண்டாட்டமாய் இருக்கும். காரணம், IPL தொடர், துவக்கம் பெறுகிறது. இம்முறை பார்வையாளர்கள் இல்லாமல், ஐக்கிய அரபு நாடுகளில், தொடர் நடைபெறுவதால், வீட்டினுள்ளேயே கொண்டாட வேண்டிய தருணமாக அமைந்துள்ளது. இதில், மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் வீரர்கள், ஐக்கிய அரபு நாடுகளை வந்தடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாரங்களுக்கு, Bio - Bubbleல் இருந்து வரும் England அணியின் வீரர்களுக்கு, வேறு ஒரு Bio - Bubbleஐ வந்தடைந்து, அதில் தம்மை பொருத்திக்கொள்வது என்பது கடின செயலாய் அமையாது. ஆஸ்திரேலியா நாட்டின் வீரர்களுக்கும் அவ்வாறே. ஆனால், அணியினுள், முதற்கட்ட போட்டிகளில் இடம்பெற இயலாது. இருப்பினும், பின் வரும் போட்டிகளில் இடம் பெற்று தங்கள் அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியை பொறுத்தவரை, அணியின் தலைவரான ரோஹித் ஷர்மா அவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இவ்வாண்டின் IPL தொடரில், தான் openingல் இறங்கவுள்ளதாக கூறியுள்ளார். மும்பை நிக்கு யார் openingல்

Seriesஐ வென்று பழிதீர்த்தது Australia !!

Image
பழிதீர்க்கும் அளவில் இவர்கள் இருவருக்குமிடையே நிலவி வரும் பகையாது ? என பலரின் மனதில் கேள்வி எழும்பும். சென்ற முறை, 2018ம் ஆண்டில், இவ்விரு அணிகளும், இனைந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் போட்டியிடுகின்றனர். இத்தொடரில், 5-0 என ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. அதனோடு சேர்த்து, தற்போது நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் தல்வியடைந்தது ஆஸ்திரேலியா அணி. ஆதலால், இவையிரண்டிற்கும் இணையாக பரிசளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. மறுபுறம், இங்கிலாந்து அணி இப்போட்டியை வென்றால், கொரோனா நோய்க்கு பின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடர்களில், 5ம் தொடர் வெற்றியை பதிவு செய்வர்.  மென்சேஸ்டர் மைதானத்தில், சென்ற இரு போட்டிகளுக்கு மாற்றாக, பிட்ச் வழங்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியும் அதையே விரும்பியிருந்தாலும், முதலில் பந்துவீசிய வாய்ப்பு கிடைத்ததால், பின்னல் வெற்றியை பதிக்க இயலும் என்று தற்போது தெரிந்திருக்காது. ஸ்டார்க் அவர்கள் முதல் ஓவரை வீச களமிறங்கினார். இங்கிலாந்து அணியிலிருந்து ஜேசன் ராய் அவர்களும் ஜானி பா

SA கிரிக்கெட் அணிக்கு சோதனை மேல் சோதனை !!

Image
  இரண்டு நாட்களுக்கு முன், தென் ஆப்ரிக்கா அணியின் கிரிக்கெட் வாரியமான, CSA நிர்வாகத்தை பணிநீக்கம் செய்து, அதன் இடத்தில், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் குழுவான, SASCOC  வாரியம் செயல்பட களமிறங்கியுள்ளது. அதாகப்பட்டது, தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அரசாங்கமே, இனி அனைத்து வகையான கிரிக்கெட் செயல்பாடுகளிலும் முன்னின்று ஈடுபடுவர். ICCயின் Code of Conduct விதிமுறைகளின் கீழ், எவ்வித சர்வதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளிலும், அந்நாட்டின் அரசு ஈடுபட கூடாது எனவும், மீறினால் அந்த அணியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மற்றும் ICCயின் சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலுமிருந்து தடை செய்யப்படும்.  இப்பிரச்சனையை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, சென்ற ஆண்டு மேற்கொண்டு, அதை கடந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, இவர்களும் வெளியேறும் நிலையில் உள்ளது. இவ்வாறு, மிகவும் இன்னல்கள் நிறைந்த சூழலில் மேலும் ஓர் இன்னல், தன் கால்தடத்தை பதித்துள்ளது. 2012ம் ஆண்டிலிருந்து, தென் ஆப்ரிக்கா'வை சேர்ந்த அனைத்து வித கிரிக்கெட் அணிகளுக்கு, ஸ்பான்சராக பணிபுரிந்த, Momentum நிறுவனம், தனது பதவியிலிருந்து வி

பார்வையாளர்களுக்கு அனுமதி ?! Pakistan நாட்டினுள் இனி வரும் கிரிக்கெட்...!

Image
இன்னும் நான்கு நாட்களில் IPL தொடர், துவங்கவுள்ள நிலையில், IPL அல்லாத செய்திகளை பற்றிய செய்தியை ஏன் பதிவிடுகிறாய் ? என நீங்கள் என்மீது கேள்விகளை எழுப்பலாம். ஆனால், இச்செய்திகள் IPL கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மற்றும், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், எந்த அணிக்கு கோப்பையை தட்டிச்செல்லும் வாய்ப்பு உள்ளது, எவ்வணி நம் நாட்டுக்கு போட்டியாக அமையும் என்று ஆராய்வதற்கு, மற்ற உலக தொடர்களை கணக்கில் கொள்வது மிகவும் அவசியம்.  செப்டம்பர் மாத காலத்தில், ஆஸ்திரேலியா நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் கிரிக்கெட் தொடரில், பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றே செய்திகள் வெளிவந்தது. ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது, கொரோனா'வின் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் பொருட்டு, 50 % பார்வையாளர்களை மைதானத்தினுள் அனுமதிக்க உள்ளோம், என்றே செய்தி வெளிவந்தது.ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையிலான இடைவெளி, இரண்டு மட்டையை அடுத்தடுத்து வைத்திருப்பதால் உள்ள தூரமே ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் கோஷமெழுப்ப கூடாது என்றும், குறித்த பகுதியைக் கடந்து பார்வையாள

விறுவிறு திருப்பம் - வெற்றிபெற்றது England !!

Image
முதல் போட்டியில் தோல்வியை சுவைத்த England அணி, 2ம் போட்டியை வெற்றிபெற இயலுவர். வெற்றியைக் கண்டால், இறுதிபோட்டியோ, இத்தொடரின் தீர்ப்பாக முடிவடையும். ஆனால், Australia அணியோ, 20 ஓவர் தொடரில், 2-1 என்று தோல்வியை கண்ட காரணத்தினால், அதை ஈடுகட்ட, இவ்வொருநாள் தொடரினை கைப்பற்ற முயல்வர். இவ்விரு அணியினர் போட்டியிட்டால், பார்வையாளர்களுக்கு ஓர் முரட்டு தீனியாக அமையும். யாது நடக்கவுள்ளது, எவருடைய எண்ணம் பலிக்கவுள்ளது என இனி வரும் பக்கங்களில் காணலாம். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, ஒரு மாற்றத்தை அறிவித்தார்கள். மோயின் அலி அவர்களுக்கு பதிலாக சாம் கரண் களமிறங்குகின்றார். இரண்டாம் சுழற்பந்து வீச்சாளர் அணியினுள் தேவைப்படாது என்று எண்ணியே வேகப்பந்து வீச்சாளரான சாம் கரண் அவர்களை அறிவித்தார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவின் அணியினுள் எவ்வித மாற்றங்களும் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் அவர்களை மேஜையில் உட்கார வைத்துள்ளார்கள். இதன் குறைபாடு, அப்போது அவர்களை உரைக்கவில்லை.  இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, துவக்கத்திலேயே திணறல். ஸ்டார்க் மற

சுட சுட KKR செய்திகள்

Image
இப்பதிவு பேச்சு வழக்கில் எழுதப்பட்டது, இடையிடையே சில ஆங்கில வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும். இன்னும் 1 வாரத்துல, IPL ஆரம்பிக்குற நேரத்துல, Kolkata Knight Riders அதாவது KKR அணி, சில changes announce பண்ணிருக்காங்க. அதுல சிலது பெருமையா இருக்கும், சிலது பரிதாபமா இருக்கும். ரெண்டுதோட விளக்கத்தையும் இந்த Blogல நான் தெளிவா explain பண்ண போறேன். படிச்சிகிட்டே வாங்க !! முதல்ல பரிதாபம் படவேண்டிய விஷயத்தை பாப்போம். 48 வயசான, பிரவீன் தம்பே'வ KKR ஏலத்துல வாங்குன விஷயம் நம்ம எல்லாருக்கும் தெரியும். அதுக்கு அப்பறோம், BCCIயோட permission வாங்காம, CPLல contract sign பன்னதுனால அவர் இந்த வருஷம் IPLல விளையாடக்கூடாது'னு BCCI தெரிவிச்சுட்டாங்க. அதாவது, BCCIயோட permission இல்லாம, எந்த Indian Player'உம் வெளிநாட்டு tour'ல participate பண்ணக்கூடாது. ஆனா, retirement வாங்குன playersகு மட்டும் தான் permission கொடுப்பாங்க. இப்டி இருக்கும் போது, இந்தியா'ல இருக்குற domestic matchesலயும் IPLலயும் மட்டுமே விளையாட போற இவருக்கு exception கொடுக்கலாம். சரி, இப்போ விஷயம் என்னன்னா, அவர player'அ select

Billingsன் போராட்டம் வீண் - வென்றது Australia !!

Image
ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்று நிறைவடைந்த 20 ஓவர் தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என்கிற கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வாறு  நிலையில், இரு அணிகளுக்குமிடையே ஒரு நாள் தொடர் நடக்கவிருக்கவுள்ளது. இதற்கு முன்னதாக, 2018ம் ஆண்டில், இவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற ஒரு நாள் தொடரில், இங்கிலாந்து அணி 5-0 என்கிற கணக்குடன் வெற்றிபெற்றனர். அந்த சம்பவத்தை மீண்டும் இங்கிலாந்து அணிக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்குடன் ஒரு புறம் களமிறங்க, மறுபுறம் இங்கிலாந்து அணி, தங்கள் வெற்றி வாகையை மேலும் அதிகரிக்க முற்படுவர். இவர்கள் இருவருக்கும் போட்டி என்றாலே, தீவிரமும் படபடப்பும் அதிகரித்தே காணப்படும்.  மஞ்செஸ்டரில் இப்போட்டி நடைபெறுகின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றது. ஒரு புறம் இங்கிலாந்து அணி, 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு களமிறங்க மறுபுறம் ஆஸ்திரேலியா அணி, ஆறிலிருந்து 7 பந்துவீசும் வாய்ப்புகளுடன் களமிறங்கினர். ஆனால், இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி, ஸ்டீவ் ஸ்மித் அவர்களை அணியினுள் சேர்க்கவில்லை. இச்செய்தி அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.  ஆஸ்திரேலியா அ

CSA கிரிக்கெட் பிரச்சனை - ஓர் விளக்கவுரை

Image
நேற்றிரவு, அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. தென் ஆஃப்ரிக்கா'வின் கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்தது, தென் ஆப்ரிக்கா விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் குழு. முதலில், யார் இவர்கள் என்கிற கேள்வி உங்கள் அனைவரின் மனத்திலும் வெளிவந்திருக்கும். South African Sports Confederation and Olympic Committee ( SASCOC ) என்றழைக்கப்படும், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அணைத்து வித விளையாட்டு வாரியத்துக்கு தலையாய் விளங்கும் ஆளும் குழு. அப்போது, Cricket South Africa யார் ? என்றும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். தென் ஆஃப்ரிக்கா நாட்டில் கிரிக்கெட் எனும் விளையாட்டு இயங்குவதற்கு முதல் உரிய காரணம், Cricket South Africa'வாகும். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து வித விளையாட்டுகளும் ஒழுங்காக இயங்குகின்றதா என்று பார்வையிட்டு, அதில் ஏதேனும் தவறு நடைபெற்றால் இவர்கள் நடுநிலையை கடைப்பிடித்து, தக்க தண்டனைகளை வழங்குவர். கிட்டத்தட்ட, தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அரசு நடத்தும் விளையாட்டு துறையே இந்த SASCOC ஆகும். சரி, Cricket South Africa அவ்வாறு என்ன தவறு செய்துள்ளார்கள். CSA நிர்வாகத்தின் இடையில், பல ஊழல்க

TKR clinches the title with their clinical performance,

Image
Trinbago Knight Riders met St. Lucia Zouks met at this year's CPL Final. At one end, Knight Riders, the home team haven't lost a single game whereas on the other end Zouks performance were inconsistent over a last few games. At previous edition, Guyana Amazon Warriors haven't lost single game before the final match, but at final, they were defeated by Barbados Tridents to win the trophy. Same is the timeline for Knight Riders, but they would be looking on to win the game, to become the first team to win the trophy unbeaten. Zouks will be looking to give an upset. As a sole decision so far in this Tournament, Trinbago Knight Riders have won the toss and once again decided to field first. Narine weren't fit and Sikandar Raza were announced as replacement for Narine, which came out as a surprise news. Zouks used the initial powerplay so well. They prepared and structured in a way that they needed to hit atleast a boundary per over to maintain a standard run rate. Especiall

நினைவூட்டும் பழைய தகவல்கள் - 2020

Image
இப்பதிவில் நான் கூறவுள்ள தகவல்கள், சில நாட்களுக்கு முன் வெளியான தகவல்களே. இருப்பினும், இதை பதிவிடுவதன் ஓர் உரிய காரணம், இவையனைத்தும் வெளியான தருணத்தில் நான் இதைப்பற்றி ஒரு வரியும் எழுதவில்லை. அத்தருணத்தில், நடைபெற்றுக்கொண்டிருந்த, இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடரையும், மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த CPL போட்டிகளின் அலசல் பற்றியும் எழுதிக்கொண்டிருந்ததால், இதை நான் சிறிதும் கவனிக்கவில்லை. மன்னியுங்கள் !! இப்பதிவில், அவ்வாறு வெளிவந்த சில தகவலைகளை நாம் அலசவுள்ளோம் !! இலங்கையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி :  இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இவர்களை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள், தங்களின் கிரிக்கெட் பணியை மீண்டும் துவங்க உள்ளார்கள். இலங்கையில், தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றதால், அங்கு பங்களாதேஷ் அணி ஓர் தொடர் விளையாட களமிறங்கியுள்ளார்கள். ஆகஸ்ட் மாத காலகட்டத்தில், இச்செய்தியை  இரு நாட்டின் கிரிக்கெட் மன்றங்களும் இனைந்து உறுதிப்படுத்தியது. ஒரு புறம், IPL தொடர் நடைபெறும் நிலையில், மறுபுறம் அக்டோபர் மாதத்தி