SA கிரிக்கெட் அணிக்கு சோதனை மேல் சோதனை !!
இரண்டு நாட்களுக்கு முன், தென் ஆப்ரிக்கா அணியின் கிரிக்கெட் வாரியமான, CSA நிர்வாகத்தை பணிநீக்கம் செய்து, அதன் இடத்தில், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் குழுவான, SASCOC வாரியம் செயல்பட களமிறங்கியுள்ளது. அதாகப்பட்டது, தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அரசாங்கமே, இனி அனைத்து வகையான கிரிக்கெட் செயல்பாடுகளிலும் முன்னின்று ஈடுபடுவர். ICCயின் Code of Conduct விதிமுறைகளின் கீழ், எவ்வித சர்வதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளிலும், அந்நாட்டின் அரசு ஈடுபட கூடாது எனவும், மீறினால் அந்த அணியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மற்றும் ICCயின் சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலுமிருந்து தடை செய்யப்படும்.
இப்பிரச்சனையை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, சென்ற ஆண்டு மேற்கொண்டு, அதை கடந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, இவர்களும் வெளியேறும் நிலையில் உள்ளது. இவ்வாறு, மிகவும் இன்னல்கள் நிறைந்த சூழலில் மேலும் ஓர் இன்னல், தன் கால்தடத்தை பதித்துள்ளது. 2012ம் ஆண்டிலிருந்து, தென் ஆப்ரிக்கா'வை சேர்ந்த அனைத்து வித கிரிக்கெட் அணிகளுக்கு, ஸ்பான்சராக பணிபுரிந்த, Momentum நிறுவனம், தனது பதவியிலிருந்து விலகியது. அடுத்த ஆண்டின் இடையில், தென் ஆஃப்ரிக்கா அணிக்கும் Momentum நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், நிறைவு பெறவுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை என்றே, Momentum நிறுவனத்தின் twitter பக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு விளக்கம் கேட்டபோது, Momentum நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் தலைவரான, திரு. கரேல் போஸ்மேன் அவர்கள் தெரிவித்தது, "தென் ஆஃப்ரிக்கா நாட்டில், கிரிக்கெட் எனும் விளையாட்டு நெறிமுறையுடனும், தொழில் தர்மமாகவும் இயங்க வேண்டும்", "ஊழலில் இயங்கும் கிரிக்கெட் வாரியத்துக்கு எங்களால் துணைபுரிய முடியாது" என்றாகும். தென் ஆஃப்ரிக்கா அணிக்கு, இடியாக இச்செய்தி வந்தடைந்துள்ளது.
மேலும், தெரிவிக்கப்பட்டது யாதெனில், " 2023ம் ஆண்டு வரை, தென் ஆஃப்ரிக்கா நாட்டின் மகளிர் போட்டிகளுக்கு நாங்கள் துணையாய் நின்று, வழிநடத்துவோம்" என்பதாகும். ஆதலால், ஆண்களின் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கு, புதிய ஸ்பான்சரை தற்போது நியமிக்கவேண்டும். அதற்கு முன், ICC தங்களை தடை செய்யாமல் தப்பிக்க வேண்டும். இவ்வாறு உள்ள இன்னல்களை சமாளிப்பது என்பது கடினச்செயல் ஆகும்.
ஆனால், எப்போது சோதனைகள் ஒரு மனிதனை அதிகம் தாக்குகின்றதோ, அப்போது தான் அவன் சாதனையாளனாக மாறுவான். தென் ஆஃப்ரிக்கா சர்வதேச கிரிக்கெட் அணியும், இதனை எதிர்கொள்ளும். கடந்து வெளிவந்து, மேலும் வலுவுடன் செயல்படும் !!
Comments
Post a Comment