SL vs ENG - முதல் Test, இரண்டாம் நாள் Review

இன்னிக்கி நாள்ல, மழை ரொம்ப அதிகமாவும் match ரொம்ப கம்மியாவும் இருந்துச்சு. மழை, இடி, மின்னல், புயல்ன்னு எங்களை தடுக்க முடியாதுன்னு England ஒரு பக்கம் அசுரவாதம் செஞ்சுட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் சொந்த மண்ணுல, Sri Lanka மண்ணை கவ்வுறத பாக்கும்போது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு. ஒரு காலத்துல, சிங்கம் மாதிரி கர்ஜனையோட வாழ்ந்துட்டு இருந்த Sri Lanka, இப்போ தள்ளாடிட்டு இருக்காங்க. இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spin bowlingக்கு ஏத்தாத அமஞ்சியிருக்கு. ஆனாலும், மழை பேஞ்ச காரணத்துனால, line and length perfectடா இருந்தா மட்டும் தான் spinnersகு கை கொடுக்கும். அந்த அடிப்படையில, மொத wicketடா நம்ம Bairstow, Embuldeniyaகிட்ட மாட்டுறாரு. Batsmanன நல்லா முன்னாடி வர்ற வெச்சு play பண்ண tempt பண்ணாரு. அந்த நப்பாசை, Bairstowவுக்கு எமனா அமைஞ்சுது. அதுக்கு அடுத்து, ரூட் மற்றும் debutantடான Dan Lawrence. Root அவர்களுக்கு கடைசியா 2019ல தான் century வந்துச்சு. அதுக்கு அடுத்து போன வருஷம் முழுக்க century எதுவுமே இல்லாம தான் வெளில போனாரு. அதுவும், அந்த கடைசி century, இதே Galleல தான் அடிக்குறா...