NZ vs WI - முதல் Test, நான்காம் நாள் ( இறுதி நாள் )
நேத்தி முடியுறதுக்குள்ளயே WI team, first innings all out ஆகி, second innings battingகு வந்து, அதுல 6 wickets விட்டு, பரிதாப நிலையில இருந்தாங்க. இவ்ளோ ரணகளத்துலயும் கிளிகிளிப்பு தர்ற மாதிரி ஒரு விஷயம் என்னன்னா, நேத்திக்கு கடைசி sessionல ஒரு சின்ன fight, அவங்ககிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. அந்த fight, இன்னிக்கும் continue ஆகிச்சா ? இல்ல வழக்கம் போல NZ ராஜ்ஜியம் தான் நடந்துச்சான்னு இந்த blogல நாம பார்க்கலாம்.
இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், Blackwood மற்றும் Alzarri Joseph கிட்ட இருந்து ஒரு நல்ல போராட்டம் தெரிஞ்சுது. குறிப்பா, Blackwood கொஞ்சம் கூட அவசரப்படாம, singles and doubles மூலமாவே runs score பண்ணிட்டு இருந்தாரு. Test Matchல இது என்ன பிரமாதம்ன்னு நீங்க கேட்பீங்க. பொதுவா, Blackwood என்னதான் பொறுமையா விளையாடினாலும், அங்கங்க lofted shots அவருகிட்ட இருந்து பார்க்க முடியும். அவரு அவுட் ஆகுறதுக்கு முக்கியமான reasonனாவும் இது அமைஞ்சிருக்கு.
அப்படி உள்ள ஒரு நிலைமையில, இன்னிக்கி அவரு ஒரு இடத்துலயும் chance எடுக்கல. தள்ளி தள்ளி runs score பண்ணி, இந்த ஒரு ஆட்டத்தை வெச்சே centuryயும் அடிக்குறாரு. அற்புதமான ஒரு சதம். இன்னொரு பக்கத்துல இருந்து Joseph, line ballல மட்டும் attack பண்ணி, மீதி வெளில போகுற ஒவ்வொரு ballஅயும் correctடா spot பண்ணி well left பன்றாரு. இப்படி முதல் session பூரா இவங்க ரெண்டு பேரோட ஆட்டம் தான்.
இந்த முதல் sessionல, New Zealandடோட fieldingகும் ரொம்ப சுமாரா இருந்துச்சு. முக்கியமா slip catching. ஏகப்பட்ட catches அங்க வந்திருக்கு, அதுல நெறயா விடுறாங்க. அப்புறம் எப்படி தான், இது கடைசி நாள்'லா அமைஞ்சுது ?
ஒரு test match'அ பொறுத்த வரைக்கும், என்னதான் நாம நல்ல விளையாடினாலும், ஏதாவது ஒரு sessionல நாம தப்பு பண்ணா, அந்த gameமே நம்ம பக்கத்துல இருந்து விலகி போயிடும். இதுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இந்த வருஷம் இடையில நடந்த, Englandக்கும் Pakistanகுமான முதல் test போட்டி.
அந்த மாதிரி, West Indies ஆரம்பத்துல செஞ்ச தப்பு எல்லாத்தையும் சரி செய்யுற மாதிரி என்னதான் இந்த ஒரு inningsல போராடுனாலும், போயி சேர வேண்டிய இலக்கு ரொம்பவே அதிகம். ஒரு வேல, முதல் inningsல all out ஆகாம இருந்து, திரும்ப பெரிய score அடிச்சியிருந்தா, நிச்சயமா இந்த test matchல ஒரு உசுரு இருந்திருக்கும். ஆனா, சீக்கிரம் all out ஆனதுனால, இப்போ competitionனே இல்லாம போயி முடிஞ்சிருக்கு.
ஆமாம், second inningsல மொத்தமா parcel பண்ணி அனுப்பிட்டாங்க. 247 runsகு all out ஆகி, இந்த test matchல தோல்வியை தழுவியிருக்காங்க. Wagner 4 wicket haul எடுக்குறாரு. இந்த bodyline short ball technique, second inningsல நல்லாவே கை கொடுத்திருக்கு. நேத்திக்கு மாதிரி, இன்னிக்கி மழை பெய்யவே இல்ல. நல்ல வெயில்.
Man of the Match யாரு அப்படிங்கிற கேள்வியே உங்களுக்கு வர்ற கூடாது. ஒரு மனுஷன், almost 2 நாள் முழுக்க நின்னு, 251 அடிச்சியிருக்காருன்னா, அவரைத்தாண்டி வேற யாருகிட்ட நீங்க Man of the Match Awardட கொடுத்திட போறீங்க ? So, Kane Williamson தான் Man of the Match.
Shane Dowrich பொறுத்த வரைக்கும், அவரு ரெண்டு inningsலயும் விளையாடல. ரெண்டாவது test matchல இடம் பெறுவாரான்னு கூட தெரியாது. காயம் காரணமா, absent hurt ஆகிட்டாரு. இவர் இப்படி absent hurt ஆனதுனால தான் நமக்கு Alzarri josephங்கிற bowler குள்ள இருக்குற அந்த ஒரு lower order batsmanனோட skills பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
Comments
Post a Comment