NZ vs PAK - இரண்டாவது Test, மூன்றாம் நாள் Review

நேத்து நாள் ல முடிக்கும்போது, நியூஸிலாந்து 286 runs அடிச்சு அதுல வெறும் 3 wickets மட்டுமே இழந்து, நல்ல நிலைமையில இருந்தாங்க. அவங்கள பொறுத்த வரைக்கும், ஒரு பயங்கரமான lead எடுத்து பாகிஸ்தான்ன திரும்ப bat பண்ண வைக்கணும். கூடவே, இந்த test match'அ ஜெய்ச்சிட்டு, 2021 ICC World Test Championship போட finalsக்கு qualify ஆகணும்ன்னு ஒரு முடிவும் மனசுல இருந்துச்சு. காரணம், இதுக்கு அடுத்து அவங்களுக்கு test series கெடயாது. இவ்ளோ எதிர்பார்ப்போடு தொடங்குன இந்த மூணாவது நாள்ல, என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பார்க்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு எரிய நெருப்புல என்னைய ஊத்துனா கதையா தான் அமைஞ்சுது. Pitch'அ பொறுத்த வரைக்கும், நேத்து விட இன்னிக்கி grass கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு. ஆனா, மழை பேஞ்சுது. எந்த ஒரு fast bowlerருக்கும், மழை'ங்கிற ஒரு விஷயம்னா ரொம்ப புடிக்கும். அப்படி இருக்கும்போது, இங்க பாகிஸ்தானோட fast bowlersனால ஒண்ணுமே பண்ண முடியாம திண்டாடிட்டு இருந்தாங்க. நேத்து போலவே இன்னிக்கும் நிறைய catches வந்துச்சு. Kane Williamson னோடதே ரெண்டு catches,...