NZ vs PAK - முதல் test, இரண்டாம் நாள் Review

நேத்திய நாள பொறுத்த வரைக்கும், 87 overs முடிஞ்சு அதுல Kane Williamson 94 runsகு not outல இருந்தாரு. நியூஸிலாந்து teamமும் மோசமான startகு அப்புறம், ரொம்பவே அருமையா recover ஆகி 223/3னு நல்ல நிலைமையில நின்னாங்க. இன்னிக்கி Kane Williamson hundred அடிச்சாரா ? யாருக்கு சாதகமா இன்னிக்கி நாள் அமைஞ்சுதுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம்.

இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், வழக்கம் போல tensionனே ஆவாமா, calmமா தன்னோட hundredட reach பண்ணுறாரு நம்ம Kane Williamson. தன்னோட 23வது சதம் இது. Hundred அடிச்சது மட்டும் இல்லாம இன்னிக்கி இவருகிட்ட இருந்து நிறைய cover drives பார்க்க முடிஞ்சுது. Pakistan bowlersகு சில எடத்துல வழுக்கிட்டு போச்சு. அப்போ line miss ஆன ஒவ்வொரு ballலயும் coversல பொலந்தாரு. 

ஆனாலும், அவருகிட்ட இருக்குற ஒரு பிரச்சனை, milestones reach பண்ணதுக்கு அப்புறம் accelerate பண்ணுறது. இன்னிக்கி எல்லா ballலயும் அடிக்க போனாரு. அதுல ஓரளவுக்கு success பார்த்தாலும், West Indiesகு எதிரா அடிச்ச 251க்கு equalல இங்க அடிக்க முடியாம போவுது. 129 runsகு out ஆகுறாரு. 

Henry Nicholls ஒரு decent fifty அடிச்சதுக்கு அப்புறம், அவரும் Naseem Shahவோட short ballsல விழுறாரு. ஒன்றரை நாளா கஷ்டப்பட்டு வீசிகிட்டே இருந்த short length deliveriesக்கு பலனா இந்த ஒரு wicket அமைஞ்சுது. 

இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், உண்மையான hero BJ Watling. ஆமா, Henry Nicholls மற்றும் Kane Williamson out ஆனதுக்கு அப்புறம், திரும்பவும் match பாகிஸ்தான் பக்கம் வந்துருச்சு. இந்த முறை, நியூஸிலாந்துக்கிட்ட சொல்லிக்குற அளவுக்கு batsman யாரும் கெடயாது. அப்படி இருக்கும்போது bowlers கூட சேர்ந்து, நிறைய overs விளையாடி, அதுல perfect defensive shots அடிச்சு, neat'அ கொண்டு போனாரு.

கொஞ்சம் width கொடுத்தா போதும், coversல வெளுத்து வாங்குனாரு. ரொம்பவே அற்புதமான ஒரு 73. ஆனா, spinnersக்கு ball கொஞ்சம் திரும்ப ஆரம்பிச்சுது. அதுக்கு ஒரு சிறந்த காரணம், Yasir Shahவோட bowling தான். நேத்து வரைக்கும் wicketடே விழாம இருந்த இவருக்கு, இன்னிக்கி நாள்ல மட்டுமே மூணு wicketடுகள எடுக்குறாரு. 

இருந்தாலும் BJ Watlingகோட ஆட்டம், நியூஸிலாந்து teamம 431ன்னு ஒரு பெரிய scoreருக்கு கொண்டு போயி சேர்க்குது. ஒருவேளை இவரையும் காலி பண்ணியிருந்தா, 300க்குள்ளேயே முடிஞ்சிருக்கும். ஆனா, அது நடக்காம தடுத்து நிறுத்துவது சிறப்பா அமைஞ்சுது.

அதுக்கு அடுத்து விளையாடின 20 overs, பாகிஸ்தானுக்கு பக்கு பக்குன்னு இருந்திருக்கும். ரொம்பவே trickyயான batting track. இங்க எப்பேர்ப்பட்ட சொதப்பல் நடந்திருக்கலாம். ஆனா, openers'ஆன Shan Masood மற்றும் Abid Ali, எந்த வித riskகும் எடுக்காம, பொறுமையா கையாண்டாங்க. கடைசில, ஒரு மோசமான deliveryக்கு Shan Masood out ஆனாலும், அது வரைக்கும் அவரு ஒரு இடத்துலயும் விட்டு கொடுக்கல. 

நாளைக்கி, இன்னும் extra spin இருக்கும்ன்னும், battingக்கு கொஞ்சம் சாதகமா இருக்கும்னும் எதிர்பார்க்கப்படுது. பாப்போம், காலம் தான் பதில் சொல்லும்.!


  
 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?