NZ vs WI - முதல் டெஸ்ட், இரண்டாம் நாள் Review
நேத்து, முதல் நாள் முடியும்போது, Williamson அவர்கள் 97*ல இருந்தாரு. இன்னொரு பக்கம், Ross Taylor set ஆகி, மொத்தமா 243/2னு ரொம்ப வலுவான நிலையில இருக்க, இன்னிக்கி இரண்டாவது நாள் தொடங்குது. இந்த ரெண்டாவது நாள்'ல என்ன நடந்துச்சுன்னு, இந்த blog postல, review பண்ணலாம்.
என்னடா இது, தமிழும் இல்லாம, Englishம் இல்லாம ரெண்டையும் mix பண்ணி எழுதிரியே'ன்னு நெறைய பேருக்கு மனசுக்குள்ள தோணலாம். நான் எழுதுற review எல்லாருக்கும் பஎளிமையா புரியணும்னு தான் இப்படி ஒரு try. படிச்சு பார்க்கும்போது, ரொம்ப easyயா இருக்கும்.
இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, Ross Taylor கொஞ்சம் aggression காட்டுறாரு. அவரை dismiss பண்ணனும்னு, 3 slip fielders set பண்ணி, உள்ள கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இந்த strategy, நல்லா வேலையும் செஞ்சுது. அவரு dismiss ஆன கொஞ்ச நேரத்துலயே, Nicholls அவர்களையும், அதே மாதிரி slipல fielders set பண்ணி dismiss பண்ணாங்க. இப்படி முதல் 1/2 மணி நேரம், West Indies'ஓட bowling dominate பண்ணுச்சு. ஆனா, இது எல்லாத்தையும் மொத்தமா அடிச்சு ஓட விட்டாரு Kane Williamson. அவரோட gameல செம transition இருந்துச்சு. நேத்து மாதிரியே, இனிக்கும் ஆரம்பத்துல இருந்த new ballல கொஞ்சம் trap பண்ண பாத்தாங்க. அதுல ரெண்டு வாட்டி, LBWல இருந்து escape ஆகிட்டாரு. Once, கொஞ்சம் settle ஆனதுக்கு அப்புறம், ஆட்டத்தை தன்னோட controlளுக்கு கொண்டு வந்துட்டாரு. Front footல dominate பண்ணிட்டு இருக்குற இந்த காலகட்டத்துல, back footed shots மூலமா, gameம கொண்டு போனாரு நம்ம Kane Williamson. அதுவும் 150 runs, reach பண்ணதுக்கு அப்புறம், ஒவ்வொரு ballலயும் singles and doublesகு work பண்ணுறாரு. அதே நேரத்துல, outside off stumpல, over pitch deliveries வந்தாலே, அவரோட typical cover drives ஆட்டிக்கிட்டே இருந்தாரு. இதுவே hip rangeல, ballல கொண்டு வந்தா, அதா deep fine legல தட்டி விட்டாரு. இப்படி, ஒவ்வொரு ballகும் ஏத்த மாதிரி, switch in and switch on பண்ணிகிட்டே இருந்தாரு. 200 reach பண்ணதுக்கு அப்புறம், chance எடுக்க ஆரம்பிச்சாரு. இவரு chance எடுக்குறாரேன்னு, fieldட spread பண்றங்க. சரி, எவ்ளோ நேரம் spread பண்ணி வெக்குறிங்கன்னு நானும் பாக்குறேன்'னு சொல்லி, அதுக்கு ஏத்த மாதிரி adjust பண்ணி ஆடுறாரு. " இவரு எப்படி போட்டாலும் அடிக்குறாரு " னு மண்டைய பிச்சிகிட்டு நின்னுது West Indies team. இவருக்கு supportiveவா middle orderல யாரும் நிக்கலானாலும், lower orderல Jamieson, quick runs அடிச்சு கொடுத்தாரு. அவரோட knock, ரொம்பவே vitalலா இருந்துச்சு.
ஆயிரம் தான் சொல்லு, Williamson Williamson தான் யா ! முதல்ல உள்ள கொண்டு வர try பண்ணி, அதுக்கு அப்புறம் around the wicketல இருந்து edge எடுக்கலாம்ன்னு முயற்சி பண்றாங்க. எல்லாத்துலயும் மண்ணு. 411 பந்துகள்ல 251 அடிக்குறாரு. இதை அடிச்சதுக்கு அப்புறம், வரவே அவசரப்பட்டு catch கொடுத்துட்டு போறாரு. ஆனாலும், இந்த வருஷத்தோட Best Test Knockனா, இதை தான் நான் சொல்லுவேன். 519/7னு ஒரு பெரிய ஸ்கோர் அடிச்சு declare பன்றாங்க, நியூஸிலாந்து அணி.
இதுல Session wise நாம பிரிச்சு பாத்தோம்னா, முதல் sessionல 32 overs நடக்குது. அதுல, 103 runs அடிச்சு 2 விக்கெட்டுகளை விடுறாங்க நியூஸிலாந்து. ரெண்டாவது sessionல 29 overs நடக்குது. அதுல 131 runs எடுக்குறாங்க, 2 wickets இழந்து. கடைசி sessionல மொத்தம் 32 overs. அதுல 6 overs, நியூஸிலாந்து விளையாடி, 42 runs அடிச்சு, 1 wicketட இழக்குறாங்க. மீதி 26 overs மொத்தத்தையும் விளையாடுறது West Indies தான்.
West Indies team battingகு வர்றாங்க. இந்த 26 oversல ஒரு விக்கெட் கூட இழக்காம, நியூஸிலாந்து'ஓட கத்தி மாதிரி sharpபா இருக்குற pace attackக தடுத்து நிறுத்தி ஆடுறாங்க. Kraig Brathwaite மற்றும் John Campbell, ரெண்டு பேருக்கும் short balls நெறைய போட்டு, ஆசையும் காட்டுறாங்க கடுப்பையும் ஏத்துறாங்க. இருந்தாலும் பரவால்ல, chance எடுக்க வேணாம், தரையை பார்த்த மாதிரி bat'ஓட face'அ வெச்சு play பன்றாங்க. இன்னிக்கி, இவங்க ஆடுன ஆட்டமும் நல்லா இருந்துச்சு. இங்க இருந்து அடுத்த மூணு நாள்ல, West Indies எப்படியாவது draw பண்ணனும்னு தான் பார்ப்பாங்க. ஏன்னா, New Zealand தான் இப்போ commanding positionல இருக்கிறாங்க.
நாளைக்கு 3வது நாள் நடக்க போவுது. இந்த மூணாவது நாள் முடிஞ்சதும், அதை பத்தி இந்த blogல review posts வரும். அதையும், படிச்சு பாருங்க !!
Comments
Post a Comment