கேன் வில்லியம்சன் எனும் சிரிப்பின் சிகரம்
ஆண்டு - 2019, நாள் - ஜூலை 10, இடம் - லார்ட்ஸ் மைதானம், போட்டி - 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, அணிகள் - இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து.
உலகக்கோப்பையின் முக்கியத்துவத்தைப்பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். மிகவும் சிறப்புவாய்ந்த தொடர் ஆகும். அவ்வாறு உள்ள நிலையில், 2019ம் ஆண்டின் இறுதிப்போட்டி, சமனில் முடிவடையும். சமனில், முடிவடைந்ததனால், வெற்றியாளரை தேர்வு செய்ய, ஐசிசி நிர்வாகம், சூப்பர் ஓவர் விளையாட திட்டமிடுகின்றது. ஒருவேளை சூப்பர் ஓவரும் சமனில் முடிவடைந்தால், எந்த அணி, அதிக பௌண்டரிகளை குவித்துள்ளதோ, அவ்வணியே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்., என கூறினர். நினைத்தவாறு, சூப்பர் ஓவரும் சமனில் முடிவடைந்தது. இங்கிலாந்து அணியே அதிக பௌண்டரிகளை குவித்திருந்ததால், அவர்களே வெற்றிபெற்றதாய் அறிவிப்பர். பல சாரார், அத்தீர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தாலும், அங்கு தோல்வியடைந்த, நியூஸிலாந்து அணியின் தலைவர் மட்டும், தனது ஏமாற்றங்களையும், சோகங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு, சற்று புன்னகைப்பார். கண்களில் அழுகை இருப்பினும், அதை அடக்கிக்கொண்டு புன்னகைப்பார். வேறு எவராய் இருப்பினும், ஓர் கலவரத்தையே உண்டாகியிருப்பர். காரணம், வெற்றியாளரை தேர்வு செய்த முறையே ஆகும். ஆனால், சிறிதும் உணர்வுகளை வெளிக்காட்டாது, சூழலை, மிகுந்த மனவலிமையோடு சமாளித்து சென்றார். அன்று, வெளிவந்தது, கோபம் எனும் முட்டாள்தனத்தின் முழு உருவம். அவ்வாறு தோல்வியடைந்த அணியின் தலைவர் தான் , கேன் வில்லியம்சன்.
8ம் ஆகஸ்ட், 1990ம் ஆண்டில், டௌரங்கா எனும் நியூஸிலாந்து நாட்டு நகரில், கேன் வில்லியம்சன் அவர்கள் பிறக்கின்றார். இளம் வயதிலிருந்தே, கிரிக்கெட்டின் மீது அளவுகடந்த காதல் கொள்கின்றார். விராட் கோலி அவர்களும் ஐவரும் ஒரே காலகட்டத்தில், 19ம் வயதிற்கும் கீழ் உள்ள வீரர்களின் உலகக்கோப்பை தொடரில், எதிர்கொண்டுள்ளார்கள். அதிலும், இறுதிப்போட்டியே ஆகும். அப்போதும், தோல்வியடைகின்றார், கேன் வில்லியம்சன்.
பேட்ஸ்மேனாகவும், தலைவனாகவும் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு, வலம் வருகின்றார். பேட்டிங்கில், பெரிதும் பலம் கொடுக்காது, புத்திக்கூர்மையை தீட்டி விளையாடும் வீரர் ஆவார். தான், சர்வதேச கிரிக்கெட் அணியில், கால்தடம் பதிக்கும் அடுத்த ஆண்டிலேயே, 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், களமிறங்குகின்றார்.
பேட்டிங்கில், தனது மாணிக்கட்டுகளை பயன்படுத்துவதில், வள்ளலாக திகழ்கின்றார். "அற்புதமான நான்கில்", இவரும் ஒருவரே. தோல்விகள் பலவற்றை தான் கண்டிருந்தாலும், மேலும் விடாது முயற்சிக்கும் வீரராவார். தற்போது இல்லையென்றாலும், பிற்காலத்தில் நிச்சயம், தான் இழந்த வெற்றிகள் அனைத்தும், தனது கதவுகளை மீண்டும் தட்டும்.
பேட்டிங்கில், தற்போது, நியூஸிலாந்து அணியின் சார்பாக, அதிக சதங்களை குவித்த வீரர்களுள், முதன்மை இடத்தை பிடித்திருக்கின்றார். இருப்பினும், தனது பொறுமை, அடக்கம் அனைத்தும் தன்னை பல காலங்களுக்கு கட்டிக்காக்கும். அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளையும் இணைந்தவாறு, தான் 14,000 ரன்களை, இதுவரை குவித்துள்ளார். மேலும், பலம் காலம் கிரிக்கெட் உள்ளது. இன்னும் பல மாயன்கள் காத்திருக்கின்றது.
"கஷ்டத்துல சிரிச்ச வேற லெவெலு
இஷ்டப்பட்டு உழைச்ச வேற லெவெலு "
Comments
Post a Comment