ஷார்ட் பந்துகள் எனும் கடலில் மூழ்கியது பாகிஸ்தான்

கிரிக்கெட் உலகக்கோப்பை '19 நினைவுகள் 


சரியாய் இன்று, ஒரு ஆண்டிற்கு முன், பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள், நாட்டிங்காம் மைதானத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மிகவும் தெளிவாக காணப்பட்டது மேற்கு இந்திய தீவுகள் அணி. முதல் பந்திலிருந்து வெறும் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த உள்ளோம் என எதிராணியிற்கு சமயங்களில் உணர்த்தினார்கள். ஓப்பனிங்கில் ஃபாகர் ஜமான் சிறிது விரைவாக ரன்களை சேர்த்தாலும், மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சில், வலையில் சிக்கிய மீன்களை போன்று தப்பிக்க வழியில்லாமல் சுருண்டது. குறிப்பாக அவர்களை வீழ்த்தியது ஷார்ட் பந்துகளில் (இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் அரை குழி பந்துகள்). வரலாற்று சிறப்பு மிக்க மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்டி ராபர்ட்ஸ், மைகேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல் போன்ற இவர்களின் உக்தியினையும் நேரில் கண்டவாறு அருமையாக இருந்தது. 80களில் ஒரு ஓவரில் இதனை அறைக்குழி பந்துகள் மட்டுமே வீசவேண்டும் என்கிற கட்டாயம் அப்போது இல்லாத காலகட்டத்தில், எதிரணியை தாக்குவார்கள். அவ்வாறே, அன்றும் நடந்தது. மற்றும் பாக்கிஸ்தான் அணியினை சேர்ந்த ஒரு வீரரும் அரை குழிப்பந்துகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளவில்லை. குறிப்பாக ரசல், பக்கர் ஜமானின் விக்கெட்டை வீழ்த்தும் போது, அறைக்குழி பந்தினை வீசினார். முதல் முறை தப்பித்தார். அடுத்த முறை, சிறிது லெங்த்தை குறைத்து, உடலினை நோக்கி வீசினார். அறைக்குழி பந்து என நினைத்து, தனது கண்களை மூடிக்கொண்டு புள் ஷாட் விளையாட முயன்றார். அதில், பாட்டின் பிற்பகுதியில் பந்து மட்டையில் பட்டு, ஸ்டம்பினை அடித்தது. அதிலும் குறிப்பாக பல மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து மைதானங்களில் சில போட்டிகள் விளையாடி தங்களின் பயிற்சியை தொடங்கினார்கள். குறிப்பாக இதற்கு முன், தேன்கலந்து அணியிற்கு எதிராக 300க்கும் மேல் ரன்களை அடித்த நிலையில், இன்று சொதப்பியது அவர்களின் அரை குழி பந்திற்கு எதிராக எடுத்த குறைந்த அளவு பயிற்சியினை வெளிக்காட்டுகின்றது. ஷெல்டன் காட்ரல், சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே அரை குழி பந்துகளால் எதிரணியை ஆட்டிப்படைக்கும்பொழுது, நாட்டிங்காம் மைதானத்தில், காற்று சிறிது அதிகம் வீசும் இடத்தில், அவருக்கு ஆட்டம் நன்கு பொருந்தியது. அவர் வீசிய 5.4 ஓவர்களில் 27 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹோல்டர் முதலில் தாக்கப்பட்டாலும், பின்னர் அவரும் காற்றேல்லும் இனைந்து பந்துவீச்சில் பார்ட்னெர்ஷிப்புடன் விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஒரு ஓவர் காட்ரல் விக்கெட் கைப்பற்றினால், அடுத்த ஓவரில் ஹோல்டர் விக்கெட்ட கைப்பற்றினார். எனக்கு தெரிந்து, இப்போட்டியில் தான் சுழற்பந்து வீச்சாளர்களை இரு அணியினரும் பயன் படுத்த வில்லை. 105 ரன்களுக்கு பாகிஸ்தான் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டிங்கை பற்றி பெரிதாக பேசுவதற்கு ஏதும் இல்லை. காரணம், அவர்கள் வெகு விரைவாக ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றார்கள். ஆனால், பாக்கிஸ்தான் அணியினை பொறுத்த வரை, வலுவான் பந்துவீச்சினை வைத்திருந்தாலும், மேற்கு இந்திய தீவுகளிடம் உள்ள அதே யுக்தியினை கையாண்ட முயன்றார்கள். ஆனால், முகமத் அமிரினால் மட்டுமே அதை சிறப்பாக செயல்படுத்த முடிந்தது. காரணம், கிறிஸ் கெயில் விளையாடும் பொழுது அவருக்கு அறைக்குழி பந்து வீச வேண்டும் என்றால், வழக்கத்தினை விட அதிக வேகத்தில் பந்தினை வீசினால் மட்டுமே வேலை செய்யுமே தவிற, சிறிது வேகம் குறைந்தால் அவர் டீப் ஸ்குவையர் லெக் திசையில் எளிதாக சிக்ஸர் அடிப்பார். மேற்கு இந்திய தீவுகள் அணியில் உள்ள அணைத்து வீரர்களும் உயரமானவர்கள். தெளிவாய், திட்டமில்லாமல் அறைக்குழி பந்தினை வீசினால், பௌண்டரிகளுக்கு தன் பந்துகள் ஓடும். முகமத் அமீர் 6 ஓவர்களில் 26 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை தவிர்த்து, வேறு யாரும் சிறிது ஆறுதல் தருமாறு தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இறுதியில் வெறும் 13 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது ஷெல்டன் காட்ரெல்        

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?