NZ vs WI - முதல் டெஸ்ட், முதலாம் நாள்
NZக்கும் WIக்கும் இடையில, test series நடக்குது. இந்த test seriesல 2 matches நடக்கும். இதுல முதல் test match, Hamiltonல இருக்குற Seaddon Park மைதானத்துல, இன்னிக்கி நடக்குது. இந்த seriesல நடக்கப்போற ரெண்டு test matchesஅயும், ஒவ்வொரு நாள் முடியும்போது, அந்த நாளோட reviewவ இந்த blogல நாம பார்க்க போறோம்.
இன்னிக்கி, முதல் நாள். ஆரம்பமே, மழையோடு ஆரம்பிக்குது. அது காரணமா, ஒரு மணிநேரம் கழிச்சு தான் மழை நின்னு, matchஏ ஆரம்பிக்குது. Toss ஜெயிக்கிற WI அணி முதல்ல bowling choose பண்றாங்க. பச்சை பசேல்னு pitch இருந்துச்சு. ஆத்தி, பச்சை பசேல்னு இருக்கே, ball பழசும் ஆவாதே, fast bowlers பூந்து விளையாட போறாங்கன்னு தான் எல்லாரும் நெனச்சாங்க. அதுக்கு ஏத்த மாதிரி, Debut பண்ற Will Youngகும் டக்குனு அவுட் ஆகுறாரு. WIக்கு தான் upper hand இருக்குனு எல்லாரும் நினைக்கும்போது, " இதெல்லாம் நீ உன் கனவுல கூட நெனச்சு பாக்கக்கூடாது'னு" Lathamமும் Kane Willaimsonனும் batting மூலமா சொல்றாங்க.
WI Bowlers, 3 slip fielders நிக்கவெச்சு, pitchல இருக்குற ஒரு excessive movementட use பண்ணி, short lengthல pitch பண்ணி உள்ள கொண்டு வந்துட்டே இருந்தாங்க. ஒரு சின்ன தவறு பண்ண, மொத்தமா சுருட்டி பொட்டலம் பண்ணிடுவாங்க. அப்படி இருக்குற நெலமைல Latham ரொம்ப தெளிவா சில விஷயத்தை மட்டும் திரும்ப திரும்ப பண்ணிகிட்டே இருந்தாரு. Fuller Lengthல middle and leg stump lineல வர்ற ஒவ்வொரு ballலயும் flick பன்றாரு. அதுவே bowler, over the wicketல இருந்து, stump lineல short lengthல pitch பண்ணி, கொஞ்சம் வெளில வந்த defense'உம் அதுவே ரொம்ப வெளில போனா, third man directionல late cut shotsஉம ஆடி runs score பண்ணிட்டு இருந்தாரு. இதுவே, உடம்ப நோக்கி short ball வீசுன, அதுல இருந்து pull shots அடிச்சாரு. இவ்ளோ தான் திட்டமே, மீதி stumpகு வந்தா defense'உம் கொஞ்சம் வெளில வந்த leaveஉம் பண்ணிட்டு இருந்தாரு. ரொம்ப நேரம் ஆட்டம் காமிச்சாரு. 86 runs அடிச்சாரு. செமயான batting.
இவரை எப்படி நான் விடுவேன். நியூஸிலாந்து team'மோட captain Kane Williamsonனோட அசத்தலான ஆட்டத்தை பத்தி பேசாம விடுவேனா. இன்னிக்கி 97*'ல முடிச்சிருக்காரு. ஆரம்பத்துல, pitchல இருந்து extra swingக use பண்ணி, chestட target பண்ணி bowl பண்ணிகிட்டே இருந்தாங்க. இவரும், கொஞ்சம் struggle பண்ணிட்டு இருந்தாரு. ஆனா, ரொம்ப நேரம் களத்துல நிக்குறாரு, ஏதாவது சம்பவம் பண்ண போறாருனு wait பண்ணி பாத்துட்டு இருக்கும்போது, bowler எப்போ தப்பு பண்ணுவாருன்னு அவரு காத்துட்டு இருந்தாரு. அதே மாதிரி, கொஞ்சம் wideடா போடும்போது, cut shots and square drives ஆடுறாரு. அதுக்கு அடுத்து இன்னும் உள்ள கொண்டு வரும்போது, பின் பக்கம் flick பண்ணுறாரு. கொஞ்சம் timing கிடைக்குது. அதுக்கு அப்புறம், திரும்ப இவருக்கு chest rangeல short ball போடுறாங்க. இந்த முறை, நல்ல back footல நின்னு defend பண்ணுறாரு. அதுக்கு அப்புறம், அவரு நெனச்ச மாதிரி தான் match நகுந்துச்சு.
இங்க, fast bowlersகு advantage'அ இருக்குற pitchல ஏன் West Indies தடுமாறுனாங்கன்னு கேட்டீங்கன்னா simple reason, Plan A சொதப்புச்சுனா, Plan B ஏதும் இல்லாம எறங்குறது தான். Test matchல பொறுமை ரொம்ப முக்கியம். Batsmanனுக்கு ballல உள்ள கொண்டுவந்து, sharpபா அந்த off stumpப அடிக்கிற மாதிரி போட்டிருக்கும். இல்ல, பின்னாடி நிக்குற 3 slip fieldersக்கு வேலை கொடுக்குற மாதிரி, batsmanனுக்கு edge எடுக்க வெச்சிருக்கணும். Field Setupக்கு ஏத்த மாதிரி bowl பண்ணல. இதெல்லாம் தாண்டி, இந்த pitch'அ நல்லா புரிஞ்சிகிட்டு play பண்ண Latham மற்றும் Williamsonகு தான் full creditsஉம் கொடுக்கணும். இப்போ 243/2னு ரொம்ப solid ஆனா நிலமைல இருக்குறாங்க New Zealand.
Comments
Post a Comment