NZ vs PAK - முதல் Test, முதலாம் நாள் Review
West Indiesக்கு எதிரா ஒரு successful'ஆன series'அ முடிச்சதும் அப்புறம், இப்போ Asian team'ஆன பாகிஸ்தான் கூட மோதுறாங்க. T20 seriesல, ரெண்டு match நியூஸிலாந்தும் ஒரு match பாகிஸ்தானும் ஜெயிக்குறாங்க. இந்த நிலைமையில, டெஸ்ட் கிரிக்கெட்லயாவது, நாம நம்மளோட முத்திரையை பாதிக்கணும்னு மும்முரமா இருந்தாங்க பாக்கிஸ்தான். ஆனா, நியூஸிலாந்து ஒன்னும் சளச்சவங்க கிடையாதே. 0.09 pointsல No.1 Test Rankingக miss பண்ணியிருக்காங்க. கிரிக்கெட் வரலாற்றுலயே முதல் முறையா, NZ team test cricketல No.1 position அடையப்போறாங்க. அவ்வளவு assaultடாவா விட்ருவாங்க. என்ன நடந்துச்சுன்னு இந்த Blogல நாம பார்க்கலாம்.
Mount Maunganuiல இருக்குற Bay Oval Stadiumல தான் இந்த match நடக்குது. Toss ஜெயிக்கிற Pakistan team முதல்ல fielding choose பன்றாங்க. Decision மட்டும் எடுத்தா பத்தாது, அதை properரா executeடும் பண்ணனும். அந்த வகையில, ஓரளவுக்கு correctடான வேலைய செஞ்சிருக்காங்க பாகிஸ்தான். முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளேயே, நியூஸிலாந்து team openerகளான Tom Latham மற்றும் Tom Blundellல கொக்கி போட்டு தூக்குறாங்க.
அதுக்கு ஒரு முக்கிய காரணம், Shaheen Afridiயோட line and length தான். Middle and Off stump lineல Fuller lengthல pitch பண்ணி, ரெண்டு பக்கமும் move பன்றாங்க. அவுட் ஆன ரெண்டு பேரோட மனசுலயும் இருந்தது ரெண்டு ரெண்டு கேள்விகள். முன்னாடி போவணுமா இல்ல பின்னாடி வரணுமா ?, இன்னொன்னு அடிக்கணுமா இல்ல விடணுமா ? அந்த கொழப்பத்துலயே slipல catch கொடுத்துட்டு போனாங்க.
Shaheen Shah Afridiக்கு துணையா, Mohammad Abbas அற்புதமா bowl பண்ணாரு. Consistent line and length. ஒரு இடத்துலயும் தவற விடல. ஏன் Pakistan team, West Indies teamம விட rankingல மேல இருக்காங்கன்னு இது ஒரு சிறந்த example. Short balls மட்டுமே போட்டுட்டு இருக்காம, surfaceல இருக்குற movementட teamமூக்கு சாதகமா பயன்படுத்துற அந்த ஒரு விஷயம் தான் ரெண்டு teamsகும் நடுவுல இருக்குற difference.
ஆனா, இவங்கள தாண்டி, வேற யாரும் perfectடா bowl பண்ணல. Yasir Shahவுக்கு wicketல ஒண்ணுமே support பண்ணல. அதுனால, இன்னிக்கி நாள்லயே ரொம்ப expensiveவா போனாரு. சரி, இவங்க எடுத்த wickets தாண்டி நியூஸிலாந்து திரும்பி counter attack பண்ணாங்களா ? ஆமா, பண்ணாங்க. மறுபடியும் Kane Williamson தான் அதை பண்ணுறாரு. கூடவே, Ross Taylor.
என்னதான் நாம பாகிஸ்தானோட bowlingக பாராட்டுனாலும், அவங்களோட fielding இன்னமும் மோசமா தான் இருக்கு. Kane Williamsonனுக்கு மட்டுமே 2-3 chances விட்டாங்க. புடிச்சிருந்தா, இன்னிக்கி மொத்தமா சுருட்டியிருக்கலாம். ஆனா, தவற விட்டது, தலைக்கு மேல ஏறி dance ஆட ஆரம்பிச்சுது.
முதல்ல Ross Taylor கிட்ட வருவோம். என்னதான் Kane Williamson முனிவரை மாதிரி அமைதியா move பண்ணாலும், நியூஸிலாந்துக்கு அந்த ஒரு momentum கெடச்சது Ross Taylor நாள தான். அடிக்கடி chance எடுத்தாரு. Off stump ஒட்டி வர்ற ஒவ்வொரு பந்தையும் Square Cut ஆடுனாரு. Yasir Shahவை settle ஆகவே விடல. எப்போ லாம் அவரு வந்து bowl பண்ணாலும், அப்போ எல்லாம் அந்த ஒரு slog sweep அவருகிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. அசத்தலான ஆட்டம்.
அதுக்கு அடுத்து Kane Williamson. மனுஷன், சும்மாவே கதகளி ஆட்டம் ஆடுவாரு. இதுல catches வேற drop பண்ணா சும்மாவா விடுவாரு. அவருக்கே உரித்தான backfoot punch through the covers, அப்புறம் straight drives இதெல்லாம் எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்கவே சலிக்காது. இன்னிக்கும் நெறய முறை அதை பார்க்க முடிஞ்சுது. தன்னோட கடமைய கனக்கச்சிதமா செஞ்சு முடிச்சாரு. இன்னிக்கி நாள் முடியும்போது, 94* ல இருந்தாரு.
Comments
Post a Comment