பிரியாணி VS பீர்

இன்று சரியாக 11 வருடங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள், ஜொஹானஸ்பர்க் மைதானத்தில், இறுதிப்போட்டியில் மோதியது. ஆடம் கில்சிறிஸ்ட்டின் தலைமையில் மிகவும் வலுவான அணியாக அவ்வாண்டில் திகழ்ந்தது. இப்பக்கம் கும்ப்ளே'வின் புதிரான வழிநடத்துதல். இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சமமே.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, மெதுவான பிட்சில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே கில்சிரிஸ்டின் விக்கெட்டை மிகவும் ராஜா தந்திரமாக வீழ்த்தினார் அணில் கும்ப்ளே. பின்னர் நான்காவது ஓவரில், சுமனின் விக்கெட்டையும் வீழ்த்தியது பெங்களூரு அணி. அதன், காரணமாக டெக்கான் அணி பவர்பிளே ஓவர்களில் 31/2 என்று மிக குறைந்த ஸ்கோரினை மட்டுமே அடிக்க முடிந்தது. கிப்ஸ் ஒரு புறம், மிகவும் பொறுமையாக, ஆட்டத்தின் போக்கினை புரிந்துக்கொண்டு விளையாட மறுபுறம் சைமண்ட்ஸ் சில பௌண்டரிகளை குறி வைத்து தாக்கினார். சரி, இங்கிருந்தாவது ஆட்டம் வேறுபட்டு போகும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மீண்டும் கும்ப்ளே சைமண்ட்ஸின் விக்கெட்டை. ஆனால், இம்முறை மிகவும் தவறாக, லெக் திசையில் ஷார்ட் பந்தாக வீசப்பட்டதில், புல் ஷாட் அடிக்க முயன்று தனது கைகளில் பந்து பட்டு, லெக் ஸ்டம்பினை அடித்தது. அவ்வளவு தான், ஆட்டத்தின் வேகம் குறைந்தே காணப்பட்டது. கிப்ஸ், மிகவும் பொறுமையாக, அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் ஒரு முறை பௌண்டரியினை அடிக்க, மறுபுறம் விக்கெட்டுகள் இழந்தது டெக்கான் அணி. குறிப்பாக கும்ப்ளேவின் சுழற்பந்து வீச்சு, அன்று நன்கு வேலை செய்தது. 4 விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களை வழங்கிய நிலையில் கைப்பற்றினார். அதன் காரணமாக 143 / 6 என குறைந்த ஸ்கோரினை மட்டுமே அடிக்க முடிந்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 53 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணியின் பலம் வாய்ந்த பேட்டிங்கிற்கு எதிராக, சிறிது அனுபவம் மின்றி காணப்படும் டெக்கான் அணியின் பந்துவீச்சு என்ன செய்ய காத்துக்கொண்டிருக்கின்றது என நாம் பார்ப்போம்.

உள்ளே இறங்கியது ஜாகியூஸ் காலிஸ் மற்றும் மனிஷ் பாண்டே. மனிஷ் பாண்டே அவ்வாண்டில் சிறப்பாக காணப்பட்டார். தனது பேட்டிங், உச்சத்தில் இருந்தது. ஆர் பி சிங், முதல் விக்கெட்டை நாங்காவது ஓவரில் கைப்பற்றினார். பலி ஆனது காலிஸ். அதன் காரணமாக, பவர்பிளே ஓவர்களில் முடிவில் 36/1 என ஸ்கோர் இருந்தது. அன்று, வழக்கத்திற்கு மாறாக கீழ் தளத்தில் இறங்கும் ரியோல்ஃப் வண்டெர் மெர்வ் , ஒரு விக்கெட் விழுந்தவுடன் இறங்கினார். ஆனால், அது பயனடைந்து. டெக்கான் அணியிற்காக சைமண்ட்ஸ் விளையாட ஆட்டத்தை இங்கு வண்டெர் மெர்வ் விளையாடினார். ஆனால், அவரை போல், பெரிய ஸ்கோராக மாற்றாமல் ஓஜா வீசிய பந்தில், சிக்ஸர் அடிக்க முயன்று, அப்பந்தினை முழுவதுமாக விட்டார். பின், ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார். அங்கிருந்து, சிறிது நேரத்தில் ட்ராவிடும் ஆட்டமிழந்து சென்றார். ஆனால் ரோஸ் டெய்லர் மற்றும் விராட் கோலி சிறிது ரன்களை வேகமாக சேர்க்க, 14 ஓவர்களில் முடிவில் 99/4 என ஸ்கோர் இருந்தது. டெக்கான் அணியிற்கு இப்போது விக்கெட் தேவை. இல்லையெனில், கோப்பை கொவிந்தா கோவிந்தா தான் !!. அத்தருணத்தில் தேவையான இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார் சைமண்ட்ஸ். ஆட்டத்தின் முக்கிய திருப்பம் என்றே கூறலாம். ஆனால், அப்போது வண்டெர் மெர்வினை மேல் தளத்தில் இறக்கியதன் காரணம், இறுதி ஓவர் போட்டியாக மாறும் என்றே எதிர்பார்த்து பின்னால் ஓர் பேட்ஸ்மேன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று கணக்கிட்டார். அதனால், ராபின் உத்தப்பா 6 விக்கெட்டுகள் விழுந்த பின் இறங்கினார். மீதமிருந்தது 5 ஓவர்களில் 44 ரன்கள், 4 விக்கெட்டுகளில் எடுக்க வேண்டும். அடுத்த இரு ஓவர்களில், மேலும் தலைவலியினை ஏற்படுத்தும் வாறு மார்க் பௌஞ்சேர் மட்டுறும் பிரவீன் குமாரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். அது மட்டுமில்லாமல் 18வது ஓவரில், வெறும் 4 ரன்களை ஆர். பி. சிங் வழங்க, 12 பந்துகளில் 27 ரன்கள் தேவை, என்று கணக்கு இருந்தது. பெங்களூரு அணியின் ஒரே நம்பிக்கை - ராபின் உத்தப்பா, அவர் மட்டும் இல்லையெனில், டெக்கான் அணியே பலம் வாய்ந்து திகழ்ந்திருக்கும். அடுத்த ஓவரில் ஓர் பௌண்டரி மற்றும் ஓர் சிக்ஸர் வந்தது. ஆட்டம் சூடேறியது. முதல் 5 பந்துகளில் 12 ரன்களை அடித்தார்கள் பெங்களூரு அணி. ஆனால், எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையினை போன்று, கடைசி பந்தில், படபடப்பினை கூட்டும் வாறு, வினய் குமாரின் விக்கெட்டை வீழ்த்தினார் ரியான் ஹாரிஸ்.

மீதமுள்ளது 1 விக்கெட், தேவை 14 ரன்கள். கடைசி ஓவரை வீசியது, ஆர். பி. சிங். உள்ளிருந்து பெங்களூர் அணியின் நல்ல வேலையிற்கு ராபின் உத்தப்பா மற்றும் அணியின் தலைவர் அணில் கும்ப்ளே. தேவை 15 ரன்கள். முதல் பந்தில் கும்ப்ளே ஒரு ரன்னை எடுத்து கொடுத்தார். 14 ரன்கள் 5 பந்துகளில் தேவையாய் இருந்தது. இரண்டாவது பந்தினை சிக்ஸர் அடிக்க முயன்று, ராபின் உத்தப்பா அதை முழுதாக தவறினார். டாட் பந்து. மூன்றாவது பந்தும், சிக்ஸர் அடிக்க முயன்று, டாட் பந்தாக முடிந்தது. தேவை, 14 ரன்கள் 3 பந்துகளில். இப்போது டெக்கான் அணி, முன்னிலையில் இருந்தது. நான்காவது பந்தினை வீசினார் ஆர்.பி.சிங். ஸ்டம்பினை விட்டு வெளியே வீசப்பட்ட புள் டாஸ் பந்து. தரையோரமாய் பௌட்னரி அடிக்க முயன்று 2 ரன்களை எடுத்தார். 12 ரன்கள் 2 பந்துகளில் தேவை. 2 சிக்ஸர்கள், அடுத்தடுத்து அடித்தால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும்.ஐந்தாவது பந்து , கால்களை நோக்கி வீசப்பட்டது. லெக் பை ரங்களில் 4 ரன்கள் சென்றது. கடைசி பந்தில் 8 ரன்கள் தேவை. ஆர்.பி.சிங்கை பொறுத்த வரை நோ பால், அல்லது வைட் பந்துகளை வீசாமல், சரியாக வீசினால் மட்டுமே போதும். சிக்ஸர் அடித்தாலும் வெற்றி உறுதி. மறுபுறம், மிகவும் நம்பிக்கையிழந்து நொந்து இருந்தது பெங்களூரு அணி. கடைசி பந்து வீசப்பட்டது, 1 ரன் மட்டுமே எடுத்தார் ராபின் உத்தப்பா. ஆட்டத்தையும் மற்றும் கோப்பையையும் வென்றது டெக்கான் சார்ஜர்ஸ் அணி. கில்கிறிஸ்ட் மிகவும் சிறப்பாக தனது அணியினை வழிநடத்தினார். இரு அணிகளை ஒப்பிட்டால் பெங்களூரு அணியே வலுவாக இருந்தது. ஆனால், காகிதத்தில் பார்ப்பதை விட, களத்தில் பார்க்கும் போது மட்டுமே உண்மையான ஆட்டம் வெளிப்படும்.

ஆட்ட நாயகன் விருதினை வென்றது அணில் கும்ப்ளே. தொடர் நாயகன் விருதினை வென்றது ஆடம் கில்கிறிஸ்ட். மிகவும் சிறப்பான ஐபிஎல் இறுதி போட்டிகளில், இப்போட்டியின் பெயர் நிச்சயமாக இடம் பெரும்.

"முதல் சம்பவம், தரமான சம்பவம்"    

       

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt