பொறுமையின் சிகரம் " கேன் வில்லியம்சன் " - 2019 உலகக்கோப்பை நினைவுகள்
ஒரு ஆண்டிற்கு முன், இன்றைய தேதியில், தென் ஆஃப்ரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணத்தினால், பந்துகள் நினைத்தவாறு மட்டையிற்கு வரவில்லை. சிறிது பொறுமையாக தான் வந்தது. அவசரமின்றி விளையாடும் வீரர் பிழைத்துக்கொள்வார். இல்லையெனில், கடினம். 49 ஓவர்களுக்கு ஆட்டம் குறைக்கப்பட்டது.
தென் ஆஃப்ரிக்கா அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை, ஆரம்பத்தில் மழை இல்லாததால், நன்கு விளையாடினார்கள். ஆனால், மழை இடைப்பட்டதால், சிறிது பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. ஆம்லா, மிககும் அருமையாக அரை சதம் குவித்தார். அவரை தாண்டிலும், இடையினில் விக்கெட்டுகள் ஆங்காங்கே கைப்பற்றியதால், தென் ஆஃப்ரிக்கா அணியின் ரன் ரேட் பாதிக்கப்பட்டது. டு ப்ளஸிஸ் மற்றும் மார்க்ரம், தொடக்கம் நன்கு அமைந்திருந்தாலும் பெரிய ரன்களை அடிக்க இயலாமல், தங்களின் விக்கெட்டுகளை விலைகொடுத்தனர். நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், விக்கெட்டுகள் அதிகம் எடுக்காவிட்டாலும், ரன்களை வழங்காமல் தென் ஆஃப்ரிக்கா அணியை திணறடித்துக்கொண்டே இருந்தனர். இங்கு கேன் வில்லியம்சனின் வழிநடத்துதலுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். நேர்த்தியான கட்டமைப்பு.
ஆனால், வண்டெர் டஸ்ஸன் மற்றும் டேவிட் மில்லர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். சிறிது நேரம் கடைப்பிடித்து, போராடி ரன்களை திருடினார்கள். அவ்வாறு, கடினமாக இருந்தது. குறிப்பாக வண்டெர் டஸ்ஸன், சிறிது நேரம் எடுத்துக்கொண்ட பின், தனது முழு வீச்சில் விளையாடினார். இறுதிக்கட்டங்களில் மிகவும் அழகாக ஆட்டத்தை முடித்தார். 64 பந்துகளில் 67 ரன்கள் அடித்து, ஆட்டமிழக்காமல் நின்றார். 241/6 என 49 ஓவர்களில் முடிவில் ஸ்கோர் இருந்தது.
மற்றோர் முக்கிய செய்தி, தென் ஆஃப்ரிக்கா அணி, இப்போட்டியினை வென்றால் தான், அரை இறுதி போட்டியை பற்றி சிறிதாவது நினைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில், மறந்துவிட வேண்டியது தான்.
நியூஸிலாந்து அணி களத்தில் இறங்கியது. அவ்வணியின் ஒப்பனர்கள், இதுவரை இத்தொடரில் சரியாக விளையாடவில்லை. இன்று, அவ்விருவரும் இனைந்து ரன்களை குவிக்க வேண்டும். ஆனால், தென் ஆஃப்ரிக்கா'வின் வேகப்பந்து வீச்சாளர்கள், ஜொலித்தனர். டு ப்ளஸிஸ், ஸ்லிப் திசையில் இரண்டிலிருந்து மூன்று வீரர்களை நிற்க வைத்தார். பல போட்டிகளில் சொதப்பிய வேகப்பந்து வீச்சாளர்கள், இன்று சீறியது. முன்றோ தொடக்கத்தில் ஆட்டமிழக்க, உள்ளே வந்தார் கேன் வில்லியம்சன். ஸ்லிப் திசையில் அவரின் கேட்ச் ஒன்றை தவறவிட்டால், அன்று அவர் களமிறங்கிய ஒரே குறிக்கோள், நிதானமாக விளையாடி, இறுதி வரை போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்று தான். மிகவும் பொறுமையாக விளையாடினார். தரையோரமாக ரன்களை குவிக்க, ஒரு பந்தும் தவறுதலாக காற்றில் பறக்க வில்லை. ஆனால், மறுபுறமோ சொல்லுதற்கு எளிதாக அமையவில்லை. விக்கெட்டுகளின் சரிவு, போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தது. 137/5 என ஸ்கோர் இருக்க, ஒரு பக்கம் கேன் வில்லியம்சன் நிற்க மறுபக்கம் கிராண்ட்ஹோம் உள்ளே இறங்கினார். இங்கிருந்து, போட்டி நியூஸிலாந்து அணியின் பக்கம் திரும்பியது. கிராண்ட்ஹோம் சிறிது அதிரடியாக விளையாட, கணக்கு கழிய தொடங்கியது. 47 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார். இறுதி ஓவர் வரை போட்டி சென்றது. கேன் வில்லியம்சன் கடைசி ஓவரில், சிக்ஸர் மற்றும் பௌண்டரி அடித்து, 3 பந்துகளில் மீதம் வைத்து ஜெயித்துக்கொடுத்தார் கேன் வில்லியம்சன். 138 பந்துகள் விளையாடி 106 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்றார்.
தென் ஆஃப்ரிக்கா'வின் கனவு துண்டிக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை பெற்றது கேன் வில்லியம்சனிடம் வழங்கப்பட்டது தனது சாதுர்யமான ஆட்டத்தின் காரணத்தினால்.
Comments
Post a Comment