அசச்சுறுத்திய ஆஃப்கானிஸ்தான், போராடிய ப்ரத்வெய்ட்

ஒரு ஆண்டிற்கு முன், 2019ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், இரு போட்டிகள் நடைபெற்றது. இரண்டு போட்டிகளும், இறுதி வரை சென்றது. பார்வையாளர்களுக்கு ஓர் பரிசாக அமைந்தது. இவ்விரு போட்டிகளிலும், வலுவுள்ள அணியை, வலுவில்லா அணி வெற்றி பெரும் பொருட்டு அமைந்தது. அவ்வாறு உள்ள இரு போட்டிகளை பற்றி இப்பதிவில் காண்போம்.

இந்தியா - ஆஃப்கானிஸ்தான், சௌதாம்ப்டன்

சௌதாம்ப்டன் மைதானத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான்  அணிகள் மோதிக்கொண்டது. ஒரு புறம், தோல்வியின்றி, நிமிர்ந்த நடையுடன் வருகையளிக்கும் இந்திய அணி. மறுபுறம், வெற்றியின்றி, வெற்றியை கைப்பற்ற வேண்டும், என்கிற வெறியுடன் களமிறங்கும் ஆஃப்கானிஸ்தான் அணி. ஆஃப்கானிஸ்தான் அணி, உலகத்தரத்தில் சிறிது தேய்வடைந்தாலும், இந்திய அணியிற்கு எதிரே, மிகவும் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவர்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்றைய நாளில், பிட்சில் சுழற்சி இருக்க, ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு, இன்பம் அளிக்கும் செய்தியாக இருந்தது. தொடக்கத்தில், ரோஹித் ஷர்மா, தனது விக்கெட்டை இழந்தார். ஆனால், ரோஹித் செய்யும் வேலையை, கோலி செய்தார். ரோஹித் தொடக்கத்தில் வழங்கும் அதிரடி ஆட்டம், கோலி நன்கு நிறைவு செய்தார். மறுபுறம், ராகுல் நிதானத்துடன் விளையாட, ரன்கள் அதிகரித்தது. ஆனால், அது சிறிது காலம் மட்டுமே தாக்குப்பிடித்தது. ராகுல், தனது விக்கெட்டை இழக்க, விஜய் ஷங்கர் களமிறங்கினார். இருவரும், 58 ரன்கள் இணையாக சேர்க்க, வழக்கம் போன்று, இந்திய அணி இமாலய இலக்கை, ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு அளிப்பார்கள் என அனைவரும் நினைக்க, விஜய் ஷங்கர் 29 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அவர் விக்கெட் வீழ்த்தப்பட்டஓவரிலிருந்து 4வது ஓவரில் கோலியும் தனது விக்கெட்டை 67 ரன்களுக்கு இழந்தார். உள்ளே இருந்தது, டோனி மற்றும் கேதார் ஜாதவ். இதனை புரிந்து கொண்டு, சுழற்பந்து வீச்சாளர்களிடம் பந்தளித்தார் குல்படின் நைப். கடந்த சில வருடங்களாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரே தடுமாறிக்கொண்டிருந்த தோனி, அன்றும் தடுமாறினார். அவரும், இறுதியில் வேகப்பந்து வீச்சாளர்கள், பந்துவீச்சிற்கு வருவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. 52 பந்துகளை 28 ரன்களில், நேரம் கடந்து விட்டது, இதற்கு மேல் பௌண்டரிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ரஷீத் கானின் பந்திற்கு இறங்கி வர, ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார் தோனி. ஆனால், கேதார் ஜாதவ்'வின் அரை சதம், 224 ரன்களுக்கு அழைத்து சென்றது. மிகவும் சிறிய ஸ்கோர். ஆனால், வெற்றிபெற வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்தில், தடுமாற்றம் கொடுத்து, இரு ஒப்பனர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. ஆனால் ரஹ்மத் ஷா, மற்றும் ஹஷ்மத்துள்ளா இனைந்து நன்கு விளையாட, 27 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது ஆஃப்கானிஸ்தான் அணி. 29வது ஓவரில் பும்ரா, இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியது. அங்கிருந்து, சிறிது நேரத்தில், ஆஸ்கார் ஆஃப்கானின் விக்கெட்டும் கைப்பற்றப்பட்டது. இந்திய அணி, ஆஃப்கானிஸ்தான் அணியை, 170 ரன்களுள் வீழ்த்துவர் என அனைவரும் எதிர்பார்க்க, முஹம்மத் நபி அச்சுறுத்த தொடங்கினார். இந்திய அணி, முதல் 25 ஓவர்களில், அதிரடியாக விளையாடினால், ஆஃப்கானிஸ்தான் அணி, எதிர்மாறாக, கடைசி 25 ஓவர்களில் வேகத்தை கூட்டினர். மறுபுறம், முக்கிய தருணங்களில் நஜிபுல்லா சாட்ரான் மற்றும் ரசித்து கானின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது, தோனியை ரஷீத் கானின் பந்தில் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்ட அதே முறையில், ரஷீத் கான் தோனியின் கைகளால் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டார். ஆனால், நபி'யின் ஆட்டம் அருமையாக இருந்தது. குறிப்பாக, பும்ரா'வின் பந்தை, லெக் திசையில், புள் ஷாட்டின் வாயிலாக சிக்ஸர் அடித்தார். ஆனால், 49 ஓவரில், பும்ரா வீசிய யார்க்கர் பந்துகள், ரன்களை கட்டுப்படுத்தியது. அதன் காரணமாக, 16 ரன்கள் கடைசி ஓவரில் தேவை என்று கணக்கு வந்தது. மீதம் இருந்தது, 3 விக்கெட்டுகள். நபி 48 ரன்கள் அடித்து நின்றிருந்தார். ஷமி பந்துவீச, முதற்பந்து 4 ரன்களுக்கு சென்றது. நபி, தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அனைவரின் முகங்களிலும் பயம். அடுத்த பந்து, சிக்ஸர் அடிக்க முயன்று, பீல்டரின் கைகளில் கேட்ச் கொடுத்தார். 12 ரன்கள் தேவை 4 பந்துகளில். அடுத்த பந்தை ஷமி வீச, நேராக ஸ்டம்ப்பை அடித்தது. மீதம் இருந்தது 1 விக்கெட். ஹாட்ட்ரிக் கைப்பற்ற ஓர் அறிய வாய்ப்பு. குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் ஹாட்ட்ரிக். அடுத்த பந்தை, ஷமி வீச, அதுவும் ஸ்டம்ப்பை அடித்தது. ஹாட்ட்ரிக் கைப்பற்றினர் ஷமி. அந்த ஹாட்ட்ரிக், இந்திய அணியை காப்பாற்றியது. இப்போட்டியிலிருந்த்து தெரிந்திருக்கும், உலகக்கோப்பை போட்டிகளில், ஒவ்வொரு எதிரணியும், நல்ல அணிகள். 

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - பும்ரா . தனது (10-1-39-2)

மேற்கு இந்திய தீவுகள் - நியூஸிலாந்து 

மஞ்செஸ்டரில், இதே நாள் அன்று, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே, உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. மேற்கு இந்திய தீவுகள், தங்களின் பந்துவீச்சில் உள்ள ஓட்டையின் காரணமாக பல போட்டிகளை கைகளிலிருந்து நழுவியது. மறுபுறம், நியூஸிலாந்து அணியின் ஒப்பனர்கள், நினைத்தவாறு சிறப்பான ஆட்டம் இவ்வுலககோப்பையில் வெளிப்படுத்தவில்லை. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எவ்வித மாற்றமும் இன்றி, இரு ஒப்பனர்களும் தொடக்கத்திலேயே வீழ்த்தப்பட்டார்கள். இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றியது, ஷெல்டன் காட்ரல். இன்னிங்சின் முதற் பந்தில், வீசப்பட்ட இன்ஸ்விங்கிங் யார்க்கர், கப்டில் அவர்களை, வலை சிக்கவைத்து எல்.பீ.டபுள்யூ எடுத்தது. பின்னர், மூன்றோ'வும் யார்க்கர் பந்தில், பவுல்ட் எடுக்கப்பட்டார். சிறப்பான பந்துவீச்சு, அவரிடமிருந்து மட்டுமே. களமிறங்கினர், கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர். இருவரும், தங்களின் கிரிக்கெட் வாழ்வில், பல முறை இவ்வாறு உள்ள சூழல்களை கையாண்டுள்ளனர். ஆதலால், மிகவும் எளிதாக, சிறிது நேரம் கடைபிடித்து, பின்னர் பந்துகளை பௌண்டரியை நோக்கி அனுப்பினார்கள். மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இருவருமே அரை சதம் அடித்தார்கள். இருவரும் இனைந்து, 160 ரன்கள் கூற்றாக சேர்த்தனர். ஆனால், ரோஸ் டெய்லர், தனது சதத்தை தவறாக விளையாடிய ஓர் ஷாட்டினால் தவற விட்டார். 69 ரங்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். மறுபுறம், கேன் வில்லியம்சன், தனது ஆட்டத்தில் சிறிதும் பிழையின்றி விளையாட, ரன்களின் வேகம் கூடியது. சதம் பதித்தார். இரண்டாவது உலகக்கோப்பை சதம், குறிப்பிடத்தக்க செய்தி, தொடர்ச்சியாய் இரண்டாவது சதம். சதத்தை பதித்த பின், அக்ராஸ் ஷாட்டுகள் அடிக்க தொடங்கினார். பௌண்டரிகள் அடிக்க முடிந்தது. ஆனால், தனது 150 ரன்களை அடிக்க இயலாது, 148 ரன்களுக்கு மீண்டும் காட்ரல் வீசிய பந்தில், பலியானார். அன்று, அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, கூடுதலாக ஓர் ரன் அவுட் 'டும் அடித்தார். ஆனால், மறுபுரத்தில் உள்ள பந்துவீச்சாளர்கள், நினைத்தவாறு சிறப்பளிக்காததால், 291/8 என 50 ஓவர்களில் முடிவில், நியூஸிலாந்து அணி அடித்தது.

பேட்டிங் மேற்கொள்ள உள்ளே இறங்கியது மேற்கு இந்திய தீவுகள் அணி. கிறிஸ் கெயில் மீது நம்பிக்கை பெரிதாக வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன், அவர் விளையாடிய ஆட்டங்கள், விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், அன்று அவரு நம்பிக்கையின் பக்கம் சாய்ந்தார். தொடக்கத்தில் ஷாய் ஹோப், தனது விக்கெட்டை இழந்திருந்தாலும், கிறிஸ் கையில் மற்றும் ஹெட்மேயர் இனைந்து நன்கு ரன்களை சேர்த்தனர். இடையில், பூரான் அவர்கள் காயம் காரணமாக, களத்தை விட்டு வெளியேற, ஹெட்மையர் அவருக்கு மாற்றாக களமிறங்கினார். கிறிஸ் கெயில் மற்றும் ஹெட்மையர் இடையே இருந்த புரிதல், மிகவும் அருமையாக இருந்தது. அதிரடியான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினார்கள். மேட் ஹென்றி, கிறிஸ் கையில் உயரத்திற்கு ஏற்ப அரை குழி பந்துகள் வேகத்துடன் வீச, அதனை கைப்பற்றும் நோக்கில், ஃபீல்டர்களை நிறுத்தாமல் இருந்ததன் காரணமாக, பௌண்டரிக்கு விரைவாக சென்றது. இருவருமே அரை சதம் அடித்தார்கள். 122 ரன்கள் கூற்றாக சேர்த்தவுடன், ஓர் பெரிய சரிவு அன்று ஏற்பட்டது. 142/2 என இருந்த நிலையிலிருந்து 164/7 என நிலை மாறியது. அதற்கு மிக முக்கிய காரணம், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஃபெர்குசன். இங்கிருந்து நிச்சயம், 200 ரன்களுக்குள் அணைத்து விக்கெட்டுகளை இழந்து விடும் என அனைவரும் நினைத்தார்கள். ஆனால், ப்ராத்வெய்ட் எனும் புலி, பதுங்கி நின்று பாய்ந்தது. வெறிகொண்டு ஆடினார். "என்னை தாண்டி என்னோட டீம தொடர பாக்கலாம்" என வீரம் திரைப்பட பாணியில் உள்ள வசனம் இவருக்கு இணைய பொருத்தப்பட்டது. அவ்வாறு, ஓர் துணிச்சலான ஆட்டம். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் ஓவர் அச்சுறுத்தினார். பல சிக்ஸர்கள், இவருடைய முட்டையிலிருந்து காணப்பட்டது. சதத்தை எட்டினார். 1 விக்கெட் மீதம் உள்ள நிலையில், 8 பந்துகளில் 6 ரன்கள் தேவையாய் இருந்தது. நீஷம், அறைக்குழி பந்து ஒன்றை வீச, அதனை லாங் ஆன் திசையை நோக்கி, சிக்ஸர் அடிக்க முயன்றார். காற்றில் சென்றதை பார்ப்பினும், சிக்ஸர் போன்று தெரிய, லாங் ஆன் திசையில் நிண்றிருக்கொண்டிருந்த போல்'டின் கைகளில் அமர்ந்தது. நியூஸிலாந்து அணியிற்கு உயிர் சென்று உயிர் வந்தது போன்று இருந்தது. மறுபுறம், மேற்கு இந்திய தீவுகள் மிகவும் சோக உலகிற்கு சென்றது. உழைப்பிற்கு பலன் ஈட்டாத அந்நிலை, ப்ராத்வெய்ட்''டின் கண்களில் தெரிந்தது. 5 ரன்களில் வெற்றிபெற்றது நியூஸிலாந்து அணி.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது கேன் வில்லியம்சன்.

                 

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt