NZ vs WI - இரண்டாவது டெஸ்ட், முதல் நாள் Review
முதல் டெஸ்ட் match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson ஆடுன கதகளி ஆட்டம், மொத்த West Indies Teamமயும் ஊதி தள்ளிருச்சு. கூடவே, Paceகு support பண்ணுற wicketல நின்னு சமாளிக்க கூட முடில. அந்த டெஸ்ட்டுக்கு அப்புறம், இன்னிக்கி ரெண்டாவது டெஸ்ட் match ஆரம்பிக்குது. இந்த test match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson அவர்கள் அப்பா ஆகப்போகுற காரணத்துனால, வெளியேருறாரு. அவருக்கு பதிலா Tom Latham தான் Captainனா பொறுப்பு ஏத்துக்குறாரு.
போன matchல இருந்த conditions'அயே சமாளிக்க முடியாம வெளில போன West Indies teamனால இந்த Windy Wellington wicketட சமாளிக்க முடியுமா ? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியணும்னா நாம எல்லாரும் 5 நாள் காத்திருக்க வேண்டும். முதல் நாள பொறுத்த வரைக்கும், West Indies team toss'அ ஜெயிச்சு முதல்ல fielding choose பன்றாங்க. Wellingtonல முதல் ரெண்டு நாள், நல்ல காத்து இருக்கும். Bowlerகளுக்கு ஒரு கரி விருந்து மாதிரி.
இந்த trackல உள்ள எறங்குற New Zealand batsmanகளுக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுது. Shannon Gabriel பந்தை நல்லா batsmanகளுக்கு உள்ள கொண்டு வந்துட்டு இருந்தாரு. அதுல correctடா fourth stump lineல pitch பண்ணி, off stumpகு கொண்டு வந்து, Tom Blundelல dismiss பண்ணுறாரு. அதுக்கு அடுத்து ஓரளவுக்கு decentடா விளையாடிட்டு இருந்த Tom Lathamகு over the wicketல இருந்து bowl பண்ண வேலைக்காவதுன்னு புரிஞ்சிகிட்டு, around the wicketல இருந்து approach பன்றாரு Holder. போன test matchல எப்படி aroundல இருந்து உள்ள வர்ற deliveryகு அவுட் ஆகிட்டு வெளில போனாரோ, அதே மாதிரி இந்த வாட்டியும் உள்ள வர்ற deliveryய edge பண்ணி out ஆகுறாரு. Ross Taylorருக்கும் இதே கதி தான். முதல் sessionல மூணு wickets எடுத்து West Indies அசத்துனாங்க.
அப்போ, Home team'ஆன New Zealand'ஓட நெலமை அவ்ளோ தானா ? இல்ல, ரெண்டாவது session வரும்போது, நெலமை திரும்புச்சு. Youngsters'ஆன Will Young மற்றும் Henry Nicholls சேர்ந்து முடிவெடுத்து ஆடுறாங்க. எப்படியாவது, இவங்கள மீறி நாம runs score பண்ணனும். Footwork error எதுவும் இல்லாம ஆடணும்னுகிறதுல ரொம்பவே தீவிரமா இருந்தாங்க. ரெண்டு பெரும் நல்லா தள்ளி தள்ளி partnership போட்டாங்க.
இடையில, ஏகப்பட்ட chances வந்துச்சு. முக்கியமா Henry Nicholls'ஓட 3 chances தவற விடுறாங்க. அது காரணமா, அவரும் கிடைச்ச வாய்ப்பை நங்கூரணம் மாதிரி நச்சுனு புடிச்சிகிட்டாரு. 1 வருஷத்துக்கு அப்புறம் சதம் அடிக்குறாரு. அவருக்கு இணையா, Will Young, BJ Watling, Daryl Mitchell ஆகிய மூணு பெரும் துணை நிக்குறாங்க.
இருந்தும், Shannon Gabriel மற்றும் Chemar Holder, நெறய எடத்துல தூண்டிகிட்டே இருந்தாங்க. ஆனா, மத்தவங்க கிட்ட இருந்து நெனச்ச அளவுக்கு support இல்லாத காரணத்துனால, இன்னிக்கி நாள் முடியும் போது, New Zealand team, 294/6னு ரொம்பவே strongகான நெலமைல இருக்காங்க.
இங்க இருந்து New Zealand teamகு ஒரு 350 கிட்ட score வந்தாலே ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. ஆனா, West Indies teamமுக்கு அப்படி கெடயாது. 200க்கும் மேல, அதுவும் பச்சை பசேலுன்னு இருக்குற pitchல, கூடவே பலத்த காத்து வீசும்போது, batting பண்ணனும்னு நெனச்சாலே ரொம்ப பயமா இருக்கும். ஆனா, சமாளிச்சு தான் ஆகணும். வேற வழியே கெடயாது.
Comments
Post a Comment