NZ vs PAK - இரண்டாவது Test, மூன்றாம் நாள் Review
நேத்து நாள்ல முடிக்கும்போது, நியூஸிலாந்து 286 runs அடிச்சு அதுல வெறும் 3 wickets மட்டுமே இழந்து, நல்ல நிலைமையில இருந்தாங்க. அவங்கள பொறுத்த வரைக்கும், ஒரு பயங்கரமான lead எடுத்து பாகிஸ்தான்ன திரும்ப bat பண்ண வைக்கணும். கூடவே, இந்த test match'அ ஜெய்ச்சிட்டு, 2021 ICC World Test Championshipபோட finalsக்கு qualify ஆகணும்ன்னு ஒரு முடிவும் மனசுல இருந்துச்சு. காரணம், இதுக்கு அடுத்து அவங்களுக்கு test series கெடயாது. இவ்ளோ எதிர்பார்ப்போடு தொடங்குன இந்த மூணாவது நாள்ல, என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பார்க்கலாம்.
இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு எரிய நெருப்புல என்னைய ஊத்துனா கதையா தான் அமைஞ்சுது. Pitch'அ பொறுத்த வரைக்கும், நேத்து விட இன்னிக்கி grass கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு. ஆனா, மழை பேஞ்சுது. எந்த ஒரு fast bowlerருக்கும், மழை'ங்கிற ஒரு விஷயம்னா ரொம்ப புடிக்கும். அப்படி இருக்கும்போது, இங்க பாகிஸ்தானோட fast bowlersனால ஒண்ணுமே பண்ண முடியாம திண்டாடிட்டு இருந்தாங்க.
நேத்து போலவே இன்னிக்கும் நிறைய catches வந்துச்சு. Kane Williamsonனோடதே ரெண்டு catches, மடியில வந்து விழுந்துச்சு. ஆனா, அந்த ரெண்டையும் தவற விட்டதுக்கு அப்புறம், விக்கெட் வரலைன்னு புலம்பி ஒரு use'உம் இல்ல. அதுவும், ICC Test Rankingல No.1 positionல இருக்குற Kane Williamsonனோட wicketலாம் அவ்ளோ easyயா தவற விட கூடாது.
அதே நேரத்துல Kane Williamson, வேற ஒரு ரகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரு. நல்லா aggressiveவா தொடங்குன இவரு, இடையில wickets சரிஞ்சு விழும்போது, அடிச்சா வேலைக்காவதுன்னு புரிஞ்சிகிட்டு, திரும்பவும் தள்ள ஆரம்பிச்சுட்டாரு. அப்படி தள்ளி தள்ளியே 200 அடிக்குறாரு. Once 200 reach பண்ணதுக்கு அப்புறம், வண்டில top gear போட்டு பறக்குறாரு. அப்படி அடிச்சு ஆடும்போது தான், ஒரு தப்பான shot ஆடி அவுட் ஆகுறாரு.
ஒரு வேளை, 300 reach பண்ணனும்னு, personal recordsக்கு ஆசைப்பட்டு விளையாடியிருந்தா, அவரால அடிச்சிருக்க முடியும். ஆனா, பாகிஸ்தானோட battingக இன்னிக்கி வழக்கமா போட்டு பார்த்த மாதிரி, செஞ்சிருக்க முடியாது. இவரோட back foot placementsலாம், தரமா இருந்துச்சு.
West Indiesக்கு எதிர்க்க ஒரு 251. அதுக்கு அடுத்து, அவரோட முதல் குழந்தை பிறப்புக்கு போய்ட்டாரு. திரும்பி வந்து, பாகிஸ்தானுக்கு எதிர்க்க விளையாடுற முதல் test matchல 129, அதுக்கு அடுத்து அசத்தலான 238. இப்படி, NZ'ஓட summer season முழுக்க, இவரு தொட்டதெல்லாம் தங்கமா மாறியிருக்கு.
இவரு கூட சேர்ந்து, Left calf injury வெச்சுகிட்டு, ஒரு அருமையான 151 அடிச்சாரு Henry Nicholls. இந்த summer seasonல என்ன பண்ணபோறாரோன்னு பயத்துல கொண்டு வர்றாங்க. ஆனா, தன்னோட spotட permanent ஆகுற அளவுக்கு சம்பவங்கள்ல பண்ணிட்டு போயிட்டாரு. ஐவரும் இந்த summerல 2 centuries அடிச்சு, தனக்குன்னு ஒரு benchmark set பண்ணிட்டு போயிட்டாரு.
அதுக்கு அடுத்து Darryl Mitchellலோட ஆட்டம். Once, Kane Williamson 200 reach பண்ணதுக்கு அப்புறம், அவரை விட இவரு ரொம்ப தீயா ஆடிட்டு இருந்தாரு. பொதுவா, நாம t20 cricketல என்ன மாதிரியான ஒரு game பாப்போமோ, அதையே தான் இங்க ஆடிக்கொடுத்துட்டு போயிருக்காரு.
ஒரு சமயத்துல Kane Williamson சொன்னது, 1 ஓவர் தான் மிச்சம் இருக்கு அதுக்குள்ள நீ 18 runs அடிச்சு உன்னோட centuryய complete பண்ணனும்ன்னு. இவரும், பக்கத்துல போனாரு. அது காரணமா, இன்னும் கொஞ்சம் overs increase பண்ணாரு. கடைசியில, ஐவரும் அவ்ளோ அழகா hundred complete பண்ணாரு. போதும் டா, விட்டுடுங்கன்னு கதராத குறையா, பாக்கிஸ்தான் பறித்த நிலையில இருந்தாங்க. NZ - 659/6ன்னு ஒரு இமாலய scoreல declare பண்றாங்க. 362 runs lead.
மீதி 11 overs இருக்குற நிலைமையில பாகிஸ்தானுக்கு முதல்ல 362 runs'அ தாண்டனும். அதுக்கு அடுத்து, இவங்க ஒரு score அடிச்சா மட்டும் தான், ஜெயிக்குறத பத்தி நெனச்ச பார்க்க முடியும். அப்படி பட்ட சூழ்நிலையில, Shan Masood இன்னிக்கி காலி ஆகுறாரு. இந்த test series, அவருக்கு மறக்கவேண்டிய ஒரு series'அ அமைஞ்சிருக்கு. அதுக்கு அடுத்து Mohammad Abbas, night watchmanனா உள்ள வந்து, நெறைய balls face பண்ணுறாரு. இன்னிக்கி நாள்ல, 8/1ன்னு பாக்கிஸ்தான் முடிக்குறாங்க
Comments
Post a Comment