NZ vs PAK - இரண்டாவது Test, இரண்டாம் நாள் Review

நேத்து, பாக்கிஸ்தான் போராடி, 297 runs அடிச்சாங்க. இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், நியூஸிலாந்துக்கும் நியூஸிலாந்து ரசிகர்களுக்கும் ரொம்பவே புடிச்ச நாளுன்னு சொல்லலாம். காரணம், நியூஸிலாந்து விளையாடுன game அப்படி. சில விஷயம் regularரா நடந்தாலுமே, வேற வேற கோணத்துல ஒரே விஷயம் நடக்கும்போது ஒரு தடவ கூட சலிப்பு தட்டாது. அப்படி என்ன regularரான விஷயம், வித்தியாசமா நடந்துச்சு ? எல்லாத்தையும் இந்த Review Postல நாம பாக்கலாம். 

இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானோட கை ஆரம்பத்துலயே ஓங்கி இருந்துச்சு. Pitchல கொஞ்சம் early movement இருந்துச்சு. அதுல New Zealandடோட openers ஆன Latham மற்றும் Tom Blundell மாட்டுறாங்க. முதல் sessionல இருந்த கடைசி சில நிமிஷத்துல இந்த wicket வீழ்ச்சி நடந்ததுனால, Pakistan கொடிகட்டி பறந்தது.

ரெண்டாவது sessionனோட பாதி வரைக்குமே, அந்த early swing இருந்துச்சு. இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்து Ross Taylorக்கு முஹம்மத் அப்பாஸ் set பண்ணி dismiss பண்ணுறாரு. Over the Wicketல இருந்து, middle stump lineன நோக்கி உள்ள கொண்டு வந்துட்டு இருந்தாரு. மூணு slip fielders'உம் கழுகு மாதிரி காத்துட்டு இருந்தாங்க. திடீர்னு ஒரு ballல லேசா வெளில கொண்டு வந்தாரு. அந்த change of lineல மாட்டுனவரு தான் Ross Taylor.

Ross Taylorரோட dismissal அப்போ, பாக்கிஸ்தான் தான் lead எடுக்க போறாங்கன்னு ஒரு எண்ணம் மனசுக்குள்ள வர ஆரம்பிச்சுது. அதுக்கு ஏத்த மாதிரியே Henry Nicholsக்கும் Kane Williamsonனுக்கும் set பண்ணிட்டு இருந்தாங்க. Kane Williamsonனும் gullyல ஒரு catch அப்புறம் WK கிட்ட ஒரு catchன்னு ரெண்டு எடத்துல தப்பிச்சாரு. Nichollsக்கும் அதே நெலமை தான்.

இதுல பாக்கிஸ்தான் சில எடத்துல no-balls bowl பண்ணுறதையும் பார்க்க முடிஞ்சுது. எப்படியாவது இந்த நிலைமையில இருந்து தப்பிச்சாகணும்னு, wicketல நின்னு பொறுத்து பொறுத்து விளையாடுனாங்க. Luckily escape ஆகிட்டாங்க. பாக்கிஸ்தான் front line seamers வெச்சு முயற்சி பண்ணி பண்ணி ஒரு கட்டத்துல, part time options லாம் கொண்டு வர்ற ஆரம்பிச்சுட்டாங்க.

நேத்து battingல இருந்த அந்த ஒரு போராடுற குணம், இங்க bowlingல miss ஆச்சு. Part Time Bowlers வந்ததுக்கு அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா அடிச்சு ஆட ஆரம்பிச்சாங்க. என்னதான் பச்சைபசேல்னு pitch இருந்தாலும், Red ball நிச்சயமா ஒரு கட்டத்துக்கு அப்புறம் பழசாகிதான் ஆகணும். அதே மாதிரி இங்கயும் பழசாச்சு, New Zealand வெச்சு செய்ய ஆரம்பிச்சாங்க.

Kane Williamsonலாம் Naseem Shahவை புரட்டி எடுத்தாரு. Nicholls இன்னொரு பக்கம் ரொம்ப silentடா score பண்ணிட்டு இருந்தாரு. நல்லா ஆடிட்டு இருக்குற Kane Williamson, once againதன்னோட hundredட reach பண்ணுறாரு. 2020-21 NZ Summer Seasonல, Kane Williamson மட்டும் 4 innings விளையாடி, அதுல 2 hundreds'உம் ஒரு double hundred'உம் அடிச்சு பட்டைய கிளப்பியிருக்காரு.

வெறுத்துப்போன பாக்கிஸ்தான் bowlersக்கு, நல்லா ஆரம்பிச்ச இந்த ஒரு நாள், கடைசியில ஏமாற்றமா தான் முடிஞ்சுது. 286/3ன்னு ஒரு scoreல, 87 overs முடிஞ்ச நிலைமையில, Stumps announce பண்ணுறாங்க. நாளைக்கி நாள்ல, நியூஸிலாந்து lead எடுத்து, match'அ அவங்களோட கைக்குள்ள கொண்டு வர்றதுக்கு நெறையாவே வாய்ப்புகள் இருக்கு. 

அதே நேரத்துல, Pakistan team, அவங்களோட fieldingல focus பண்ணனும். Wickets எடுத்து match'அ திருப்புவாங்களா ? அப்படி திருப்புனா, ஆட்டம் இன்னும் வேற ஒரு ரகத்துக்கு போவும். நடக்குமா ? நாளைக்கி தான் தெரியும் !

     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?