NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள் Review

நேத்து, நியூஸிலாந்து team 294/6னு ரொம்ப strong'ஆன நிலைமையில வந்து நிக்குறாங்க. இங்க இருந்து 350க்கும் மேல அடிச்சாலே, ரொம்ப சந்தோச படுவாங்க. அதே நேரத்துல, பலமா அடிவாங்குன West Indies, மீண்டு வரணும்னு ஆசை படுவாங்க. இதுல யாரோட ஆசை நிறைவேறுச்சு, இந்த ரெண்டாவது நாள் யாருக்கு சாதகமா போச்சுன்னு இந்த Reviewல நாம பார்க்க போறோம்.

இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, Henry Nichols 117க்கு not outல இருந்தாரு. இன்னொரு பக்கம், Jamieson உள்ள இருக்க, வீசுன முதல் ballல இருந்தே runs நல்ல வேகமா வர்ற ஆரம்பிச்சுது. நேத்து போலவே, இன்னிக்கும் West Indies team நெறய catches drop பன்றாங்க. Batsmanகளுக்கு angle create பண்ணி உள்ள கொண்டு வந்தது, Jamieson மற்றும் Southeeயோட wicketடுகள காவு வாங்குச்சு, 359/8னு ஒரு நெலமைல இருக்காங்க நியூஸிலாந்து. 

இங்க இருந்து, 370குள்ள நியூஸிலாந்து teamமையே நாம சுருட்டிட்டோம்னா, நமக்கு battingல ஒரு பெரிய positivity கிடைக்கும்னு நெனச்சாங்க. கட்டுன கனவு கோட்டை எல்லாத்தையும் இடிச்சு தள்ள வேண்டிய நெலமை வந்துச்சு. Neil Wagner battingகு வர்ற முதல் ballல இருந்தே அதிரடியா ஆட ஆரம்பிச்சுட்டாரு.

ஒரு bowlerர dismiss பண்ணனும்னா yorker deliveries வீசுனாலே அவுட் ஆகிட்டு போய்டுவாங்க. Typical Batsmanனுக்கு பயம் தர்ற மாதிரி, line deliveries bowl பண்ணிட்டு இருந்தாங்க. இவரு சுத்துன சுத்துக்கு, நாலா பக்கமும் ball எல்லாம் பறக்குது. இதுல ஏகப்பட்ட முறை short ball போட்டாங்க. அவரும் சளிக்காம hook மற்றும் pull shots எல்லாம் ஆடுனாரு. 

Test Cricketல Neil Wagner, தன்னோட முதல் fiftyய பூர்த்தி செய்யுறாரு. அவரோட ஆட்டம், முதல் sessionல 100க்கும் மேல runs குவிக்க உதவியா இருந்துச்சு. இவரோட அதிரடி ஆட்டம், நியூஸிலாந்து அணியை 460ங்கிற ஒரு நல்ல scoreருக்கு கொண்டு போயி சேர்த்துச்சு.  

West Indies team battingகு வர்றாங்க. எப்போ எல்லாம் conditions tough'அ இருக்குதோ, எப்போ எல்லாம் நெனச்ச அளவுக்கு batting easyயா இல்லையோ, அங்கேயெல்லாம் இவங்களே விட்டுக்கொடுத்துட்டு போகுறத நம்மளால பார்க்க முடியும். முதல் டெஸ்ட் match மாதிரியே, இங்கயும் சொதப்பல் தான் நடக்குது.

Jamieson ரெண்டு பக்கமும் swing பண்ணுறாரு. Fuller lengthல pitch பண்ணி உள்ள வெளிய னு batsmanகள கொழப்பிட்டே இருந்தாரு. அதுல, தப்பு செஞ்சு batsmanகள் எல்லாரும் அவுட் ஆகுறாங்க. அதுவும், Jamieson உள்ள வந்து வீசுன முதல் ஓவர் நடந்த drama'லாம், வேற ரகத்துல இருந்துச்சு.

மறுபடியும் Blackwood தான், காவல் தெய்வமா உள்ள வந்து விளையாடுறாரு. இவர் ஆடுற gameம ஏன் மத்தவங்க யாரும் விளையாட மாற்றாங்க 'ன்னு கேள்வி அடிக்கடி மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. இந்த வருஷம் நடந்த West Indies vs England seriesலயும் சரி, இந்த New Zealand vs West Indies seriesலயும் சரி, இவரை தவிர்த்து வேற யாரும் சொல்லிக்குற அளவுக்கு போராட மாற்றாங்க. 

Test matchங்கிறது இருக்குறதுலயே ரொம்ப drain செய்யுற ஒரு format. என்னதான் நீங்க முழுசா நல்லா விளையாடுனாலும், ஏதாவது ஒரே ஒரு sessionல சொதப்புனா, அந்த match'ஓட தலையெழுத்தே மாறி போயிடும். போராடினா தான் ஜெயிக்க முடியும். இன்னிக்கி நாள் முடியும்போது, West Indies team 124/8ங்கிற ஒரு நிலைமையில இருந்தாங்க !!

   

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt