NZ vs PAK - இரண்டாம் Test, முதல் நாள் Review
முதல் டெஸ்ட் match'அ ரொம்பவே easyயா ஜெயிச்ச நியூஸிலாந்து, இப்போ ரெண்டாவது test match'அயும் ஜெயிச்சு, June மாசத்துல நடக்கப்போற ICC World Test Championship Finalகு qualify'ஆகுற chances'அ increase பண்ண பாப்பாங்க. அதே நேரத்துல பாகிஸ்தானுக்கு எப்படியாவது இந்த match'அ ஜெயிச்சு, தங்களோட மானத்தை காப்பாத்த பாப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு test matchல, முதல் நாள் என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாப்போம்.
நியூஸிலாந்து teamம பொறுத்த வரைக்கும், இப்போ தொட்டதெல்லாம் தங்கமா மாறிட்டு வருது. கடைசி 4 வருஷத்துல, ஒரு வாட்டி கூட, home test series தோத்தது கெடயாது. அதுவும், பாகிஸ்தானுக்கு எதிர்க்க விளையாடுன கடைசி 3 test series வெற்றி தான். இதுக்கு நடுல, cricket வரலாற்றுலயே, முதல் முறையா test cricketல number 1 ranking அடைஞ்சிருக்காங்க. இங்க இருந்து, ICC World Test Champioshipபோட finalகு qualify ஆகுறது லாம் ஒரு matterரே இல்ல.
இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், Christchurchல இருக்குற Hagley Oval groundல match நடக்குது. பச்சைபசேலுன்னு இருக்குற pitch'அ பாத்த உடனே எந்த captainனா இருந்தாலும், அவங்க மனசுல தோணுற ஒரே விஷயம், toss ஜெயிச்சா நிச்சயமா bowling தான் எடுக்கணும். அதே மாதிரி Kane Williamsonனும் toss ஜெயிச்ச உடனே, அவரு எடுக்குற decision, "Obviously, we bowl"னு தான்.
பாகிஸ்தானுக்கு ஆரம்பத்துலயே சறுக்கல் தான். அதுக்கு காரணம், வழக்கம் போல Southee, தன்னோட late movement வெச்சு ஏற்படுத்தின தொடக்கம் தான். Shan Masoodதுக்கு ஒரு over முழுக்க late out swingers bowl பண்ணி, அதுக்கு அடுத்த ஓவர்'ல directடா காலுக்கு ஒரு inswinger போட்டாரு. அந்த ballல விட்டவர் தான், ballலோட சேர்த்து தன்னோட wicketடையும் விட்டுட்டு போயிட்டாரு.
அதுக்கு அடுத்து Abid Aliயும் Azhar Aliயும் சேர்ந்து கொஞ்சம் நேரம் தாக்கு புடிக்குறாங்க. அவங்களோட அற்புதமான partnershipப கொஞ்சம் நேரத்துலயே காலி பண்ணுறாரு, Kyle Jamieson. வெளில போட்டா அடிச்சிகிட்டே இருந்த Abid Aliக்கு கொஞ்சம் உள்ள கொண்டு வந்தாரு Jamieson. Violent Inswing. ஒன்னும் பண்ண முடியாம வெளியேறுனாரு.
இவரோட சேர்த்து bonus'அ Haris Sohailலயும், போன test matchல century அடிச்ச Fawad Alamமையும் slipல set பண்ணி தூக்குனாரு, Kyle Jamieson. இவரோட bowling, New Zealand teamம முதல் session dominate பண்ண வெச்சுது. ஆனா, பாக்கிஸ்தான் ஒன்னும் சளச்சவங்க கெடயாது. அவங்களோட பலமே lower order batting தான்.
England vs Pakistan series எடுத்துக்கிட்டாலும் சரி, இந்த test series எடுத்துக்கிட்டாலும் சரி, பாகிஸ்தானோட பலம், அவங்களோட போராடுற குணம். இங்கயும் போராடுறாங்க. அதுவும் Resistant Rizwan, மறுபடியும் ஒரு முறை compete பண்ணுறாரு. ஒரு பக்கம் Azhar Ali, தேவையில்லாத risk எதுவும் எடுக்காம, தன்னோட on drives மட்டும் straight drives மட்டும் நம்பி ஆடுறாரு. மீதி எல்லாத்தையும் defend பண்ணுறாரு.
அதே நேரத்துல இன்னொரு பக்கம், Rizwan defensiveவா ஆடுனா wickets தான் இழக்க வேண்டி வரும்னு, கொஞ்சம் aggressiveவா ஆடுறாரு. ஏகப்பட்ட chances எடுக்குறாரு. Ballலும் பழசாகுது. 83/4ல இருந்து 171/5னு போராடி கொண்டு வந்துட்டாங்க. இதுல பாகிஸ்தானுக்கு சந்தோசமான விஷயம், Rizwanனோட batting form தான். இந்த innings'அயும் சேர்த்து, கடைசி 5 inningsல அஞ்சு fifties அடிச்சிருக்காரு. இந்த ஆட்டம் தொடருற வரைக்கும், பாகிஸ்தானுக்கு battingல பிரச்சனையே வராது.
ஆனா சோகம், அசார் அலி, தன்னோட centuryய வெறும் 7 runsல miss பண்ணுறாரு. அவரு அவுட் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சம் நேரத்துலயே Rizwanனும் 61 runsகு out ஆகுறாரு. ஆனா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பாகிஸ்தானோட lower order ரொம்ப strong. இவங்க out ஆனா என்னனு, Faheem Ashraf மறுபடியும் ஒரு அதிரடி ஆட்டம் ஆடுறாரு. Rizwan தன்னோட battingல என்ன செஞ்சாரோ அதையே தான் இவரும் செய்யுறாரு.
இவரு கூட debutantடான Zafar Gohar, ரொம்ப அழகா bat பண்ணாரு. Faheem Ashraf கிட்ட இருந்து 44 runs மட்டும் Zafar Gohar கிட்ட இருந்து 34 runs, பாகிஸ்தானை 297ன்னு ஒரு fighting scoreருக்கு கொண்டு போயி நிறுத்திச்சு. நியூஸிலாந்துக்கு ஒரு கட்டத்துல எப்போடா new ball வரும்ன்னு காத்திருந்து, கடைசில 80th overல new ball வந்துச்சு. New ball வந்ததுக்கு அப்புறம் மொத்தமா பொட்டலம் தான். Kyle Jamieson, தன்னோட மூணாவது five wicket haul claim பண்ணுறாரு. இந்த வருஷத்தோட find, இவர் தான்.
Pakistanன பொறுத்த வரைக்கும் என்ன தான் old ballல ரொம்பவே நல்லா use பண்ணாலும், new ballல கொஞ்சம் தடுமாறுறாங்க. அது அவங்களோட minus'அ அமைஞ்சிருக்கு. இந்த ஒரு விஷயம், கூடவே top orderல இருந்து ஒரு decent contribution கெடச்சா, உலகத்துல எந்த ஒரு countryக்கு போனாலும், dominate பண்ண முடியும் ( battingல சொல்றேன் ).
Comments
Post a Comment