NZ vs WI - முதல் Test, மூன்றாம் நாள்

இன்னிக்கி day'ய பொறுத்த வரைக்கும், நேத்து நான் பாராட்டுனா West Indies, செமயா சொதப்புறாங்க. New Zealandட பொறுத்த வரைக்கும், ஒரு நல்ல pace track கெடச்சிட்டா அதை எப்படி பயன்படுத்தணும்னு, மறுபடியும் மறுபடியும் காமிச்சிட்டு இருக்காங்க. இப்போ New Zealand ஜெயிக்கிற நிலைமையில இருந்துட்டு இருக்காங்க. என்ன நடந்துச்சு, எப்படி நடந்துச்சுன்னு இந்த review showல நாம பார்க்கலாம். 

நேத்து நாள் முடியும்போது, 26 overs முடிவுல West Indies, 49/0னு இருந்தாங்க. ஆஹா, நல்லா விளையாடுறாங்களே, இன்னிக்கி நிச்சயமா ஏதாவது பெரிய score அடிக்க போறாங்கன்னு எதிர்பார்த்தா, எல்லா ஆசைலயும் acidட ஊத்துறாங்க. இந்த 3வது நாள்'ல பொறுத்த வரைக்கும், வானம் மேகமூட்டமா தான் இருந்துச்சு, அப்பப்போ மழையும் பேஞ்சுது. இந்த ஒரு conditionsல, அதுவும் பச்சை பசேலுன்னு வயல் வெளிக்கு நடுல groundட கட்டி, அதுல இருக்குற pitchலயும் பச்சை பசேலுன்னு இருந்தா, எந்த ஒரு fast bowlerருக்கும், ஒரு வரம் !. 

அந்த வரத்தை, New Zealand மாதிரி ஒரு team சும்மா விடுவாங்களா ? வெச்சு செஞ்சாங்க. West Indies teamம, ஒன்றரை sessionகுள்ள காலி பண்றாங்க. நேத்து, wicketடே இழக்காத West Indies, இன்னிக்கி நாள் முடியுறதுக்குள்ள, 1st innings all out ஆகி, 2nd inningsல 6 wickets இழந்து இருக்காங்க. மொத்தமா 15 wickets விட்டு இருந்தாங்க. 

Wagner, Southee, Boult மற்றும் Jamieson, சேர்ந்து ரெண்டு பக்கமும் swing பண்ணாங்க. இவங்க நாலு பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்லுற மாதிரி, சரமாரியா செஞ்சுட்டு இருந்தாங்க. இதுல, Southeeக்கு பார்த்தோம்னா, actual swing இல்லாம late swing இருந்துச்சு. Pitch ஆனதுக்கு அப்புறம் airல deviate ஆச்சு. இந்த deviation காரணமா, 4 விக்கெட்டுகளை கழட்டி எடுக்குறாரு. Wagner'ஓட short ballsலாம் தீயா இருந்துச்சு. 138/9னு ரொம்ப சின்ன score அடிக்கிறாங்க.

திரும்ப follow onக்கு கூப்புட்றாங்க. இந்த முறை, ஆரம்பத்துலயே வேற மாதிரி collapse நடக்குது. Seam movementட்ட தாண்டி, Pitchச அடிச்சு ஏத்த ஆரம்பிக்குறாங்க. அந்த ஒரு strategyயும் நல்ல பலன் தருது. இந்த மாதிரி, இன்னிக்கி முக்கால்வாசி நாள் வரைக்கும் bowlers என்ன நினைக்குறாங்களோ, அந்த மாதிரி தான் வேலை செஞ்சுது. 

அப்போ, மீதி கால்வாசி ? மீதி நேரத்தை காப்பாத்துனது Jermaine Blackwood மற்றும் Alzarri Joseph. இந்த மாதிரி ஒரு tough conditionsல proper cricketing shots'ஓட Blackwood play பண்ணுறாரு. இன்னொரு பக்கம் Joseph கொஞ்சம் அடிச்சு ஆடுறாரு. Blackwood ஆடுன drive shots அப்புறம் mid-off மற்றும் mid-on தலைக்கு மேல அடிக்கிற lofted shots எல்லாம், பக்காவா இருந்துச்சு. 

இந்த வருஷத்தோட நடுவுல Englandகு againstடா இவர் விளையாடும்போது, அங்க ரொம்பவே tough conditions அமையும். அந்த tough conditionsகு நடுல, இவரு நல்லா ஆடுவார். அதுக்கு அவரோட numbersஏ ஒரு பெரிய அத்தாட்சியா அமைஞ்சிருக்கு. 

          

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?