NZ vs PAK - முதல் Test, மூன்றாம் நாள் Review

நேத்து நாள்ல தாண்டிட்டோம்னா, பாகிஸ்தானுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இருக்குனு நான் எழுதியிருந்தேன். அந்த ஒரு விஷயம், ஓரளவுக்கு தான் உண்மையா அமைஞ்சுது. காரணம், இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, நிறைய சொதப்பல்ல சந்திக்குது பாக்கிஸ்தான். இருந்தாலும், அவங்ககிட்ட இருந்து எல்லா teamமும் கத்துக்க வேண்டிய ஒரு விஷயம், சூழ்நிலை நமக்கு சாதகமா இல்லைனாலும், போராடுற அந்த ஒரு குணம். அந்த ஒரு விஷயத்தை எப்போவும் சரியா செஞ்சுட்டு வர்றாங்க பாக்கிஸ்தான். இன்னிக்கி நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review postல நாம பார்க்கலாம். 

நேத்து 20 overs விளையாடி 30/1ன்னு ஒரு நிலைமையில முடிக்குறாங்க பாக்கிஸ்தான். இன்னிக்கி பொறுத்த வரைக்கும் பார்த்தோம்னா, முஹம்மத் அப்பாஸ் ரொம்ப அழகா patience காமிச்சாரு. அவரோட ஒவ்வொரு block'உம் பக்காவா இருந்துச்சு. Runs வரல, but ஒரு night watchman கிட்ட இருந்த்து இந்த ஒரு defense ரொம்பவே தேவையானது. 55 ballsகு 5 runs எடுக்குறாரு.

இங்க பாக்கிஸ்தான் மாட்டிக்கிட்ட ஒரு விஷயம், foot work error. New Zealand bowlers எல்லாரும் short balls போட்டு போட்டு target பண்ணிட்டு இருந்தாங்க. முக்கியமா, Jamieson !. அவரோட heightட correct'ஆ use பண்ணி, திரும்ப திரும்ப tension கொடுத்துட்டு இருந்தாரு. இதுல மாட்டிக்கிட்ட பாக்கிஸ்தான், ஒரு சமயத்துல 52/5னு ரொம்ப மோசமான நெலமைல தவிக்குறாங்க. அங்க இருந்து 80/6.

பாக்கிஸ்தான் மீளவே மாட்டாங்களான்னு எல்லாரும் ஏங்கிட்டு இருக்கும்போது, மறுபடியும் காப்பாளரா வராரு, முஹம்மத் ரிஸ்வான். இந்த முறை, Captainனா நின்னு போராடுறாரு. அவருக்கு துணையா support பண்ண Faheem Ashraf, ஒரு கட்டத்துக்கு மேல, அவரோட வேலையவே தூக்கி சாப்புட்ற அளவுக்கு சம்பவம் பண்ணுறாரு.

ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், போக போக wicket கொஞ்சம் ease out ஆகா ஆரம்பிச்சுது. கூடவே, ballலும் பழசாகிடுச்சு. புது ball வர்றதுக்கு 20 overs இருந்த, அந்த ஒரு period'அ பக்காவா பயன்படுத்தி, அடிச்சு ஆட ஆரம்பிச்சாங்க. Englandல எந்த மாதிரி ஒரு fighting innings ஆடுனாரோ, அங்க இருந்து இங்க வரைக்கும் Mohammad Rizwan தனித்துவமான நின்னு போராடுறாரு. 

இது காரணமா, 80/6ல இருந்து 239ன்னு ஒரு நல்ல fighting score அடிக்கிறாங்க. Follow On avoid பன்றாங்க. Faheem Ashraf 91 அடிச்சு காட்டுறாரு. இவரு அடிச்ச ஒவ்வொரு pull shotடும், top orderல ஆட தவறுன்னு எல்லா batsmanனுக்கும் ஒரு reference காமிச்சா மாதிரி இருந்துச்சு. இருந்தும், NZ ஒரு நல்ல lead எடுக்குறாங்க.

பாக்கிஸ்தான் all out ஆனதோட, இன்னிக்கி நாள் முடிஞ்சுது. ஆனா, இதுக்குள்ள இன்னொரு விஷயமும் நடந்துச்சு. ஒரு பக்கம், NO.1 Batsman'ஆன Steve Smith, ரொம்பவே மோசமான formல single digitல அவுட் ஆகிட்டு வர்றாரு. இன்னொரு பக்கம் Kane Williamson, வேற லெவல் ஆட்டம். 

இந்த ரெண்டு விஷயமும் ஒரே சமயத்துல நடந்தது காரணமா, இப்போ Kane Williamson, test cricketடோட Number.1 batsmanனா rankingsல மேல போகுறாரு. இந்த இடத்தை எத்தனை நாள் maintain பண்ணுறாருன்னு நாம wait பண்ணி பாப்போம். 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?