World Test Championship செய்திகள் - 2020/21

 தற்போது, 2019-21வரையுள்ள World Test Championship போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதனைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முதலில், World Test Championship என்றால் என்ன ? என்பதை பார்த்துவிட்டு பின்னர், அந்த செய்தி யாது, அதனால் எந்த சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பலன் என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம். 

World Test Championship என்றால் என்ன ?

சமீபகாலத்தில், ICCயால் கொண்டுவரப்பட்ட ஓர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரே, World Test Championship ஆகும். 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பையை போன்று, இது டெஸ்ட் கிரிக்கெட் உலகக்கோப்பை என்றே கூறலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை எவ்வாறு நடத்த இயலும் ? ஒரு போட்டி நடைபெறுவதற்கே 5 நாட்கள் ஆகுமே என கேள்விகளை எழுப்பினால், அதற்காக தான் இத்தொடரை 2 ஆண்டு காலத்திற்கு அமைத்துள்ளார்கள். 2019ம் ஆண்டின் இடையிலிருந்து 2021ம் ஆண்டு இடைக்காலம் வரை விளையாடப்படும், அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கு points அமைத்து, பட்டியலிடுவர். இக்காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து வகை டெஸ்ட் போட்டிகளையுமே சேரும். அதில், முதல் 2 அணிகளாக பட்டியலில் இடம்பெறும் நாடுகளே, Lords மைதானத்தில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம், இறுதிப்போட்டியில் எதிர்கொள்வர். அதில் வெற்றிபெறுவோர் கோப்பையை கைப்பற்றுவர். 

ஒவ்வொரு தொடரும், வேறு வெறும் வகையில் அமையும். சிலது 5 போட்டிகளை கொண்டதாய் இருந்தாலும், சிலவற்றை 2 அல்லது 3 போட்டிகளை கொண்டதாக அமையும். பிறகு எப்படி, சமத்துவமாக pointsகளை வழங்குவர் ?. ஒவ்வொரு தொடரும் 120 புள்ளிகளை மொத்தமாக சுமக்கிறது. 2 போட்டிகளை கொண்ட தொடரில் மோதிக்கொண்டால், அதில் ஜெயிக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் 60 புள்ளிகள் வழங்கப்படும். தோல்விக்கும் எந்த ஒரு புள்ளியும் வழங்கப்படாது. Tie என்கிற தீர்வு கண்டால், இரு அணியினருக்கும் சமமாக 30 புள்ளிகள் வழங்கப்படும், அதுவே Drawவில் முடிவடைந்தால், ஒவ்வொரு அணிக்கும் 20 புள்ளிகள் வழங்கப்படும். இதுவே, 3 போட்டிகளை கொண்டதாக அமைந்தால், வெற்றிக்கு 40 புள்ளிகளும், Tieக்கு 20 புள்ளிகளும், drawவிற்கு 13 புள்ளிகளும் வழங்கப்படும். 4 போட்டிகளை கொண்டதாக அமைந்தால், வெற்றிக்கு 30ம், Tieக்கு 15 புள்ளிகளும், Drawவிற்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும். இறுதியாக, 5 போட்டிகளை கொண்ட தொடராக அமைந்தால், அதில் வெற்றிக்கு 24 புள்ளிகளும், Tieக்கு 12 புள்ளிகளும், Drawவிற்கு 8 புள்ளிகளும் வழங்கப்படும். Tie மற்றும் Draw எனும் தீர்வுக்கு, இரு அணியினருக்கும் மேற்கண்டவாறு கூறிய புள்ளிகளை வழங்குவர். 

சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்தியாதனில், சமீப காலகட்டத்தில் கொரோனா நோயின் பாதிப்பு காரணத்தால், பல போட்டிகள் தடைபட்டுள்ளது. இவ்வாறு தடைபட்ட போட்டிகளையும் கருத்தில்கொள்வர் என முன்பாக வெளிவந்தது. ஆனால், இப்போது கூறிய செய்தி யாதெனில், தடைபட்ட போட்டிகளை நாங்கள் கருத்தில் ஏற்கமாட்டோம் என்று. அப்போது, எப்படி தலைசிறந்த 2 அணிகளை தேர்வு செய்வார்கள் என உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். இருக்கின்ற குறுகிய காலத்தில், இத்தொடரை நடத்தி முடிப்பதற்கு ஒரே வழி, அணிகளை வெற்றியின் சதவீதத்தில் தேர்வு செய்வதே. தற்போது, ஒவ்வொரு அணிகளும் பங்குபெற்ற தொடர்களின் எண்ணிக்கை, சற்று மாறாக அமைந்திருக்கும். இதில், நெருக்கடியான அட்டவணையின் நடுவே, தடைபட்ட போட்டிகளை நடத்த செய்வது, சாத்தியமற்ற காரியமாகும். ஆதலால், அவ்வாறு தடைபட்ட போட்டிகளை கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொரு அணிக்கும் உள்ள வெற்றி சதவீதத்தின் அடிப்படையில், அணிகளை பட்டியலில் அமைக்கவேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த எண்ணத்தில் நாம் சிந்தித்தால், New Zealand அணிக்கு, வாய்ப்புகள் மின்னுகிறது. அவர்கள் இதற்கு மேல், 2 தொடர்களை, தங்கள் சொந்த மண்ணில் விளையாடவுள்ளார்கள். சமீபத்தில், சொந்த மண்ணில், அவர்கள் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் நல்ல சதவீதம் வைத்துள்ளார்கள். எதிர்கொள்ளும் அணிகளோ, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பாக்கிஸ்தான். ஒரு போட்டியையும் விடாமல் வெற்றிபெற்றால் 70 % வெற்றி சதவீதத்தில் முன்னிலை பெறுவர்.

அதை மிஞ்சுவதற்கு இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியா தொடரில் விளையாடவுள்ள 4 போட்டிகளில் 3ஐ வென்றுவிடவேண்டும். கூடுதலாக, இந்திய நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள தொடரில், 5 போட்டிகளையும் வெற்றிபெற்றால் தான், நியூஸிலாந்து அணிக்கு பலத்த போட்டியை வழங்க இயலும். ஆனால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், தற்போது மீண்டெழுவது கடினமாகும். 


ஆஸ்திரேலியா அணிக்கு, இந்தியாவை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் வென்றால், அவர்களின் சதவீதம் அதிகரிக்கும். ஆனால், தென் ஆஃப்ரிக்கா டெஸ்ட் தொடரில், 2ஐயும் தோல்வியடைந்தால், சதவீதம் குறைய வாய்ப்புகள் உள்ளது. எனவே, நியூஸிலாந்து அணிக்கு, லட்டுவைப்போன்று ஓர் வாய்ப்பு. பிடித்துக்கொள்வது அவர்களின் சாமர்த்தியம்.     

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt